துளசி கர்ப்பமா? மகிழ்ச்சியில் வெற்றி.. கெட்டி மேளம் !
சென்னை: துளசி அஞ்சலியை டாக்டரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்கிறாள்.
அஞ்சலியை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை நல்லபடியாக இருப்பதாக சொல்கிறார். இந்த நேரத்தில் ஹாஸ்பிட்டலுக்கு வந்த மகேஷ், டாக்டர் ரூமுக்குள் நுழைய, துளசி, அஞ்சலி இருவரும் மறைந்து கொள்கின்றனர். மகேஷ் டாக்டரிடம் என் அஞ்சலியை செக் பண்ணிட்டு இருந்தீங்க.. என் அஞ்சலி கர்ப்பமா இருந்தா ஆனால், என்னால், கருசிதைந்துவிட்டது. உண்மையில் கருகலைந்துவிட்டதா என்று கேட்க, டாக்டரும் ஆமாம் என சொல்லி அனுப்புகிறார்.
பிறகு மகேஷ் அங்கிருந்து கிளம்ப அஞ்சலி டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு, இருவரும் டாக்டர் ரூமில் இருந்து வெளியே வர மகேஷ் எதையும் மறந்துவிட்டு அதை எடுப்பதற்காக திரும்ப வருகிறான். இருவரும், ஒன்றாக வருவதை பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்க, அப்போது, மகேஷ் சொன்னதை கேட்டு துளசி கர்ப்பமாக சொல்லி அஞ்சலி சமாளிக்கிறாள். இந்த விஷயத்தை வெற்றிடம் சொல்லி, அவன் சந்தோஷம் அடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கெட்டி மேளம்: துளசி மற்றும் அஞ்சலி இருவரும் வீட்டுக்கு வர வெற்றி பெரிய ஏற்பாட்டை செய்து வைத்திருக்க அதை பார்த்து குழப்பம் அடைகின்றனர். என்ன விஷயம் என்று கேட்க வெற்றி அதை நீங்க தான் சொல்லணும் என்று சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் மகேஷ் ஃபோன் செய்து ஒரு நல்ல விஷயத்தை சொன்னதாக சொல்கிறான். பிறகு அபிராமி உன்னால தன் என் குடும்பத்திற்கு முதல் வாரிசு வரப்போகுது என சந்தோஷத்தை வெளிப்படுத்த துளசி செய்வதறியாது நிற்கிறாள். இந்த சமயத்தில் மகேஷ் வீட்டுக்கு வந்து உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன கிப்ட் என கிப்ட் கொடுத்து இருவருக்கும் வாழ்த்துக்களை சொல்கிறான்.
துளசி கர்ப்பம்: மகேஷ் கிளம்பும் சமயத்தில் சிவராமன் வீட்டுக்குள் வர மகேஷை பார்த்து அவருக்கு பயம் உருவாகிறது. மகேஷ் அவரைப் பார்த்து உங்களோட பேச வேண்டியது நிறைய இருக்கு கூடிய சீக்கிரம் மீட் பண்ணலாம் என்று சொல்லி விட்டு கிளம்ப சிவராமன் குழப்பம் கொள்கிறார். பிறகு துளசிக்கு வாழ்த்து சொல்ல வெற்றி துளசியை ரூமுக்கு அழைத்துச் சென்று இந்த ஊரில் இருப்பவர்கள் அனைவரும், இவனுக்கு வேலை தான் இல்ல, கல்யாணம் ஆகி அப்பாவாக கூட முடியலனு என் காது படவே பேசி இருக்காங்க. ஆனா இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இந்த குழந்தையை எப்படி எல்லாம் வளர்க்க போறீங்க பாருங்க என உணர்ச்சி பொங்க பேசுகிறான்.


Click it and Unblock the Notifications