என் வாழ்க்கையை நீ நாசம் பண்ணிட்ட.. கார்த்திக் மீது பகையை வளர்க்கும் ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரி கார்த்தியை அழைத்து என்ன மாப்ள விருந்து எல்லாம் எப்படி இருந்துச்சு என விசாரிக்கிறாள். உன்னிடம் உங்கள பாக்க அமெரிக்காவில் இருந்து என் பிரண்டு ஒருத்தி வரா என்று சொல்ல ரேவதி கடுப்பாகிறாள். சாமுண்டீஸ்வரி கல்யாணம் நடந்து முடிஞ்சா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வராதவங்க, வீட்டு வந்து பாப்பாங்க தான் என்று சொல்லி, ரேவதியின் வாயை அடக்குகிறாள்.

சாமுண்டீஸ்வரி சொல்லியபடியே அவளது தோழி வெளிநாட்டிலிருந்து வருகிறார். வீட்டுக்கு வந்ததும் சந்திரகலா எப்படி இங்கிலீஸ்ல தான் பேசுவாங்க, இந்த டிரைவர் ராஜா திருதிருவென முடிக்கப் போறான் என வேடிக்கை பார்க்கிறாள்.அதேபோல் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ஆங்கிலத்தில் பேச கார்த்தி சரளமாக ஆங்கிலத்தில் பேசி தனது வாழ்க்கையில் பாதி தனது மனைவி என ரேவதியை அறிமுகம் செய்ய சந்திரகலா ஷாக் ஆகிறாள். எப்படி இவ்வளவு சரளமாக இங்கிலீஷ் பேசுறீங்க என்று எல்லோரும் கேள்வி கேட்க, அப்போது அங்கு வரும் மயில்வாகனம் அவன் வெள்ளைக்காரன் ஒருத்தன் கிட்ட டிரைவராக வேலை பார்த்து இருக்கான் என்று சொல்லி சமாளிக்கிறான்.

zee tamil Karthigai Deepam

இன்றைய எபிசோட்: அதன் பிறகு வெளிநாட்டிலிருந்து வந்தவர், கார்த்திக் ரேவதிக்கு திருமண கிப்டாக ஹனிமூன் டிக்கெட், அவர்கள் தங்க ஹோட்டல் ரூம், பிளைட் டிக்கெட் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு கிளம்ப சாமுண்டீஸ்வரி ஹனிமூன் போக சொல்ல ராஜா அதெல்லாம் சரியா வராது அத்தை என்று சொல்கிறான். சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி ரேவதியிடம் விஷயத்தை சொல்ல அவன் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் சொல்கிறாள்.

இதையடுத்து அறைக்குள் வரும், ரேவதி கார்த்திக்கிடம் எதற்கு நான் ஹனிமூன் போலான்னு ஒத்துக்கிட்ட தெரியுமா என்று கேட்கிறாள். உடனே கார்த்திக் நல்லா தெரியும் அம்மாவோட டார்ச்சரில் இருந்து தப்பிச்சு ஒரு நாலு நாலு சந்தோஷமா இருக்கலாம்னு நினைக்கிறீங்க. அதனால தான் இந்த ஹனிமூன், நீங்க ஓகே சொன்னீங்க அது எனக்கு நல்லாவே தெரியும் என்று சொல்கிறான். இதையடுத்து ரேவதி, ஓ பரவால்லையே நல்லா என்னை பத்தி புரிஞ்சி வச்சிருக்க, ஆனா அந்த நாலு நாள், உன்ன நான் எப்படி சகிச்சுக்கிட்டு உன்கூட இருக்க போறேன்னு தெரியவில்லை.

zee tamil Karthigai Deepam

என் வாழ்க்கையை நீ நாசம் பண்ணிட்ட: அம்மாவோட டார்ச்சர்ல இருந்து தப்பிக்கிறதுக்கு தான் நான் ஏற்காடு வரேன்னு சொல்லி இருக்கேன். நீயும் எங்க அம்மாவும் சேர்ந்து, என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்க... ஆடுங்க நல்லா ஆடுங்க.... எவ்வளவு நாள் ஆடுறீங்களோ நல்ல ஆடுங்க... ஆனால், நீ செஞ்ச பாவத்துக்கு எல்லாம் ஒரு நாள் நீ, நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆகணும் என்று ரேவதி கோபப்பட்டு பேசுகிறாள். அப்போது கார்த்திக், என் நிலைமையை எத்தனையோ முறை உன் கிட்ட எடுத்து சொல்லிட்டேன். ஆனா நீ புரிஞ்சுக்கிற மாதிரி இல்ல இனிமே உன்கிட்ட நான் சொல்றது வேஸ்ட் என்று பாயை கீழே போட்டு விட்டு, நீ கட்டில் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான்.

அதன் பிறகு மாயா ரேவதிக்கு போன் செய்து உன்னை நேரில் பார்க்கணும் என்று சொல்ல ரேவதி சந்திக்கலாம் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X