வீட்டை எழுதி வாங்கிய மீனாட்சி.. சூழ்ச்சியால் நடந்த விபரீதம்.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் இன்றைய எபிசோடில் தேர்தலில் தோற்றுப் போனதால் ஆத்திரத்தில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய வீட்டை மருமகள் மீனாட்சியின் மீது எழுதி வைத்துள்ளார். இந்த விஷயம் தெரிந்து அபிராமி, ஈஸ்வர மூர்த்தியை நிற்க வைத்து கேள்வி கேட்கிறாள். இரண்டு மகன்கள் குத்துக்களாக இருக்கும்போது, எதற்காக மருமகள் மீது இந்த வீட்டை எழுதி வைக்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது என ஈஸ்வரமூர்த்தியிடம் சண்டை போடுகிறாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த மீனாட்சி, அத்தை எனக்கு எந்த விஷயமும் தெரியாது, மாமா முக்கியமான வேலை என அழைத்து சென்றதால் நான் கூட சென்றேன். அங்கு போன பிறகுதான் வீட்டை என் பெயரில் எழுதி வைக்கும் விஷயமே எனக்கு தெரியும், நான் எவ்வளவோ சொல்லியும் மாமா கேட்கவில்லை, என் மீது பத்திரத்தை பதிவு செய்து விட்டார் என மீனாட்சி சொல்கிறாள்.

கெட்டி மேளம்: இதையடுத்து பேசிய துளசி, எனக்கு மீனாட்சி அக்கா மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் சொத்துக்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது. ஆனால், அங்கு போன பிறகு ரிஜிஸ்ட்ரேஷன் தான் நடக்கப் போகிறது என தெரிந்த பிறகு கூட ஏன் கையெழுத்து போட்டீங்க, கையெழுத்து போடாமல் வந்து இருக்கலாமே என கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து அபிராமி இது நம்ம வீடு, இதை எழுதிவைக்கும் போது என்னிடம் நீங்க கேட்டு இருக்க வேண்டும் என அபிராமி சொல்ல, இது நானாக சுயமாக சம்பாதித்த சொத்து அதை நான் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைப்பேன் என்கிறார்.
வீட்டை விட்டு வெளியேறினர்: இப்படி ஒருவருக்கு ஒருவர் வாக்கு வாதம் நடந்து அது பெரிய பிரச்சனையாகிவிட, ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றிவிடுகிறது. இதனால், அபிராமி இதற்கு மேல் இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன் என சொல்கிறாள். உடனே ஈஸ்வரமூர்த்தி இந்த வீட்டில் இருக்க விருப்பம் இல்லை என்றால், தாராளமாக வெளியே போகலாம் என சொல்லிவிட அபிராமி துளசி, வெற்றி, தியா என நான்கு பேரும் அந்த வீட்டை விட்டு வெளியே கிளம்பி அஞ்சலியில் வீட்டுக்கு வருகின்றனர். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்,


Click it and Unblock the Notifications