நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், மில்லில் அனைவரும் பாட்டு கேட்டுக்கொண்டு வேலை செய்வதை பார்த்து கடுப்பான ஆனந்த், அனைவரும் கார்த்திக்கிடம் வாக்கு வாதம் செய்கிறான். உடனே காலையில ரெண்டு மணி நேரமா மிஷின் வேலை செய்யல அதனால கம்பெனிக்கு நஷ்டம் வரக்கூடாது என அனைவரும் ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள் என்றான். இதையடுத்து, இன்று என்ன நடக்கக்போகிறது என்று பார்க்கலாம்.
இதையடுத்து, கார்த்திகை தீபம் சீரியலில் இன்று ,கார்த்தி செய்த விஷயத்தால் தொழிலாளர்கள் எல்லாரும் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர். அடுத்ததாக வேலை முடிந்து அருண் மற்றும் ஆனந்த் வீட்டிற்கு வர இன்னைக்கு எப்படி போச்சு என்று ரியா கேட்க அந்த கார்த்திக்கை நம்மளால தோற்கடிக்க முடியாது போல, எல்லாரும் அவனை கொண்டாடுறாங்க என்று சொல்கின்றனர்.

இன்றைய எபிசோடு: பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர அபிராமி அவனை வரவேற்று சாப்பிட கூப்பிடுகிறாள், ஐஸ்வர்யா அவர் தான் இந்த சொத்துஉரிமை கொண்டாட மாட்டேன்னு சொன்னாரு, அவரை டைனிங் டேபிளில் உட்கார வைத்து சாப்பாடு கொடுக்கறீங்க என்ன என்று கேட்கிறாள். இதனால் கடுப்பாகும் அபிராமி ஆயிரம் தான் பிரச்சனை நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி அவன் என்னுடைய பிள்ளை, அவனுக்கு நான் சாப்பாடு சமைத்து கொடுப்பேன், அதை தடுக்கிற உரிமை உனக்கு மட்டுமில்ல யாருக்குமே கிடையாது என்று சொல்கிறாள்.
கார்த்திக்கை கிண்டலடிக்கும் தீபா: மேலும், வீட்டில் ஏசி ரிப்பேர் ஆகிவிட்டது, என்று தீபா கார்த்திக்கிடம் சொல்ல, ஏசி மெக்கானிக்கை கூப்பிட்டு என்ன பிரச்சனை என்று பார்க்க வேண்டியது தானே என சொல்கிறான். உடனே தீபா, நம்ம வீட்டுலேயே பெரிய மெக்கானிக் இருக்கும் போது எதற்கு ஏசி மெக்கானிக்க கூப்பிட வேண்டும் என்று சொல்லி தீபா கார்த்திகை கிண்டல் அடிக்கிறார். இதையடுத்து, ரூமுக்கு வரும் கார்த்திக் அசதியில் படுத்து இருக்க, ஏசி இல்லாமல் எப்படி இவர் தூங்குவார் என்ற கார்த்தியின் காலை அழுத்தி விடுகிறாள்.
வெட்கப்படும் தீபா: இதையடுத்து, கார்த்திக் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, அவன் அருகில் சென்று முத்தம் கொடுக்க செல்ல, கார்த்திக் சற்று அசைந்ததும் வெட்கப்பட்டுக்கொண்டு, தனக்கு தானே பேசிக் கொள்கிறாள். அப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











