அபிராமி எடுத்த அதிரடி முடிவு.. சொத்தை அடைய திட்டம் போடும் ரியா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த அபிராமி, தீபாவை பார்த்து உன்னை பத்தி நான் முழுசா புரிஞ்சிக்கிட்டேன். நானே தேடி இருந்தால் கூட உன்னை மாதிரி ஒரு பெண்ணை கார்த்திக்கு கட்டி வச்சிருக்க முடியாது. அவனுக்கு ஏற்ற பொண்ணு நீ தான் என்று சொன்னதும் தீபா சந்தோசப்படுகிறாள். அடுத்து, மீனாட்சியை பார்த்து உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் என்று கண் கலங்க, மீனாட்சி என்னைக்கும் நீங்க தான் என் அத்தை என்று சொல்ல , நான் உனக்கு என்ன பண்ண போறேன்னு தெரியல என்று கண் கலங்குகிறாள்.
இதையடுத்து,வரும் ஆனந்த், நான் சொத்தை பிரிக்க சொன்னதால் தான் வீட்டை விட்டு வெளியே போனீங்களா என்று கேட்க அபிராமி நீ கேட்டதிலும் தப்பு இல்ல, நான் போனதிலும் தப்பு இல்ல. நான் ஒரு நல்ல முடிவோட தான் திரும்பி வந்திருக்கேன், நாளைக்கு லாயரை வர சொல்லி இருக்கேன் என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: இதையடுத்து,கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், பிறகு ஆனந்த் மற்றும் ரியா காஸ்மெடிக் கம்பெனி, இந்த வீடு எல்லாம் நமக்கு வரணும் என பேசிக் கொள்கின்றனர். இதை அடுத்து அருண் ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்ளும்படி ஐஸ்வர்யா நமக்கு சின்ன சின்ன கம்பெனி போதும், ஆனா இந்த வீட்டை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது அதுதான் நம்முடைய அடையாளம் நீங்க கேட்கலனாலும் நான் இந்த வீட்ட கேட்பேன் என்று சொல்கிறாள்.
அபிராமியின் அதிரடி முடிவு: பிறகு கார்த்திக் சொத்து பிரிப்பது பற்றி வருத்தப்பட தீபா யார் என்னை கேட்டாலும் சரி அத்தையும் மாமாவையும் நாம விட்டுக் கொடுக்கக் கூடாது அவங்க நம்பக் கூட தான் இருக்கணும் என்று சொல்கிறாள். மறுநாள் லாயர் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் அபிராமி சொத்தை இரண்டாக பிரிப்பது பற்றி பேசுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











