ஆட்டோ ஓட்டும் வெற்றி.. அவமானப்படுத்தும் ஈஸ்வரமூர்த்தி, துளசிக்கு ஷாக்.. கெட்டி மேளம்!

சென்னை: துளசி கர்ப்பமானதை நினைத்து வெற்றி சந்தோஷத்தில் இருக்க, துளிசி தான் கர்ப்பம் இல்லை என்றால் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறாள். துளசி கர்ப்பமானதால் இனி செலவு அதிகம் என்ற காரணத்தினால் வெற்றி தனது நண்பனின் ஆட்டோவை எடுத்து ஓட்ட தொடங்க, மகேஷ் செங்கல்பட்டில் எனக்கு சொந்தமான நிலம் இருக்கு அதை விற்க போகிறேன். அதை விற்பதற்கு உதவி செய்தால் நிறைய கமிஷன் கிடைக்கும் என்று சொல்லி பேச வெற்றி வேண்டாம் நான் ஆட்டோ ஓட்டிக் கொள்கிறேன் என மறுத்து விடுகிறான்.

கெட்டிமேளம்: அப்போது மகேஷ், அப்பாவாக போறீங்க என மகேஷ் வாழ்த்து சொல்ல வெற்றி நீங்களும் முன்ன மாதிரி இல்லாம ரொம்ப மாறிட்டீங்க இப்படியே இருங்க என்று அறிவுரை கொடுக்கிறான். இந்த உலகத்தை விட்டுப் போன என்னுடைய குழந்தை என்னை மாத்திட்டு போயிடுச்சு என மகேஷ் சொல்கிறான். மீண்டும் வெற்றிக்கு வாழ்த்து சொல்லும் மகேஷ் அங்கிருந்து கிளம்பி செல்கிறான். முதல் நாள் ஆட்டோ ஓட்டிய பணத்தில் துளசி, குழந்தை என எல்லோருக்கும் கிப்ட் வாங்கி வந்து கொடுக்க துளசி என்ன வேலை செய்றீங்க என கேட்க, வெற்றி ரியல் எஸ்டேட் என பொய் சொல்லி விடுகிறான்.

Getti melam promo
Photo Credit:

ஆட்டோ ஓட்டும் வெற்றி: அடுத்த நாள் வெற்றி ஆட்டோ ஓட்டுவதற்காக ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்க அந்த வழியாக மீனாட்சி மற்றும் ஈஸ்வரமூர்த்தி வருகின்றனர். இவர்களது கார் பிரேக் டவுன் ஆகிய நிற்க மீனாட்சி வெற்றியை பார்த்து விடுகிறாள். மாமா கண்ணுல எப்படியாவது இவனை சிக்க வைக்கும் என திட்டமிட்டு ஆட்டோல போயிடலாம் என ஆட்டோவை அழைக்க வெற்றி வந்து நிற்க ஈஸ்வரமூர்த்தி அவனைப் பார்த்து கடுப்பாகிறார். என் பையன் ஆட்டோ ஓட்டான்னு தெரிஞ்சா எனக்கு எவ்வளவு அசிங்கம் என கோபப்பட்டு வெற்றியை அவமானப்படுத்த வெற்றியும் நீங்கதானே வீட்டை விட்டு அனுப்பினீங்க என பதிலடி கொடுக்கிறான்.

Getti melam promo
Photo Credit:

கோவப்படும் துளசி: இதையடுத்து துளசி வீட்டுக்கு வரும் ஈஸ்வரமூர்த்தி, கோடீஸ்வரன் வீட்டு பையனை இப்படி ஆட்டோ டிரைவராக்கிட்டியே, உன்னால என் பையன் என்ன வேலை செய்றான் தெரியுமா ஆட்டோ ஓட்டுறான் என்று துளசியைப் பிடித்து திட்டி கோபப்பட துளசி அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X