மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ரியா பூஜையறைக்குள் செல்ல மீனாட்சி கழட்டி கொடுத்த தாலி அங்கு இருப்பதை பார்த்து, மீனாட்சி சார்ந்த எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று தூக்கி வெளியே வீச அபிராமி அதை பார்த்து டென்ஷனாகிறாள். எப்படி நீ பூஜையறைக்கு வரலாம்? அந்த தாலியை தொடலாம் என்று ஆவேசப்படுகிறாள். இதையடுத்து, ரியாவுக்கும் அபிராமிக்கும் இடையே வாக்குவாதம் நடக்க ரியா அபிராமியை பிடித்து தள்ளி விடுகிறாள்.

நிலை தடுமாறிய அபிராமி கீழே விழ, ஓடிவந்து அபிராமியை தீபா தாங்கி பிடித்து அத்தை மேலே கையை வைக்கிறியா என்று ரியாவை அறைகிறாள். பிறகு ஐஸ்வர்யாவை சந்தித்து நடந்ததை சொல்லும் ரியா இதை ஆனந்திடம் சொல்ல போவதாக சொல்ல ஆனந்துக்கு சொன்னா என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆச்சுனு கேட்பான். நீ அபிராமியை பிடித்து தள்ளுனது தெரிந்தா அம்மா பாசத்தில் உன்னையே வெளியே போக சொல்லிடுவான் என்று தடுக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial April 17th Episode

ஆனந்த் போடும் பிளான்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், கார்த்திக்கை எப்படியாவது மில்லை விட்டு துரத்தணும் என்று கார்த்திக்கிற்கு எதிராக சதி செய்ய யோசித்து கொண்டிருக்கிறான், பிறகு மேனேஜரை வைத்து ஒரு திட்டத்தை தீட்டுகிறான். அடுத்ததாக மேனேஜர் கார்த்திக்கை கூப்பிட்டு எனக்கு டீ குடிக்கணும் போல் இருக்கு, போய் டீ போட்டு எடுத்துட்டு வா என்று சொல்லி ஒரு மேஜை மீது ஏறி உட்காருகிறான்.

தெறிக்கவிட்ட கார்த்திக்: அடுத்து, டீயை எடுத்து வரும் கார்த்திக், ஸ்டைலாக மேஜையின் மீது ஏறி ஒய்யாரமாக உட்கார்ந்து டீ குடிக்கிறான். மேனேஜர் நான் எனக்கு டீ கொண்டு வர சொன்னேன் என்று சொல்ல வேலை விஷயமா என்ன வேணாலும் சொல்லுங்க, நான் செய்கிறேன். ஆனால் உங்களுடைய பெர்சனல் வேலை செய்ய நான் இங்கு வரல, அதே போல இனிமேல் யாரையும் டீ வாங்கிட்டு வா, அத வாங்கிட்டுவானு சொல்லக்கூடாது என்று சத்தம்போட்டு சொல்ல, மேனேஜர் மிரண்டுப்போகிறார். இதைக்கேட்ட தொழிலாளர்கள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

எல்லாமே நடிப்பு: மறுபக்கம், அபிராமி வீட்டில் ஐஸ்வர்யாவும் ரியாவும் கூட்டு சேர்ந்து கொண்டு ரியாவின் அத்தை மாமா என்று சீரியல் ஆர்டிஸ்ட் சிலரை வர வைத்து அபிராமியிடம் பேசி சமாதானம் செய்து வைப்பது போல் நடிக்க வைக்க ஏற்பாடு செய்கின்றனர், அவர்களும் சீக்கிரம் நடிச்சிட்டு நாங்க கிளம்பனும், சீரியலுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கோம் என்று பேசுகின்றனர். இதையெல்லாம் மைதிலி ஒட்டு கேட்டு விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X