கார்த்திக், ரேவதி கல்யாணம்..சாமுண்டீஸ்வரியிடம் மாட்டி கொண்ட அபிராமி.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: கார்த்திக் மற்றும் ரேவதிக்கும் நேற்று திருமணமானதைப்பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அப்போது, பெண் சாமியார் வர, கார்த்திக் அந்த பெண் சாமியாரை பார்த்து, இவங்க தீபாவிற்கு தெரிந்த சாமியாராச்சே, இவங்களுக்கு எப்படி
எனக்கு கல்யாணம் நடப்பது தெரியும் என்ற குழப்பத்தில் இருக்கிறான். பின் இருவரும் சாமியாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, இருவருக்கும் அந்த பெண் சாமியார் தாயத்தை கையில் கட்டி விடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், அபிராமி, பரமேஸ்வரி பாட்டிக்கு போன் செய்து திருமணம் எப்படி நடந்தது என்று கேட்க, நல்லபடியாக திருமணம் நடந்தது என்னுடைய பேரன் திருமணத்தை நான் கண் குளிர பார்த்து விட்டேன் என்று சொல்கிறாள். இதை கேட்டு அபிராமி என்னுடைய மகனின் திருமணத்தை என்னால் தான்பார்க்க முடிவில்லை என்று வருத்தப்படுகிறாள். இதையடுத்து, பரமேஸ்வரி பாட்டி கொஞ்சம் பொறுத்துக்கோ நான் கார்த்திக் கிட்ட இந்த விஷயத்தை சொல்லி பார்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்கிறாள்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இதைத்தொடர்ந்து, அய்யர் இவர்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் செல்லுங்கள், அந்த கோவிலில் வைத்து மெட்டி போடுவது, குங்குமம் வைப்பது என சில சடங்குகளை செய்யும்படி சொல்ல சாமுண்டீஸ்வரி பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு அழைத்து செல்கிறாள். இந்த தகவலை, மயில்வாகனம் பரமேஸ்வரி பாட்டியிடம் சொல்லி, அபிராமி அத்தையை அங்கு வர சொல்லி விடுங்கள். ரேவதி கார்த்திக்கூட கூடவே சாமுண்டீஸ்வரி அத்தையும் வருகிறார்கள். இதனால் அபிராமி அத்தையை மறைந்திருந்து பார்க்கச் சொல்லுங்கள் என்கிறான். இதையடுத்து பரமேஸ்வரி மற்றும் அபிராமி இருவரும் கோவிலில் கார்த்திக்காக காத்திருக்கிறார்கள் அப்போது அந்த இடத்திற்கு இருவரும் மணக்கோலத்தில் வருவதை பார்த்து, அபிராமி மிக மகிழ்ச்சி அடைகிறாள்.

zee tamil Karthigai Deepam

கோவிலில் நடந்த சடங்கு: கோவிலில் பரமேஸ்வரி பாட்டியை பார்த்து ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி மண்டபத்துல தான் உயிரை எடுத்திங்கனு பாத்தா கோவிலுக்கும் வந்து இருக்கீங்களே என்று சொல்கிறாள். அப்போது ரேவதி, பாட்டி ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் நடக்கல அட்லீஸ் இவங்க முன்னாடி இந்த சடங்குங்கள் நடந்தா, அவங்க கொஞ்சம் சந்தோஷ படுவாங்கம்மா உங்களுக்காக நான் எவ்வளவு விஷயத்தை பொறுத்துக்கிட்டேன். கடைசி நேரத்துல டிரைவர் ராஜாவை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னீங்க அதையும் நான் உங்களுக்காக செஞ்சுட்டேன். ஆனா எனக்காக நீங்க இந்த விஷயத்தை கூட செய்ய மாட்டீங்களா என்று ரேவதி வருத்தப்பட்டு சொல்ல. சாமுண்டீவரி வரையும் சரி எது வேணாலும் அவங்க செய்யட்டும். ஆனா, வாய தொறந்து எதுவுமே பேசக்கூடாது அமைதியா எல்லா விஷயத்தையும் செய்யட்டும் என்கிறார். இதையடுத்து, நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X