சோகத்தில் அஞ்சலி.. துளசியை அவமானப்படுத்தும் ஈஸ்வரமூர்த்தி.. கெட்டி மேளம்!
சென்னை: சத்யாவை கொல்ல வந்த ஆட்களால் அஞ்சலிக்கு ஆபத்து ஏற்பட்டு அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். மகேஷ் எல்லாத்துக்கும் காரணம் சத்யா தான் என சத்யாவின் சட்டையை பிடித்து சண்டையிடுகிறான். அதைத் தொடர்ந்து ஹாஸ்பிடலுக்கு வந்த லட்சுமி நீ வந்ததுக்கப்புறம் தான் அவளுக்கு எல்லா பிரச்சனையும் என சத்யாவை பிடித்து திட்டி கோபப்படுகிறாள்.
பிறகு அஞ்சலியை பரிசோதனை செய்த டாக்டர் வெளியே வந்து அஞ்சலி காப்பாற்ற முடிந்த எங்களால குழந்தை காப்பாற்ற முடியல என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதனால் மொத்த குடும்பமும் ஷாக் ஆக மகேஷ் மீண்டும் டென்ஷனாகி சத்யாவின் சட்டையை பிடித்து சண்டையிடுகின்றனர். வெளியே வந்த அஞ்சலி எல்லாத்துக்கும் சத்யா இல்ல, அங்க என்ன நடந்தது என்று தெரியாமல் எதுவும் பேசவேண்டாம். என்ன காப்பாத்தத்தான் முயற்சி பண்ணு அவனை யாராவது ஒரு வார்த்தை சொன்னீங்கனா நான் சும்மா இருக்க மாட்டேன் என சொல்கிறாள். இதையடுத்து வீட்டுக்கு வரும் அஞ்சலி குழந்தையை நினைத்து வருத்தப்படுகிறாள்.

கெட்டி மேளம்: மறுபக்கம் தேர்தல் களம் சூடு பிடிக்க மீனாட்சிக்கு ஆதரவாக ஈஸ்வரமூர்த்தி பிரச்சாரம் செய்ய இன்னொரு பக்கம் துளசிக்கு ஆதரவாக வெற்றி பிரச்சாரம் மேற்கொள்கிறான். இதனால், ஆத்திரப்படும் ஈஸ்வரமூர்த்தி என்னை எதிர்க்கும் தைரியம் வந்துவிட்டதா என கேட்கிறார். அப்போது துளசி என்னைக்கும் நாங்க உங்களை எதிர்க்கவில்லை மாமா, சில விஷயத்தை உங்களுக்கு புரிய வைத்தோம். ஆனால் அது நடக்காததால் தேர்தலில் நிற்க வேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது. என்னைக்கும் நீங்க தோற்க வேண்டும் என நாங்க முயற்சி செய்தது கிடையாது. எங்க வீட்டில் எங்க அம்மா எங்களை அப்படி வளர்க்கவில்லை. வெற்றியையும் நீங்க அப்படி வளர்க்கவில்லை. அதற்காக என் கணவர் வெற்றியை நான் விட்டு கொடுக்க முடியாது என சொல்கிறாள்.
ஈஸ்வரமூர்த்திக்குத்தான் ஓட்டு: இதையடுத்து பிரச்சாரத்திற்கு செல்லும் ஈஸ்வரமூர்த்தி, இந்த பிரச்சாரத்தின் போது தனது மருமகளான துளசியை பற்றி தப்பாக பேசி மீனாட்சிக்கு ஓட்டு கேட்க இதை பார்த்து வெற்றி கோபம் அடைகிறான். ஆனால், துளசி கோபம் வேண்டாம் மாமா வழியில் நாம் பிரச்சாரம் செய்ய வேண்டாம். நேர்மையாக நடந்து கொள்ளலாம் என்று சொல்கிறாள். பிறகு துளசி, வெற்றி பிரச்சாரத்திற்காக ஒரு பகுதிக்கு செல்ல அங்கு இருப்பவர்கள் எங்கள் ஓட்டு ஈஸ்வர மூர்த்திக்கு தான் என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனாலும் துளசி நாங்க பேசுவதை ஒரு 2 நிமிஷம் கேளுங்கள் என பிரச்சாரம் மேற்கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications