ரௌடிகளால் கடத்தப்படும் அபிராமி.. கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஆனந்த் ரியாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதால், மனம் நொந்து போன அபிராமி, வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் சேவை செய்து வருகிறாள். அபிராமி மீண்டும் இந்த வீட்டுக்குள் வரக்கூடாது என்று திட்டம் போடும், ஐஸ்வர்யா மற்றும்

ராஜேஸ்வரி, ரியாவை தன்னுடன் கூட்டு சேர்க்க திட்டம் போடுகின்றனர். அவங்க மனசு கஷ்டமா இருந்தா ஒரு கோவிலுக்கு போவாங்க, இப்பவும் அவங்க அங்கே இருக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு. இதனால், அங்கேயே வச்சு அவங்கள தீர்த்து கட்டிவிட்டால் பிரச்சனை முடிஞ்சிடும். அப்புறம், மீனாட்சியை ஈசியா வீட்டை விட்டு வெளியே துரத்தி இந்த வீட்டை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வந்து விடலாம் என்று சொல்ல ரியா, ஐஸ்வர்யா பேச்சை கேட்டு பயந்து நடுங்குகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial April 1st Episode

மறுபக்கம், கார்த்திக் மீது சந்தேகப்படும் ஆனந்த், சொத்து எங்கே எனக்கு வந்துவிடப்போகிறது என்ற பயத்தில் நீ தான் அம்மாவை எங்கயோ மறைச்சு வச்சிட்டு காணவில்லை என்று நாடகம் ஆடுகிற, எனக்கு நல்லாவே தெரியும் என கார்த்திக்கிடம் சண்டையிடுகிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: அதாவது, இன்றைய எபிசோடில், அபிராமியை கோவில் கோவிலாக தேடும் கார்த்திக்கிற்கு அபிராமியை இருக்கும் இடம் தெரியவர காரை வேகமாக எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். கார்த்திக் கோவிலை நெருங்கும் நேரத்தில் அபிராமியை ரவுடிகள் கடத்தி விடுகின்றனர். உடனே கார்த்திக் வண்டி நம்பர் நோட் பண்ணி போலீசுக்கு தகவல் கொடுக்க கார்த்திக்கும், அந்த காரை தேடி அலைகிறான். பிறகு போலீஸ் கார்த்திக்கிற்கு போன் போட்டு ரவுடிகள் இதை ஏரியாவை விட்டு தாண்டி இருக்க வாய்ப்பு இல்ல, இங்கதான் எங்கேயாச்சும் இருக்கணும் சீக்கிரம் தேடி கண்டுபிடித்து விடலாம் பயப்படாம இருங்க என்று சொல்கின்றனர்.

குடோனில் அபிராமி: மறுபக்கம் ரவுடிகள் அபிராமியை ஒரு குடோனுக்குள் அடைத்து வைக்க, இங்கே தீபா அபிராமி அத்தையை இங்கதான் பக்கத்துல எங்கயாச்சும் மறைத்து வைத்திருக்கணும் ஏதாச்சு குடோன்களில் தேடிப் பார்க்கலாம் என்று சொல்ல போலீஸ் கார்த்திக், தீபா என அனைவரும் கிளம்பி செல்கின்றனர். போலீஸ் உடன் கார்த்திக் தீபா வருவதை பார்த்த ரவுடிகள் அபிராமியை அங்கிருந்து பொருட்களை வைத்து மூடி வைக்கின்றனர். கார்த்திக் குடோனுக்குள் நுழைந்து அபிராமியை தேடி பார்க்க எங்கும் யாரும் இல்லாததால் குழப்பம் அடைகிறான்.

மயக்கத்தில் அபிராமி: இந்த நேரத்தில் கண் வழிக்கும் அபிராமி கார்த்திக்கிற்கு எப்படியாவது தான் இங்கே இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் என முயற்சி செய்கிறாள். ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவள் சோர்ந்து இருந்ததால், அபிராமியால் எதுவுமே செய்யமுடியவில்லை. இதையடுத்து, அனைத்து இடத்திலும் தேடிப்பார்த்த கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வெளியே வரும்போது அபிராமி பக்கத்தில் இருந்த ஒரு பொருள் கீழே விழுகிறது. இந்த சத்தம் கார்த்திக்கின் காதில் விழுகிறது. இதையடுத்து, கார்த்திக் அபிராமியை தேடி கண்டு பிடிப்பானா இல்லையா என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X