துரோகி.. கார்த்திக் யோக்கியதை எனக்கு தெரியும்.. கொந்தளித்த ரேவதி.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: சாமுண்டீஸ்வரி, கார்த்தியிடம் கல்யாணமான பிறகும் உங்க அம்மா ஏன் வரவே இல்லை என்று கேட்கிறாள். மேலும் உங்க அம்மா வீட்டில் தானே இருக்காங்க போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க என்று சொல்ல கார்த்திக் அவங்க கோவிலுக்கு போய் இருப்பதாக சமாளிக்கிறான். உடனே, சாமுண்டீஸ்வரி எப்பவும் அவங்க கோவிலில் தான் இருப்பாங்களா என்று கேட்க, கார்த்திக் ஆமாம் அவங்களுக்கு பக்தி அதிகம் என சொல்லி சமாளிக்கிறான். சாமுண்டீஸ்வரி, என்ன சம்மந்தி உங்க மகனுக்கு கல்யாணம் ஆகி இருக்கு, நீங்க ஏன் வரவே இல்ல.. உங்க பையனையும் பொண்ணையும் நீங்க ஆசிர்வாதம் செய்ய வேண்டாமா என்று கேட்கிறாள்.

அப்போது அபிராமி, ராஜாவிற்கு திடீரென கல்யாணம் ஆகிவிட்டதால், வேண்டுதலுக்காக கோவிலில் வந்து இருக்கிறேன் என்று சொல்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி, வேண்டுதலை அப்புறம் செய்யுங்க சம்மந்தி முதலில், மகனையும் மருமகளையும் ஆசிர்வாதம் பண்ணுங்க, அப்போது தான் அவங்க வாழ்க்கை நன்றாக இருக்கும், உங்களால் வரமுடியவில்லை என்றால், நான் இருவரையும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் என்று சொல்ல, அபிராமி ஐயோ வேண்டாம் சம்மந்தி நானே வருகிறேன் என்கிறாள்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், சந்திரகலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சிவனாண்டி சொன்னது போல மகேஷ் காணாமல் போனதுக்கு சாமுண்டீஸ்வரி தான் காரணம் என்று தான் சந்தேகப்படுவதாக கம்ப்ளைன்ட் கொடுக்கிறாள். இதனால் போலீஸ் சாமுண்டீஸ்வரியை விசாரிப்பதாக சொல்லி அனுப்புகின்றனர். அதன் பிறகு அபிராமி கோவில் இருந்து பூ வாங்கிக் கொண்டு கார்த்திக் ரேவதியை சந்திக்க சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு கிளம்பி வருகிறாள். சாமுண்டீஸ்வரி பார்த்துவிட்டால், அனைத்து உண்மையும் தெரிந்துவிடும் என்று பயத்தோடு அபிராமி வந்து கொண்டு இருக்கிறாள்' அந்த நேரத்தில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சாமுண்டீஸ்வரிக்கு போன் கால் வர வேறு வழியில்லாமல் அவள் சந்திரகலாவை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்பி செல்கிறாள்.

zee tamil Karthigai Deepam

கார்த்திக் செய்த துரோகம்: வீட்டுக்கு வந்த அபிராமி கார்த்திக் ரேவதியை ஆசிர்வாதம் செய்கிறாள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிராமி மற்றும் ராஜராஜன் சந்தித்துக்கொள்ள அபிராமி அண்ணா என கூப்பிட அண்ணாவா என்று எல்லோரும் கேட்க சிலர் சம்மந்தியை அப்படித்தான் கூப்பிடுவாங்க என்று சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு ரேவதியை தனியாக சந்தித்து பேசுகிறாள். அப்போது ரேவதி உங்க பையன் இப்படி செய்வார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று சொல்ல, அபிராமி என் பையன் தப்பு பண்ணி இருக்க மாட்டான், நிச்சயமா அவன் உன்னை நல்லா பார்த்துக்கொள்வான் என்று சொல்கிறார். அப்போது, ரேவதி, அம்மா உங்க மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. உங்க புள்ளையோட யோக்கியதை என்ன என்று எனக்குத் தெரியும், இந்த வீட்டுக்குள்ள டிரைவரா வந்து, நல்லவன் போல நடிச்சு என் அம்மாவை நம்ப வெச்சு கடைசியில் என் கழுத்துல தாலி கட்டிட்டார். இது எவ்வளவு பெரிய துரோகம் இதை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன் என்கிறாள்.அப்போது அபிராமி, இல்ல ரேவதி நீ கார்த்திகை பத்தி நம்ப புரிஞ்சிக்கிட்ட, அவன் என்னைக்கும் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டான். அது உனக்கு போக போக புரியும் என்று சொல்ல ரேவதி உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்களா என கோபப்படுகிறாள்.

அடுத்து நடப்பது என்ன: அடுத்ததாக கார்த்தியின் நண்பன் நவீன் துர்காவை காதலிப்பதாக சொல்லி இங்கே வேலைக்கு சென்று விட்டதாக வீட்டுக்குள் வர கார்த்திக் மற்றும் ராஜராஜன் இருவரும் நவீனை திட்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். பிறகு அபிராமி கடவுளிடம் நான் அங்க போனா பிரச்சனை எதுவும் வர கூடாது என கடவுளிடம் வேண்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X