ரியா குறித்து தெரிய வந்த ரகசியங்கள்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், மில்லில் சாப்பாடு சரியில்லை என்று கார்த்திக் மேனேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மேனேஜர் இங்கு சாப்பாடு இப்படித்தான் இருக்கும், ஏன் எதுக்குன்னு கேட்கக்கூடாது, நாங்க போடுறதை தான் சாப்பிடணும் என்று திமிராக பேச, ஓனரை கூப்பிடுங்க என்று சத்தம் போட்டு, காண்ட்ராக்டரை மாத்துங்க என்றார்.
ரியா மதுவை சந்தித்து பேச, அதை மீனாட்சியும், மைதிலியும் பார்த்து விடுகின்றனர். அதைத்தொடர்ந்து மதுவுக்கு வலிப்பு வந்து, கீழே விழ, ரியா அவர் யாருன்னு எனக்கு தெரியாது என்று அங்கிருந்து நழுவி வருகிறாள். பிறகு மீனாட்சி மற்றும் மைதிலி மதுவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து, உங்களுக்கும் ரியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரிக்க, ரியா பற்றிய உண்மைகளை உடைக்கிறான் மது. இதையடுத்து இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில்: இதையடுத்து, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா மற்றும் ரியா கூட்டு சேர்ந்து இந்த சபதத்தில் கார்த்தியை எப்படியாவது தோற்க வைக்கணும். அவன் தோத்துட்டா உன்னுடைய பிரச்சனை என்னுடைய பிரச்சனை எல்லாமே சரியாகிவிடும் என்று பேசிக் கொள்கின்றனர். மறுபக்கம் கார்த்திக் வீட்டுக்கு வர அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து சமையல் செய்ய இதை பார்த்தாயா அபிராமி மனதில் இடம் பிடிக்க நாம் ஏதாவது பண்ணலாம்னு பார்த்தா இந்த தீபா கூடவே இருக்கா என கடுப்பாகிறாள்.
நடக்கக்போவது என்ன: அடுத்து மீண்டும் மில் காட்டப்பட தொழிலாளர்கள் எல்லோரும் பாட்டு போட்டு வேலை செய்ய ஆனந்த் என்ன இதெல்லாம் என்று கேள்விக்கு கார்த்திக் காலையில ரெண்டு மணி நேரமா மிஷின் வேலை செய்யல அதனால கம்பெனிக்கு நஷ்டம் வரக்கூடாது என ஓவர் டைம் வேலை பாக்குறாங்க. அதனால உனக்கு என்ன பிரச்சனை என்று பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து, தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











