மீண்டும் கடத்தப்பட்ட துளசி.. தேர்தலில் கிடைத்த வெற்றி.. கெட்டி மேளம்!

சென்னை: கெட்டி மேளம் சீரியலில் மீனாட்சி ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும் ரூமுக்குள் நுழைந்து பெட்டிகளை எடுக்க திட்டமிட அப்போது வெற்றி அங்கு வந்து விடுகிறான். உள்ளே சத்தம் கேட்டு கதவை திறக்க சொல்ல மீனாட்சி அவர்களிடமிருந்து தப்பிக்க பெட்டிகள் இருக்கும் இடத்தை வைத்து கொளுத்தி விட்டு எஸ்கேப் ஆகிறாள். அப்போது வெற்றி அங்கு நின்று கொண்டிருந்த கார் ஒன்றை கவனிக்கிறான். பிறகு காரை தேடி அலைய இன்னொரு இடத்தில் கார் இருப்பதை பார்த்து அதே கார் என்பதை உறுதி செய்கிறான்.

கெட்டி மேளம்: துளசியை வெற்றி காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. பின் வெற்றி, வாக்க பெட்டி அந்த வண்டியில் தான் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க போகம் நேரத்தில் மீனாட்சியின் ஆட்கள் துளசியை மீண்டும் கடத்துகின்றனர். துளசியை கடத்தப்படுவதை பார்த்த அஞ்சலி துளசியை தேடுகிறாள். துளசியை கடத்தியவர்கள் மரம் வெட்டும் இயந்திரத்தில் துளசியை கட்டி வைத்து துண்டு துண்டாக வெட்டுவதற்காக அந்த இயந்திரத்தில் கட்டுகின்றனர். அந்த சமயத்தில் அஞ்சலி அங்கு வந்து துளசியை காப்பாற்ற முயற்சி செய்ய ரவுடிகள் அஞ்சலியையும் சேர்த்து தாக்குகின்றனர்.

Getti melam promo
Photo Credit:

வெற்றி பெற்ற துளசி: இருவரும் ரவுடிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்க, அஞ்சலி அவசரமாக ஓடிவந்ததை பார்த்த மகேஷ் ரவுடிகளை அடித்துவிட்டு இருவரையும் காப்பாற்றி விடுகிறார். அதைத்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அஞ்சலி, துளசி இருவரும் வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கையின் இறுதியில் துளசி 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக அறிவிக்கப்படுகிறார். இதைக்கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால், மீனாட்சி தரப்பு அதிர்ச்சி அடைகிறார்கள். அதைத்தொடர்ந்து வெற்றி, எம்.எல்.ஏ துளசிக்கு வாழ்த்துக்கள் இந்த ஊர் மக்களுக்கு நீங்கள் நிச்சயம் நல்லது செய்ய வேண்டுமென சொல்ல, துளசி வாக்கு அளித்த அனைவருக்கும் நன்றி சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X