எங்களை மறந்துட்டீங்களா?.. கண்கலங்கிய லட்சுமி.. ரகசியமாக பேசிய சிவராமன்.. கெட்டி மேளம் !
சென்னை: அஞ்சலியை ஏமாற்றிய வசுந்தரா தேவியை மகேஷ் வேறு ஒரு திட்டம் போட்டு வீட்டிற்கு வந்து, வருமானவரித்துறை அதிகாரி போல நாடகம் ஆடுகிறார். அப்போது வீட்டிலிருந்த பணமும் நகைகளும் பற்றிய விஷயங்கள் மகேஷ்க்கு தெரிய வருகிறது. அதை பயன்படுத்தி வசுந்தரா தேவியை மிரட்டுகிறார். உடனே அந்த டாக்குமெண்ட்டை எடுத்துக்கொண்டு அஞ்சலியின் வீட்டிற்கு சென்று, இந்த இன்ஜினை கண்டுபிடித்தது அஞ்சலிதான் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று மகேஷ் கடுமையாக மிரட்டுகிறான். இதனால், வேறு வழியில்லாமல் வசுந்தரா தேவி அஞ்சலியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே அஞ்சலியிடம் டாக்குமெண்ட்டை கொடுத்து, நான் பெரிய தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இந்த இன்ஜினை உண்மையில் கண்டுபிடித்தது நீதான் என்று உண்மையை ஒப்புக்கொள்கிறார்.
இதையடுத்து,சொக்கலிங்கம் அஞ்சலியின் பிசினஸ்க்கு இன்வெஸ்ட் செய்வதாக சொல்கிறார். இதனால், அஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, அடுத்த நாள் இதற்கான திறப்பு விழா நடக்க இருக்க மகேஷ் தூரத்திலிருந்து இதைப் பார்த்து சந்தோஷப்பட இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருகிறான். ஆனால், மகேசை தூரத்தில் பார்த்த சொக்கலிங்கம் அவனை நிகழ்ச்சிக்கு உள்ளே அழைத்துச் செல்ல அஞ்சலி மகேசை பார்த்து கடுப்பாகிறாள். இவன் எதுக்கு இங்க வந்தான் இவன் இருந்தா இதை நிகழ்ச்சி நடக்கவே நடக்காது என சத்தம் போட மகேஷ் அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.

கெட்டிமேளம்: பிறகு நிகழ்ச்சி தொடக்க விழா ஆரம்பமாக லட்சுமி, நாம கஷ்டப்படும் நேரத்தில் எல்லாம் உங்க அப்பா நம்ம கூட இருந்தார். அப்போது நம்ம கஷ்டம் எல்லாம் சரியாகி நாம ஒரு நல்ல இடத்திற்கு வரபோகிறோம். ஆனால், இந்த நேரத்தில் அப்பா நம்ம கூட இல்லையே, உங்க அப்பா மட்டும் இந்த இடத்தில் இருந்து இருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாரு என சொல்லி வருத்தப்படுகிறாள். இதைக்கேட்டு அஞ்சலி, அம்மா வருத்தப்படாதீங்க கூடிய விரைவில் அப்பா நம்மளை தேடி வருவார் என சொல்லி சமாதானப்படுத்துகிறாள். இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த சண்முகம், லட்சுமி நான் தான் உன் கணவர் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் என மனதிற்குள் வருத்தப்படுகிறார்.
ரகசியமாக பேசிய சிவராமன்: 'லட்சுமி வருத்தப்படுவதை பார்த்த சிவராமன் வெளியே வந்து லட்சுமிக்கு ஃபோன் செய்து சிவராமன் பேசுகிறேன் நீ எப்படி இருக்க என்று பேச லட்சுமி கண்கலங்கி, ஏங்க எங்களை மறந்துட்டீங்களா என கேட்கிறாள். உடனே சிவராமன், இப்போ நிலைமை கொஞ்சம் சரியில்லை. சரியான நேரத்தில் நான் மீண்டும் வருவேன் என சொல்லிவிட்டு போனை வைக்கிறார். சிவராமன் பேசியதால் லட்சுமி சந்தோஷம் அடைகிறாள். தூரத்தில் இதைப் பார்த்த மகேஷ் இவர் எதுக்கு இங்க வந்து தனியா யார்கிட்டயும் பேசிட்டு இருக்காரு என்ன விஷயம் என குழப்பம் கொள்கின்றான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications