நகையை அடகு வச்சு ஆட்டோ வாங்கிய துளசி! வெற்றியின் ரகசியத்தை உடைத்த மாமனார்!
சென்னை : வெற்றி ஆட்டை ஓட்டுவதை பார்த்து ஆத்திரப்படும் ஈஸ்வரமூர்த்தி துளசி வீட்டுக்கு வந்து, கோடீஸ்வரன் வீட்டு பையனை இப்படி ஆட்டோ டிரைவராக்கிட்டியே, உன்னால என் பையன் என்ன வேலை செய்றான் தெரியுமா ஆட்டோ ஓட்டுறான் என்று துளசியைப் பிடித்து திட்டி கோபப்பட துளசி அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். அப்போது சத்யா என்ன சார் வெற்றி ஆட்டோ தானே ஓட்டுறாரு இது என்ன தப்பு இருக்கு, மத்தவங்க மாதிரி ஊர் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறாரா என கேட்க, ஆத்திரப்படும் ஈஸ்வரமூர்த்தி சத்யாவை ஓங்கி அடிக்கிறார். இதைப்பார்த்து ஆத்திரமடைகின்றனர்.
கெட்டி மேளம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், ஈஸ்வரமூர்த்தி கண்டமேனிக்கு பேசவதைப்பார்த்த சிவராமன், சார் கொஞ்சம் அமைதியா இருங்க, துளசி உங்க குடும்பத்தின் முதல் வாரிசை சுமந்துகிட்டு இருக்கா அவள போய் அப்படி திட்டுங்க என்று சொல்ல ஈஸ்வரமூர்த்தி கொஞ்சம் அமைதியாகி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு துளசி வெற்றி ஆட்டோ ஒட்டும் விஷயம் நமக்குத் தெரிந்த மாதிரி காட்டிக்க கூடாது என சொல்கிறாள். பிறகு வீட்டுக்கு வந்து வெற்றி துளசியிடம் ரியல் எஸ்டேட் பற்றி பேசி பில்டப் கொடுக்க நீங்க ஆட்டோ ஓட்டுறீங்கனு எல்லாருக்கும் தெரியும் என ஷாக் கொடுக்கிறாள்.

துளசி எடுத்த முடிவு: மேலும், மாமா வீட்டிற்கு வந்து எல்லாத்தையும் சொல்லி விட்டார் என நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறாள். அப்போது வெற்றி எனக்கு வேற வேலை கிடைக்கவில்லை. அதனால கிடைச்ச வேலையை செய்கிறேன் என சொல்கிறான். இதையடுத்து, துளசி வெற்றிக்கு ஒரு ஆட்டோ வாங்கித் தர வேண்டும் என முடிவெடுத்து தனது நகைகளை வைத்து ஒரு ஆட்டோவை வாங்கி அடுத்த நாள் காலையில் வெற்றிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications