ஆதாரத்தோடு சிக்கிய ஐஸ்வர்யா.. மகளை காப்பாற்றிய ராஜேஸ்வரி..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், அபிராமி இருக்கும் இடம் தெரியாததால், பதற்றத்தில் இருக்கும் கார்த்திக், அம்மா இந்த தோப்புக்குள் தான் எங்கேயோ இருக்கிறார்கள் என்று தோப்பு முழுவதும் தேடுகிறான். அப்போது, மண் வெட்டி, மண் குவியல் தென்பட, இதையெல்லாம் பார்த்து சந்தேகப்பட்டு கார்த்திக் அந்த இடத்தை தோண்ட அங்கு அபிராமி உயிரோடு புதைக்கப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து, மிகுந்த போராட்டத்திற்கு பிறகு, அபிராமியை வெளியே எடுக்கிறான். ஆனால், மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் அம்மாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலில் ஓடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்று பார்க்கலாம்.

வசமாக சிக்கிய ஐஸ்வர்யா: இதையடுத்து இன்றைய எபிசோடில், கார்த்திக் அம்மாவோட இந்த நிலைமைக்கு ஐஸ்வர்யா அண்ணி தான் காரணம், அவங்க தான் எல்லா வேலையும் பண்ணி இருக்காங்க என்று சொன்னதும் அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, என்னை உனக்கு பிடிக்காது என்பதால் தேவையில்லாமல் பழி போடாகே என்று வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறாள். கார்த்திக் அண்ணி எனக்கு எல்லாமே தெரியும், தயவு செய்து பொய் சொல்லிட்டு இருக்காதீங்க என்று சொல்ல ஐஸ்வர்யா ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாகே என்று சொல்ல, அந்த நேரம் வீட்டுக்கு வரும் போலீஸ் ஐஸ்வர்யா வாட்சப் காலில் பேசிய அனைத்து ரெக்கார்டும் இருக்கு என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
நாடகமாடிய ராஜேஸ்வரி: மகள் வசமாக மாட்டிக்கொண்டதால், வேறு வழியில்லாமல், ஐஸ்வர்யாவை காப்பாற்ற ராஜேஸ்வரி நான் தான் எல்லாத்தையும் பண்ணேன், என் பொண்ணை அவங்க அடிச்சதால் அந்த கோபத்தில் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்ல கார்த்திக் அதை நம்ப மறுக்கிறான், எல்லாரும் கேள்வி கேட்க ஐஸ்வர்யாவும் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்டு டிராமா போட போலீஸ் ராஜேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
கண்விழித்த அபிராமி: இதையடுத்து, சிறையில் இருக்கும் ராஜேஸ்வரியை பார்க்க ஐஸ்வர்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நல்ல வேளை என்னை காப்பாத்தீட்டீங்க, இல்லனா என் வாழ்க்கையே போய் இருக்கும் என்று சொல்லி, அந்த தீபாவையும் கார்த்தியையும் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல ராஜேஸ்வரி எதுவும் செய்து மாட்டிக்காத, என்று சொல்கிறாள். மறுபக்கம் அபிராமி கண் விழிக்க கார்த்திக் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேட்டு கண்ணீர் வடிக்கிறான். இதையடுத்து என்ன நடக்க போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











