அபிராமி வைத்த ட்விஸ்ட்.. ஆனந்திடம் சவால் விட்ட கார்த்திக்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், அபிராமி லாயரை வீட்டுக்கு வர சொல்லி இருந்த நிலையில், ரியா காஸ்மெடிக் கம்பெனி, இந்த வீடு எல்லாம் நமக்கு வரணும் என்கிறாள். ஐஸ்வர்யா நமக்கு சின்ன சின்ன கம்பெனி போதும், ஆனா இந்த வீட்டை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது அதுதான் நம்முடைய அடையாளம் நீங்க கேக்கலனாலும் நான் இந்த வீட்டை கேட்பேன் என்று அருணிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

கார்த்திக்கும் தீபாவும்,யார் என்ன கேட்டாலும் சரி அத்தையும் மாமாவையும் நாம விட்டுக் கொடுக்கக் கூடாது அவங்க நம்ம கூட தான் இருக்கணும் என்று சொல்கிறாள். மறுநாள் லாயர் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் அபிராமி சொத்தை இரண்டாக பிரிப்பது பற்றி பேசுகிறார். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial April 13th Episode

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமி லாயரை வீட்டிற்கு வர வைத்து அவரையும் அருணாச்சலத்தையும் தனியாக அழைத்து சென்று ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல அருணாச்சலம் அதிர்ச்சி அடைகிறார். இது மட்டும் நம்ம புள்ளைங்களுக்கு தெரிந்தா என்ன நடக்கும் என்று அதிர்ச்சியாக கேட்கிறார். அப்போது, ஐஸ்வர்யா, ஆனந்த் ஆகியோர் வீடு வேண்டும் என்று கேட்க, கார்த்திக் அம்மா என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான், ஆனால் அம்மாவும் அப்பாவும் என்கூட இருக்க வேண்டும் என்கிறான்.

அபிராமி எடுத்த அதிரடி முடிவு: மறுநாள், லாயர் டாக்குமெண்ட்டுகளை கொடுக்க அபிராமியும் அருணாச்சலமும் கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர். லாயர் சொத்துக்கள் அனைத்தும் கார்த்தி பெயருக்கு எழுதி இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதைக்கேட்டு கடுப்பான ஆனந்த், என்னம்மா எல்லாத்தையும் இவனுக்கு எழுதி கொடுத்துட்டீங்க என்று கேட்க நான் உனக்கு ஒரு பொண்ணை கட்டி வச்சா நீ இன்னொருத்தியை கல்யாணம் பன்னிட்டு வந்து நிக்கிற, நீ அவ பேச்சை கேட்டுட்டு சொத்துக்களை அவ பேருக்கு மாத்தி எழுத மாட்டேன்னு என்ன நிச்சயம் என்று பதிலடி கொடுக்கிறாள்.

கடுப்பான ஐஸ்வர்யா: அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா அப்போ எங்களுக்கு ஏன் எழுதி வைக்கல என்று கேட்க அருணுக்கு இன்னும் பொறுப்பு வரல, அதை நான் ரிசார்ட் விஷயத்திலேயே பார்த்துட்டேன். நீ என்னை கொல்ல பிளான் போட்டது, தீபாவை வெளியே துரத்த பிளான் போட்டது என எல்லாமே எனக்கு தெரியும். அருண் எப்போ சுயமா சிந்தித்து பொறுப்பா இருக்கானா அப்போ எனக்கு சொத்தை கொடுக்க தெரியும் என்று பதிலடி கொடுக்கிறாள்.

கார்த்திக் விட்ட சவால்: நான், அப்பா, அருண் என மூணு பேரும் மில்லுல இரவும் பகலுமா உழைத்துனால தான் இவன் வெளிநாட்டுல படிச்சு ஏசில உட்கார்ந்து வேலை பார்க்க முடியுது, ஒரு மாசம் அவனை மில்லுல வேலை பார்க்க சொல்லுங்க பார்க்கலாம் என்று சொல்ல கார்த்திக் சவாலை ஏற்று கொள்கிறான். நீ சொல்ற மாதிரி நான் வேலை பார்க்குறேன். ஆனால் அதுக்கு பிறகு, சொத்தை பிரிக்கிறது பத்தி பேசவே கூடாது என்று செக்மேட் வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X