முத்தம் கொடுத்த கார்த்திக்.. அவமானப்படுத்திய ரேவதி.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: ரேவதி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மாயாவை சந்திக்க கிளம்ப சாமுண்டீஸ்வரி இதை பார்த்து இந்த நேரத்துல எங்க போகிறாள் என ரேவதியை பின் தொடர்ந்து செல்கிறாள். ரேவதி மாயா வீட்டுக்கு வந்து அவளை சந்திக்க மகேஷ் எங்க போனான் என்று தெரியல, அவன் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படியாவது அவனை தேடி கண்டுபிடித்து கொடு என்று சொல்லி அழுகிறாள். உடனே ரேவதி ஹனிமூனுக்கு போகும் போது கார்த்தியிடம் பேசி உண்மையை கண்டு பிடிக்கிறேன் என்று சொல்கிறாள்.
பிறகு மாயா, மகேஷ் திரும்ப வந்தால் அவனை ஏத்துக்குவியா என்று கேட்க ரேவதி கார்த்தியை பிடிக்கவில்லை என்றாலும், அவன என் கழுத்துல தாலி கட்டிட்டான். அவன் தான் என்னுடைய புருஷன். ஒரு பொண்ணோட கழுத்துல ஒரு முறை தான் தாலி ஏறணும். அது என் கழுத்துல எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஏறிவிட்டது. நான் மகேஷ் நல்லபடி வரட்டும் அவன் வந்ததும். அவனுக்கு நானே ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துவைக்கிறேன் என்கிறாள். ரேவதி பேசுவதை கேட்ட சாமுண்டீஸ்வரி ஓரளவிற்கு மன நிம்மதி அடைகிறாள். ரேவதி கார்த்திக் இருவரும் ஏற்காட்டுக்கு கிளம்ப ராஜாராஜன் மாப்ள இந்தங்க என்று கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்து அனுப்புகிறான்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், ஏற்காடுக்கு வந்து இறங்கும் கார்த்தி ரேவதி இருவரும் ஹோட்டல் ரூமிற்கு வருகின்றனர். அப்போது, இவர்கள் ரூமின் கதவை திறந்ததும். அதில், படுக்கையில் மல்லிகை பூ... ஹாட்டின் என அசத்தலாக அலங்காரம் செய்து இருப்பதை பார்த்து ரேவதி கடுப்பாகிறாள். இது எல்லாம் உன்னுடைய வேலை தானா என்று கார்த்திக்கிடம் சத்தம் போடுகிறாள். உடனே கார்த்தி, இதெல்லாம் என்னுடைய வேலை இல்லை. நான் எதையும் செய்யவில்லை என்கிறான். என்ன சொன்னாலும் நீ நம்ப போறது இல்லை என்கிறான். உடனே ரேவதி உன்னோட திட்டம் என்னனு எனக்குத் தெரியும், நீ இன்னைக்கு என்னோட தங்கக்கூடாது தயவு செய்து, நீ வேற ரூம்ல போய் தங்கிக்கோ என்று சொல்ல கார்த்திக்கும் சரி என்கிறான். ஏற்காடுக்கு வந்து இருக்கும் மாயா, எப்படியாவது இவர்கள் இருவரையும் பிரித்து விட வேண்டும் என்பதற்காக அங்கேயே ஒரு அறை எடுத்து தங்கி இருக்கிறாள்.

காணாமல் போன ஃபோன்: ரேவதி ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சொல்கிறாள் உடனே கார்த்திகை இது தெரியாத ஊரு, நானும் கூட வருகிறேன் என்று சொல்ல. அதெல்லாம் எனக்கு தெரியும் நான் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கிட்டக்கூட சத்தியமா உன் பேர சொல்லவே மாட்டேன். நீ வந்து தான் காப்பாத்தணும் என்கிற அவசியமே எனக்கு இல்லை என்று சொல்லிவிட்டு சாப்பிடுவதற்காக வெளியே கிளம்புகிறாள். நீண்ட நேரமாகியும் ரேவதி வராததால் கார்த்திக் ரேவதி எங்கே சென்றால் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறான்.
ரேவதி ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு முடித்துவிட்டு பர்சை தேடும் போது, பர்சும் மொபைலும் காணாமல் போய்விடுகிறது உடனே ரேவதி அங்கு இருக்கும் மேலாளரிடம் நான் இந்த ஊர்களுக்கு சுற்றிப் பார்ப்பதற்காக வந்தேன். என்னுடைய மொபைலும் பர்சும் காணவில்லை என்று விளக்கம் கொடுக்கிறாள். ஆனால், அதை எல்லாம் கேட்காத அந்த ஹோட்டல் உரிமையாளர் இதே வேலையா போச்சு எல்லாரும் இதே கதையை தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல அந்த நேரமாக பார்த்து மாஸாக என்ட்ரி கொடுக்கிறான் கார்த்திக். இவங்களை பார்த்தா சாப்பாட்டுக்கு காசு கொடுக்காதவங்க மாதிரியா தெரியுது. அவங்க பர்சு காணாமல் போய்விட்டது, அதுக்கான பணத்தை நான் கொடுக்கிறேன் என்று கொடுக்கிறான்.
வெளியில் போய் படு: வெளியில் எங்குமே செல்லாமல் ரேவதி அறையில் தனியாக இருக்க, அப்போது கார்த்திக் ரூமுக்கு வந்து காணாமல் போன பர்ஸ் மற்றும் ஃபோனை கொடுக்கிறான். இதை கண்டுபிடித்து வருவதற்கு தான் நேரமாகிவிட்டது என்று சொல்ல பரவாயில்லையே உனக்கு இந்த விஷயம் கூட தெரிஞ்சு இருக்கு. நீ அவ்வளவு மோசமானவன் கிடையாது. பர்ஸை கண்டுபிடித்து கொடுத்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்கிறாள். நான் நன்றி சொன்னதுனால அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு நீ என்கிட்ட வரக்கூடாது. இது நார்மலா யாராவது நமக்கு ஒரு உதவி செய்த அவங்களுக்கு சொல்ற நன்றி மட்டும்தான் என்று சொல்லி வெறுப்பு ஏத்துக்கிறாள். நானும் நார்மலா தான் எடுத்துக் கொள்கிறேன் என்று பதிலுக்கு பேசுகிறான்.
உடனே ரேவதி, சரி நேரமாச்சு நான் தூங்கணும் நீ வெளியிலபோ என்று சொல்கிறாள். உடனே கார்த்திக், நான் எங்கே போவது. நான் வெளியில ரூம் கேட்டுவிட்டேன் இந்த ஹோட்டல்ல வேற ரூம்மே இல்ல. இதனால நான் இன்னைக்கு நீங்க மேடையில் படுத்துக்கோங்க நான் சோபால படுத்துகிறேன் என்று சொல்கிறான். இதைக்கேட்ட ரேவதி
ஒரே அறையில் உன் கூட படுக்கறதுக்கு எனக்கு விருப்பமே இல்ல என்று சொல்கிறாள். உடனே கார்த்திக் பிடிக்காதவங்க கூட ஒரே ரூம்ல இருக்கிறது சங்கடமா தான் தெரியும் இருந்தாலும் வேற வழி இல்ல நாளைக்கு வேற ரூம் கிடைச்சுச்சுன்னா நான் போயிடுறேன் இப்போதைக்கு நான் சோபாவில் படுத்துக் கொள்கிறேன் என்கிறான்.

ரேவதிக்கு முத்தம் கொடுத்த கார்த்திக்: அப்போது ரேவதி தூங்கிக் கொண்டு இருக்க கார்த்திக் அருகில் வந்து முத்தம் கொடுப்பது போல கனவு வர, ரேவதி கிட்ட வராதே... கிட்ட வராதே என்று கத்துகிறாள். இதை கேட்ட கார்த்திக் அருகில் வந்து என்னாச்சு என்று, ரேவதியை எழுப்ப பதறி அடித்துக்கொண்டு எழுந்திருக்கிறாள். நீ ஏன் என் பக்கத்துல வந்தே என்று கேட்க நீங்க, தூக்கத்துல பயந்து கத்துனீங்க அதுக்காக தான் நான் வந்தேன் என்று சொல்கிறான். ஓ... அப்ப கனவா என்று ரேவதி, பேச ஆமா அது எல்லாமே கனவு தான் இப்ப நடக்குறது தான் நிஜம் என்று சொல்கிறான். மறுபக்கம் மாயா, இவர்கள் இப்படியே இங்கே தங்கிவிட்டால் இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி விடும். இதனால் இவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டு காத்திருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











