கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், அபிராமிக்கு ஐஸ்வர்யாவின் கர்ப்பம் குறித்து நினைவுக்கு வர அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறாள். ஐஸ்வர்யா எங்கே போறோம் என்று கேட்க நீ கர்ப்பமா இருக்கேல அதான் ஹாஸ்பிடல் போய் செக்கப் செய்துட்டு வரலாம் என்று சொன்னதும் ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்
இதையடுத்து, ரியாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறாள், அவளும் ஒரு ஐடியாவை சொல்ல ஆனால், அந்த ஐடியா சொதப்பிவிட, அபிராமி ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர டாக்டர் அவளை செக் செய்துவிட்டு அவள் கர்ப்பமில்லை என்ற உண்மையை உடைக்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டதை நினைத்து பதற, கடைசியில் இது ஐஸ்வர்யா கண்ட பகல் கனவு என தெரிய வருகிறது. இதையடுத்து பரிசோதனை செய்யும் டாக்டரிடம் ஐஸ்வர்யா கெஞ்சி கூத்தாடி உண்மையை மறைக்க ஒப்புக்கொள்ள வைக்கிறாள். பிறகு டாக்டர் ஐஸ்வர்யா கர்ப்பம் என்றும், குழந்தை நன்றாக இருப்பதாகவும் பொய் சொல்கிறார்.
சாப்பாடு சரியில்லை: அடுத்ததாக மில்லில் தொழிலாளர்கள் சாப்பாடு வாங்க லைனில் நிற்க கார்த்தியும் அவர்களோடு லைனில் நிற்கிறார். மற்ற தொழிலாளர்கள் நீங்க எதுக்கு நிற்கிறீர்கள் என்று கேட்க நானும் தொழிலாளி தானே லைனில் இருந்து தான் சாப்பாடு வாங்கணும் என்று நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட சாப்பாடு நன்றாகவே இல்லை என்பதால், கோபப்படுகிறான். எப்போதும் இப்படிதான் சாப்பாடு போடுகிறார்கள் என்று தொழிலாளர்கள் சொல்ல கார்த்திக் மேனேஜரை கூப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.
மீண்டும் தோற்கும் ஆனந்த்: இதையடுத்து, ஆனந்த், கார்த்திக்கிடம் நீ முதலாளி என்று தெரிந்த கம்பெனியில் வேலை செய்யக்கூடாது, யாருனே தெரியாத ஒரு மில்லுக்கு போக வேண்டும் என்று சொல்ல, அதற்கும் கார்த்திக் ஓகே சொல்லி அங்கிருந்து புறப்படுகிறான். ஆனால், கார்த்திக் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட தொழிலாளர்கள் கார்த்திக்கிற்கு மாலை போட்டு அவரை வரவேற்கின்றனர். இதனால், மீண்டும் மீண்டும் ஆனந்த் கார்த்திக்கிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறான். இதையடுத்து அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











