அஞ்சலியின் திறமைக்கு கிடைத்த நீதி... வசுந்தரா தேவிக்கு ஏற்பட்ட அவமானம்!
சென்னை: இன்ஜினை கண்டுபிடித்தது நான் தான் என வசுந்தரா சொல்லியதால் மனமுடைந்த அஞ்சலி. வசுந்தராவிடம், இன்ஜினை என் திறமையை திருட முடியாது. இந்த இன்ஜின் இல்லையென்றாலும் இதைவிட சிறந்த இன்ஜினை உருவாக்கும் திறமை எனக்கு இருக்கிறது. பணத்தால் எல்லாவற்றையும் வாங்கலாம் என்று நினைக்காதீங்க. என்னையும் என்னுடைய அறிவையும் வாங்க முடியாது. விரைவில் உன்னுடைய உண்மையான முகத்தை இந்த உலகத்துக்கு காட்டுவேன் என்று சவால் விடுகிறாள் அஞ்சலி.
கெட்டி மேளம்: மறுநாள் காலை, வசுந்தரா தேவி இன்ஜினை கண்டுபிடித்தார் என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகிறது. அந்த செய்தியை பார்த்த மகேஷ் கடும் அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் இருக்கிறார். என்னுடைய மாமனாரும் என் மனைவியும் கண்டுபிடித்த விஷயத்தை இவள் தன்னுடைய சாதனையாக காட்டிக்கொள்கிறாளே என்று வருத்தப்படுகிறார். அதன்பிறகு மகேஷ், தனது வழக்கறிஞர்களை வசுந்தரா தேவியின் வீட்டிற்கு அனுப்புகிறார். அவர்கள் வசுந்தரா தேவியிடம், இந்த இன்ஜினை உண்மையில் கண்டுபிடித்தது அஞ்சலிதான். ஆனால் நீங்கள் அவரை ஏமாற்றி போலியாக கையெழுத்து வாங்கியிருக்கிறீர்கள். உடனே உண்மையை வெளியில் சொல்ல வேண்டும் என எச்சரிக்கின்றனர். ஆனால், வசுந்தரா தேவி அதற்கு பயப்படாமல், அஞ்சலி கையெழுத்திட்ட டாக்குமெண்ட் என்னிடம் இருக்கிறது. நான் சட்டப்படி இதை சமாளித்துக் கொள்கிறேன்.

வசுந்தரா தேவி: இதையடுத்து மகேஷ் வேறு ஒரு திட்டம் போட்டு,வசுந்தரா தேவியின் வீட்டிற்குச் சென்று, அதிகாரி போல நாடகம் ஆடுகிறார். அப்போது வீட்டிலிருந்த பணமும் நகைகளும் பற்றிய விஷயங்கள் மகேஷ்க்கு தெரிய வருகிறது. அதை பயன்படுத்தி வசுந்தரா தேவியை மிரட்டுகிறார். உடனே அந்த டாக்குமெண்ட்டை எடுத்துக்கொண்டு அஞ்சலியின் வீட்டிற்கு சென்று, இந்த இன்ஜினை கண்டுபிடித்தது அஞ்சலிதான் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று மகேஷ் கடுமையாக மிரட்டுகிறான். இதனால், வேறு வழியில்லாமல் வசுந்தரா தேவி அஞ்சலியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே அஞ்சலியிடம் டாக்குமெண்ட்டை கொடுத்து, நான் பெரிய தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இந்த இன்ஜினை உண்மையில் கண்டுபிடித்தது நீதான் என்று உண்மையை ஒப்புக்கொள்கிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்


Click it and Unblock the Notifications