ஈஸ்வரமூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அரசியல் களத்தில் ஏற்பட்ட திருப்பம் - கெட்டி மேளம்!
சென்னை: மகேஷால் அஞ்சலியின் கர்ப்பம் கலைந்து விட்டதாக நினைத்து அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர். ஆனால், அஞ்சலி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் துளசிக்கு போன் செய்து தன்னுடைய கர்ப்பம் கலையவில்லை தனது குழந்தை தன்னிடமே வளர வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பையை சொன்னதாக உண்மையை உடைக்கிறாள். அதன் பிறகு நானும் உனக்காக பிரச்சாரம் செய்கிறேன் என்று சொல்ல துளசி அதெல்லாம் வேண்டாம் நீ உடம்ப பாத்துக்கோ இன்று மறுப்பு தெரிவிக்க அஞ்சலி துளசிக்கு உதவுவதற்காக பிரச்சாரத்திற்கு கிளம்பி வருகிறாள்.

கெட்டி மேளம்: அவளுடன் சத்யாவும் கிளம்பி வர இருவரும் சேர்ந்து துளசிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர். மறுபக்கம் ஈஸ்வரமூர்த்தி ஆண்களுக்கு பணம் சரக்கு பாட்டில் உள்ளிட்டவற்றை கொடுக்க ஏற்பாடுகளை செய்து இருப்பதாக கதிர் வெற்றிக்கு போன் மூலம் தகவல் கொடுக்கிறார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகின்றனர். அதன் படி ஈஸ்வரமூர்த்திக்கு போன்ற செய்த, நீங்க வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகம் செய்வது தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்து விட்டது. அப்போது அவர்கள் உங்களுடைய வீட்டுக்குத்தான் வந்து கொண்டு இருக்கிறார்கள், பணத்தை உடனே இடம் மாற்றிவிடுங்கள் சொல்ல, ஈஸ்வரமூர்த்தி பயந்து போய் தனது அடி ஆட்களிடம் பணத்தை இடமாற்றம் செய்ய சொல்கிறார்.
பண கட்டுடன் சிக்கிய வாகனம்: ஈஸ்வரமூர்த்தியின் ஆட்கள் பணத்தை லாரியில் கொண்டு இல்ல, வெற்றி , அஞ்சலி, சத்யா 3 பேரும், மாறுவேடத்தில் தேர்தல் அதிகாரி என சொல்லிக்கொண்டு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்கின்றனர். இதில், வண்டியில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டுபிடித்து லாரியை மடக்கிப் பிடிக்கின்றனர். மேலும், பணக் கவர்களில் துளசிக்கு ஓட்டு போட சொல்லி மாற்றி வைக்கின்றனர். அதைத்தொடர்ந்து சரக்கு பாட்டில்கள் மக்கள் கையில் கிடைக்கக்கூடாது என்பதால் அனைத்தையும் அப்படியே கொளுத்தி விடுகின்றனர். இந்த விஷயம் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மீனாட்சிக்கு தெரிய வர இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications