பிறந்தநாளே துயர நாளாகியது.. அஞ்சலியின் கரு கலைந்தது.. கெட்டி மேளம்!
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் அஞ்சலி லோன் விஷயமாக மேனேஜரை சந்திக்க அவர் கொலட்ரால் இல்லாமல் லோன் கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார். உங்க பிறந்தநாள் அதுவுமா எல்லாமே நல்லதா தான் நடக்கும் என்று சத்யா சொல்ல அஞ்சலி நான் ராசி இல்லாதவள் என வருத்தப்பட்டு பேசுகிறாள்.அதைத்தொடர்ந்து சத்யா பிறந்தநாள் புதுசா பிறந்திருக்கீங்கன்னு நினைச்சுக்கோங்க இனிமே எல்லாமே நல்லதாக நடக்கும் என்று சொல்கிறான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அஞ்சலி ராட்டிணத்தை பார்த்து அதில் ஏற ஆசைப்படுகிறாள். உடனே சத்யா ராட்டினம்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? என்று கேட்க, அஞ்சலி அப்பாவுடனான நினைவுகளை பகிர சத்யா அவளை ராட்டினத்தில் ஏற்றி விடுகிறான்.
அஞ்சலி சத்யாவையும் கூப்பிட அவன் உயரம் என்றால் பயம் என மறுக்க அதான் நான் இருக்கேன்ல என்று கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறாள். இருவரும் ராட்டிணத்தில் ஏறி சுற்ற விசில் அடித்ததும் ஜாலியாக இருக்கின்றனர். அப்போது சத்யா, உங்களுக்கும் மகேஷ்க்கும் என்ன தான் பிரச்சினை என்று கேட்க நடந்ததை சொல்கிறாள். மேலும் அப்பா ஆசைப்பட்ட மாதிரி வீடு கட்டணும் அவரை கேஸ்ல இருந்து வெளியே கொண்டு வந்து அப்பா அம்மாவை அந்த வீட்டில சந்தோஷமா வாழ வைக்கணும் என தனது ஆசையை சொல்கிறாள்.

கெட்டி மேளம்: இப்படி இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த மகேஷ், ஆத்திரத்தில் அடியாட்களை வைத்து சத்யாவை கொல்வதற்கு அடியாட்களை ஏவி விடுகிறான். அஞ்சலிக்கு எதுவும் ஆகாமல் அவனை கொல்ல வேண்டும் என உத்தரவிடுகிறான். இதையடுத்து, அடியாட்கள் சத்யாவை வழி மறித்து வேண்டுமென்ற சண்டை போடுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் சத்யாவின் கையை பிடித்துக்கொண்டு உருட்டு கட்டையால் மாறி மாறி அடிக்கின்றனர்.
அஞ்சலியின் கரு கலைந்தது: ஒரு கட்டத்தில் அஞ்சலி அவர்களை தடுக்க போக ஒரு ரவுடி கட்டையால் அஞ்சலியின் தலையில் அடித்துவிட்டு வயிற்றில் எட்டி உதைக்கிறான். இதில், அஞ்சலி சுருண்டு விழ ரவுடிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விடுகின்றனர். அதையடுத்து சத்யா பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனையில் அஞ்சலியை சேர்க்க, அஞ்சலியின் கரு கலைந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இதைக்கேட்ட மகேஷ் அய்யோ என் குழந்தை என கதறி அழுகிறான்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications