கையெழுத்தால் ஏமாந்த அஞ்சலி.. கொதித்தெழுந்த சத்யா..வசுந்தராவுக்கு அஞ்சலி சவால்.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலின் அஞ்சலி மற்றும் சிவராமன் இணைந்து தயாரித்திருந்த புதிய இன்ஜினை வைத்து ஒரு புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறார்கள். அதற்காக முதலீட்டாளரை தேடி அஞ்சலி பல இடங்களில் அலைந்து திரிகிறாள். ஆனால், சரியான முதலீட்டாளர்கள் கிடைக்காததால் வருத்தத்தோடு இருக்க, அந்த நேரத்தில் வசுந்த்ரா வீட்டிற்கு வந்து நான் உங்களுக்கு உதவுவதாக சொல்கிறார். இதை நம்பிய அஞ்சலி வசுந்தரா காட்டிய பைல் அனைத்திலும் படித்து பார்க்காமல் கையெழுத்த போடுகிறார்.
கெட்டி மேளம்: இதை அடுத்து புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கிறது. அந்த சந்திப்பில் வசுந்தரா, அஞ்சலி தான் இந்த ஸ்கூட்டரை உருவாக்கினார் என சொல்வார் என நினைத்திருந்த நிலையில், வசுந்தரா இந்த புதிய ஸ்கூட்டரை எங்கள் நிறுவனம் தான் உருவாக்கியது என்று புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைக்கிறாள். இதைப்பார்த்து அஞ்சலி அதிர்ச்சி அடைந்து, வசுந்தராவை தனியாக அழைத்துப் பேச, இது என் கம்பேனி தயாரித்த இஞ்சின் நீ அதில் வேலை பார்த்தா, அதற்காக உனக்கு 10% மட்டுமே கமிஷன் கிடைக்கும் மற்றபடி இந்த புதிய ரக ஸ்கூட்டரை உருவாக்கியது எங்களுடைய கம்பெனிதான் என டாக்குமெண்டை எடுத்துக்காட்டுகிறார். அதில் அஞ்சலியை ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருப்பது தெரிந்து அஞ்சலி வருத்தப்படுகிறாள்.

கடும் கோபத்தில் சத்யா: மறுநாள் காலை வசுந்தரா வீட்டிற்கு வர, சத்யா கடும் கோபத்தில் பேசுகிறார். ஒரு பர்சன்டேஜ் கூட அதில் உங்களுடைய உழைப்பு இல்லை. அடுத்தவர்களின் உழைப்பை திருடி அதை உங்களுடைய சாதனை போல எப்படி சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார். உடனே சிவராமனும், இப்படிப்பட்டவர்களுக்கு அடுத்தவர்களின் உழைப்பை அபகரிப்பது பழக்கமாகி விட்டது. இனிமேல் ஒரு நிமிடம் கூட எங்கள் வீட்டில் இருக்க வேண்டாம். வெளியே போ என சொல்கிறார்.
அறிவை திருட முடியாது: இதையடுத்து பேசிய அஞ்சலி, உன்னால் இந்த இன்ஜினை மட்டும் தான் திருட முடியும். ஆனால் என் திறமையை திருட முடியாது. இந்த இன்ஜின் இல்லையென்றாலும் இதைவிட சிறந்த இன்ஜினை உருவாக்கும் திறமை எனக்கு இருக்கிறது. பணத்தால் எல்லாவற்றையும் வாங்கலாம் என்று நினைக்காதீங்க. என்னையும் என்னுடைய அறிவையும் வாங்க முடியாது. விரைவில் உன்னுடைய உண்மையான முகத்தை இந்த உலகத்துக்கு காட்டுவேன் என்று சவால் விடுகிறாள் அஞ்சலி. இப்படி அதிரடியான காட்சியுடன் இந்த எபிசோடு முடிவடைந்துள்ளது. அடுத்ததாக அஞ்சலி தனது புதிய முயற்சியில் வெற்றி பெறுவாரா, வசந்த்ராவின் உண்மை வெளிச்சத்துக்கு வருமா என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications