உனக்கு ஹனிமூன் வேற கேடா? கார்த்திகை விலக நினைக்கும் ரேவதி.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: பாட்டி வீட்டிற்கு வரும் ரேவதி, ஆசைப்பட்டபடி கல்யாணம் நடந்து சந்தோஷமா இந்த வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், இப்போ எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்லி வருத்தப்படுகிறாள். அப்போது, பாட்டி, ஏம்மா அப்படி சொல்ற, நீ என் பேரனைத்தானே கல்யாணம் பண்ணி இருக்க என்று சொல்ல ரேவதி என்ன ... ராஜா உங்க பேரனா என்று கேட்கிறாள். நீ என் பேத்தினா.. கார்த்திக் என் பேரன் தானே என்று சமாளித்துவிடுகிறாள். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.
இருவருக்கும் விருந்து பரிமாறிய பாட்டி, ரேவதி சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற சமயத்தில் பார்ட்டி கார்த்தியிடம் எப்படியாவது நீங்க சேர்ந்து வாழணும் என்று சொல்கிறாள். ரேவதி இதை கேட்டு விடுவாளா என்ற பில்டப் ஒரு பக்கம் எகிறிகிறது. அடுத்ததாக பிளாஷ்பேக்கில் பாட்டி ரேவதியை தனியாக அழைத்து அவன் எதையும் பிளான் பண்ணி எல்லாம் செஞ்சா மாதிரி தெரியல. இந்த கல்யாணம் நடக்க உங்க அம்மா தானே காரணம்? அவள் மேல கோபப்படாத வாழ்க்கையை வாழ பாரு என்று அறிவுரை வழங்குகிறாள்.

கடுப்பான ரேவதி: இருவரும் விருந்து முடித்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். சாமுண்டீஸ்வரி கார்த்தியை அழைத்து என்ன மாப்ள விருந்து எல்லாம் எப்படி இருந்துச்சு என விசாரிக்கிறாள். இதையடுத்து சாமுண்டீஸ்வரி, இருவரும் ஹனிமூன் போகும்படி சொல்கிறாள். இதைக்கேட்டு ரேவதி கடுப்பாகி, என்னம்மா எல்லாமே இந்த வீட்ல, நீ சொல்ற படி தான் நடக்கணுமா? நான் உன்னுடைய மகளா இல்ல கார்த்திக் உன்னோட பையன் நானு எனக்கு சந்தேகமாக இருக்கு. ஒரு அளவுக்கு தான் நீங்க செய்ற எல்லாத்தையும் என்னால பொறுத்துக்க முடியும். திரும்ப திரும்ப நீங்க என்ன டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் பொறுத்துக்கிட்டு இருப்பேனு மட்டும் நினைக்காதீங்க என்று ரேவதி அருகில் இருந்த பொருளை தூக்கிப்போட்டு விட்டு உள்ளே செல்கிறாள்.
இதையடுத்து, சாமுண்டீஸ்வரி இங்கேயே, ரேவதி இவ்ளோ கோபமா இருக்கிறாள் என்றால், கார்த்திகை என்ன பாடுபடுத்துவாளோ தெரியலையே, நாமதான் கார்த்திக்கோட வாழ்க்கைய வீணாக்கிட்டோமோ என்று ரேவதியும் கார்த்தியும் பேசிக்கொண்டிருப்பதை வெளியில் இருந்து ஒட்டு கேட்கிறாள். என்ன, கார்த்திக், நீ பிளான் போட்டபடியே எல்லாத்தையும் செய்ற போல, ஏற்கனவே மாயா, உன்ன நம்பாதானு பலவாட்டி சொன்னாள். ஆனால், நான் தான் உன்னை நம்பி தொலைச்சேன் கடைசில என்னையே ஏமாத்திட்ட என்று சொல்லிவிட்டு கட்டிலில் படுக்கிறாள்.
தாலியை கழட்டிட்டு மகேஷ் கூட வா: மறுநாள் காலை மாயாவிடம் இருந்து போன் வர, ரேவதி மாயாவை பார்ப்பதற்காக கிளம்புகிறாள். இதை பார்த்த சாமுண்டீஸ்வரி ரேவதி, எங்கே செல்கிறார் என்று பின் தொடர்ந்து செல்கிறாள். அப்போது ரேவதி, மாயாவின் வீட்டுக்கு செல்கிறாள். அங்கே இருக்கும் மாயா, மகேஷை கடத்தியது ராஜாவும், உங்க அம்மாவும் தான். கல்யாணம் ராஜா கூட தான் நடக்க வேண்டும் என்று, உங்க அம்மா தான் இப்படி ஒரு வேலையை செய்து இருக்காங்க. மகேஷ் எப்படியும் சீக்கிரம் வந்துடுவான். அவரு வந்ததும் இந்த ராஜா கட்டின தாலிய கழட்டி வீசிட்டு நீ ராஜா மகேஷ் கூட சேர்ந்து வாழணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











