ரியாவை ஓங்கி அறைந்த தீபா... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ஆனந்திடம் சவால் விட்ட கார்த்திக் மில்லுக்கு வந்து வேலை செய்ய தொடங்க, அந்த நேரம் பார்த்து மிஷின் வேலை செய்யாமல் போய்விடுகிறது. ஆனந்த் இன்ஜினியருக்கு போன் போட்டு யார் போன் பண்ணி மில்லுக்கு கூப்பிட்டாலும் வரக்கூடாது என்று சொல்லி விடுகிறான்.

கார்த்திக் வந்த முதல் நாளே லாஸ் ஆன மாதிரி இருக்கணும் என பிளான் போடுகிறான். மில்லுக்கு வரும் கார்த்திக் மிஷின் ஓடாத விஷயம் தெரிந்து அவனே மெஷினை ரிப்பேர் செய்கிறான். திடீரென மிஷின் ஓடும் சத்தம் கேட்டு அருண், ஆனந்த் வெளியே வர மிஷினை ரெடி பண்ணது கார்த்திக் தான் என தெரிந்து ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial April 16th Episode

ஐடியா கொடுத்த ஐஸ்வர்யா: இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா ரியாவை கூப்பிட்டு நீ முதலில் அபிராமி மனசில் இடம் பிடிக்கணும், அவங்க வாயால் நீ தான் என் மருமகள் என்று சொல்லணும். அதுக்கான வேலைகளை நீ செய்ய வேண்டும் என்று சொல்கிறாள். மேலும் பூஜை ரூமுக்கு சென்று பூஜை செய்து ஆரத்தி தட்டை கொண்டு போய் அபிராமி கிட்ட நீட்டுனா அவங்களே உன்னை மருமகளா ஏத்துக்கிட்டு கட்டி தழுவுவாங்க என்று ஐடியா கொடுக்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial April 16th Episode

அபிராமியை தள்ளிவிட்ட ரியா: இதையடுத்து ரியா பூஜையறைக்குள் செல்ல மீனாட்சி கழட்டி கொடுத்த தாலி அங்கு இருக்க ரியா மீனாட்சி சார்ந்த எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று தூக்கி வெளியே வீச அபிராமி அதை பார்த்து டென்ஷனாகிறாள். எப்படி நீ பூஜை ரூமுக்கு வரலாம்? அந்த தாலியை தொடலாம் என்று ஆவேசப்பட்டு பேச ரியா நான் தான் உங்க மூத்த மருமகள் என்று எதிர்த்து பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ரியா அபிராமியை பிடித்து தள்ளி விடுகிறாள்.

உன்னை அனுப்பிடுவான்: இதையடுத்து, அபிராமி கீழே விழ, ஓடிவந்து அபிராமியை தீபா தாங்கி பிடித்து அத்தை மேலே கையை வைக்கிறியா என்று ரியாவை அறைகிறாள். பிறகு ஐஸ்வர்யாவை சந்தித்து நடந்ததை சொல்லும் ரியா இதை ஆனந்திடம் சொல்ல போவதாக சொல்ல ஆனந்துக்கு சொன்னா என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆச்சுனு கேட்பான். நீ அபிராமியை பிடித்து தள்ளுனது தெரிந்தா அம்மா பாசத்தில் உன்னையே வெளியே போக சொல்லிடுவான் என்று தடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X