கார்த்திக்கை ரேவதி ஏற்றுக்கொள்வாளா? அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக், ரேவதியும் ஏற்காட்டில் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். அதே ஓட்டலில் ரேவதியின் தோழி அவளை பார்த்துவிட்டு, உனக்கு எப்போ கல்யாண ஆச்சு, ஏன் உன் கல்யாணத்திற்கு என்னை கூப்பிடவில்லை என்று கோவப்படுகிறாள். மேலும், உன் கணவர் எங்கே என்று கேட்க ரேவதி, கார்த்திக்கை கூப்பிட்டு, தோழிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். அதன் பிறகு ரேவதியின் தோழி, பார்த்து ரொம்ப நாளாச்சு வெளியே எங்கேயாவது போலாமா என்று கேட்கிறாள்.
உடனே ரேவதி, கணவருக்கு வேலை இருக்கு என்று சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு கார்த்திக் அங்கு வர ரேவதி, வேறு வழியில்லாமல், நேரடியாக கார்த்திக்கிடம் வெளியே போலாமா? உங்களுக்கு வேலை இருக்கா என்று கேட்க கார்த்திக், போலாமே நான் ஃப்ரீ தான் என்று சொல்லி விடுகிறான். இதனால் கடுப்பான ரேவதி, கார்த்திக்கிடம் ஏன் வேலை இருக்குன்னு சொல்ல வேண்டியது தானே என்று கோபப்படுகிறாள். அதன் பிறகு இவர்கள் அனைவரும் வெளியே சாப்பிட வருகின்றனர். அப்போது நீங்க ரெண்டு பேரும் எங்க மீட் பண்ணீங்க என்று தோழி , கேள்வி கேட்க கார்த்திக் நான் ரேவதி வீட்டில் டிரைவராக வேலை பார்த்தேன் என்று அந்த கதையை சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: அதைத்தொடர்ந்து, தோழியின் கணவர் அவருக்கு சொட்டர் வாங்கி கொடுக்க, தோழி கார்த்திக்கிடம் நீங்களும் அவளுக்கு ஏதாவது வாங்கி கொடுங்க என்று சொல்ல, கார்த்திக் ரேவதிக்காக ஸ்வெட்டர் ஒன்றை வாங்கி கொடுக்கிறான். தோழி முன் வேறு வழியில்லாமல், ரேவதி அதை வாங்கி போட்டுக்கொள்கிறாள். அப்போது, தோழி, இரண்டு பேரும் சேர்ந்து இருங்க என்று சொல்ல, ரேவதி தள்ளி நிற்கிறாள், உடனே தோழி, ஏய் ரேவதி, அவர் கையை பிடிச்சிக்கிட்டு, நல்லா சிரித்தபடி இருடி என்று சொல்ல, ரேவதி மறுக்க முடியாமல், ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கிறாள்.
இந்த சமயத்தில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையின் மீது கார் மோதி விட கார்த்திக் ஓடிப் போய் அந்த குழந்தைக்கு முதல் உதவி செய்து காப்பாற்றுகிறான். இதைப்பார்த்த தோழி, உண்மையில் உன் கணவர் ரொம்ப நல்லவராக இருக்கிறார். இப்படி ஒரு கணவர் கிடைக்க நீ கொடுத்துவைத்து இருக்க வேண்டும் என தோழி சொல்ல, கடுப்பான ரேவதி, மனதிற்குள், இவன் மற்றவர்களை ஏமாற்றுவதில் கில்லாடி, அது தெரியாம நீ பேசிக்கிட்டு இருக்க, இப்படித்தான் நடிச்சு என் அம்மாவை ஏமாற்றி கடைசியில் என் கழுத்தில் தாலி கட்டிவிட்டான் என புலம்பிக்கொண்டு இருக்கிறாள்."

அழகான போட்டோ: மறுபக்கம் ரேவதியின் தோழி, அந்த ஃபோட்டோவை, சாமுண்டீஸ்வரிக்கு அனுப்பி வைக்க, அதைப்பார்த்து சாமுண்டீஸ்வரி மகிழ்ச்சியடைந்து, அந்த போட்டோவை அனைவரிடத்திலும் காட்டுகிறாள். இதைப்பார்த்த ராஜராஜன் மகிழ்ச்சி அடைகிறான். இதைப்பார்த்த சந்திரகலா, அதிர்ச்சி அடைந்து கார்த்திக்கும் ரேவதியும் சேர்ந்துவிட்டால், அதன் பிறகு இரண்டு பேரையும் பிரிக்கவே முடியாதே, இவங்களை பிரிக்க போன மாயா அங்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்கா" என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











