ரேவதியை மலை இருந்து கீழே தள்ளி விட்ட ரௌடி.. கார்த்திக் காப்பாற்றுவாரா? கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஹனிமூனுக்காக ஏற்காடுக்கு செல்கின்றனர். இதை தெரிந்து கொண்ட, மாயா, இதே ஓட்டலில் அறை எடுத்து தங்கிவிடுகிறாள். பின் சரியான நேரம் பார்த்து ரேவதியை கடத்தி விடுகிறாள். கார்த்திக் ரேவதியை எங்கு தேடியும் கிடைக்காததால், கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ரேவதியை காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்கிறான். போலீஸ் நீங்க காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? சில பேர் பிடிக்காமல் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு தற்கொலை பண்ணிக்கிறாங்க என்று சொல்கிறார்கள்.
இதையடுத்து, சாமுண்டீஸ்வரியிடம் மயில்வாகனம், அத்தை நான் சொல்றதை கேட்டு கோவப்படாதீங்க, ரேவதி இங்கே இருக்கும் போதோ, ராஜாவை திட்டிக்கிட்டே இருப்பாங்க. அப்படி இருக்கும் போது, ஹனிமூன்ல நிச்சயமாக கோவம் தான் படுவாங்க, இதனால், நீங்க அடிக்கடி ரேவதிக்கு ஃபோன் போட்டு, என்ன விஷயம்னு கேட்டுக்கோங்க அப்போ தான் ரேவதி, கோவப்படாம இருக்கும் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி அதுவும் சரி தான், நான் ஃபோன் பண்ணி பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு ரேவதிக்கு ஃபோன் செய்கிறாள். ஆனால், ரேவதியின் ஃபோன் ஆப் என்று வர, கார்த்திக்கு ஃபோன் செய்து என்ன மாப்பிள்ளை எல்லாம் ஓகே தானே.. ரேவதி ஒகே தானே என்று விசாரிக்கிறாள்.
ரேவதியிடம் ஃபோனை கொடுக்க சொல்ல கார்த்திக், நான் வெளியில் இருக்கிறேன், ரூமுக்கு போனதும் போன் போட்டு தருகிறன் என்று சொல்லி சமாளிக்கிறாள். அடுத்து போலீஸ் ஸ்டேனில் இருந்து, மலை அடிவாரத்தில் ஒரு பெண்ணின் உடல் கிடக்கிறது என்றும், அந்த பெண் புது தாலி அணிந்து இருப்பதால், அது ஒருவேளை உங்கள் மனைவியாக இருக்கலாம் என்று போலீஸ் சொல்ல, அதைக்கேட்டு, கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். மனதிற்குள், அது நிச்சயமாக ரேவதியாக இருக்காது, அவள், தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என நினைத்துக்கொண்டே, போலீசார் சொன்ன இடத்திற்கு செல்ல, போலீசார் கார்த்தியை அழைத்து சென்று அது ரேவதியா என அடையாளம் காட்ட சொல்கின்றனர். கார்த்திக் முகத்தை திறந்து பார்த்துவிட்டு, அது ரேவதி இல்லை என அறிந்து நிம்மதி அடைகிறான்.
கார்த்திகை தீபம்: அதன்பின் கார்த்திக்கு மாயாவிடம் இருந்து ஃபோன் வருகிறது. அதில், ரேவதியை நான் தான் கடத்தி வச்சிருக்கேன். மகேஷ் எங்கே இருகான்னு சொல்லிடு, இல்லனா ரேவதியை கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறாள். உடனே கார்த்திக், உண்மையில் மகேஷ் எங்கே என்று எனக்கு தெரியாது, நான் மகேசை கடத்தவில்லை என்று சொல்ல மாயா, அதை நம்பாமல், இப்போ மகேஷ் பட்டும் வரவில்லை என்றால், ரேவதியை நீ உயிரோடவே பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறாள். இதையடுத்து, கார்த்திக் தனது போலீஸ் நண்பனான சரவணனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லுகிறான். மேலும், என்னையும் ரேவதியையும் பின் தொடர்ந்து வந்து, இப்போது ரேவதியை கடத்தி விட்டதாக சொல்கிறாள். இப்போது தான் இந்த எண்ணில் இருந்து எனக்கு போன் வந்தது என்றுசொல்ல, உடனே சரவணன், நீங்க கவலைப்படாமல் இருங்க கார்த்திக் நான், லோகேஷனை கண்டுபிடித்துவிட்டு உங்களுக்கு தகவல் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்கிறார்.
மாயாவின் பிளான்: பின் சிறிது நேரம் கழித்து, கார்த்திக்கிற்கு போன் செய்த சரவணன் அந்த என், உங்களிடம் இருந்து அரைகிலோ மீட்டரில் தான் இருக்கு என்று சொல்லி, மாயா இருக்கும் லோகேஷனை அனுப்புகிறார். இதையடுத்து, அந்த லோகேஷன் இருக்கும் இடத்தை தேடி கார்த்திக் வருகிறான். மறுபக்கம், ரேவதியை கடத்திய அடியாளின் மனைவியிடம் இருந்து அவனுக்கு ஃபோன் வருகிறது. அதில். வீட்டு ஓனர் வாடகை கேட்டு பிரச்சனை செய்கிறார். நான் வீட்டில் தனி ஆளாக கஷ்டப்பட்டுக்கொண்ட இருக்கிறேன், எனக்கு பயமாக இருக்கு நீ சீக்கிரம் கிளம்பி வா என்று சொல்லி அழைக்க, அவன், மற்ற அடியாட்களிடம், ரேவதிளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, வீட்டிற்கு கிளம்பி செல்கிறான்.

மலை உச்சியில் உயிருக்கு போராடும் ரேவதி: கார்த்திக் ரேவதியை தேடி செல்லும் போது, கார் விபத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய பெண்ணை சந்திக்கிறான். கார்த்திக் காப்பாற்றியது ரௌடியின் குழந்தை தான் என்று தெரிய வர, அந்த ரௌடி கார்த்தியிடம் உங்க மனைவி ரேவதியை கடத்தியது நான் தான், மாயா பணம் கொடுப்பதாக சொல்லி, ரேவதியை கடத்த சொன்னார்கள். ஆனால், நீங்க என் மகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறீர்கள், உங்களுக்கு நான் துரோகம் செய்யக்கூடாது என்று ரேவதி இருக்கும் இடத்தை நான் காட்டுகிறேன் என்று கார்த்திக்கை பைக்கில் அழைத்து செல்கிறான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயா, கார்த்திக்கு விஷயம் தெரிந்து விட்டது, இந்த ரௌடி காட்டிக்கொடுத்துவிட்டான், ஆத்திரத்தில் கொந்தளித்த மாயா, உடனடியாக ரவுடிகளுக்கு ஃபோன் செய்து ரேவதியை கொன்னுடுங்க என்று ஆர்டர் போடுகிறாள்.
மேலும், மாயாவை தேடி அந்த இடத்திற்கு கார்த்திக் செல்ல, அந்த குடோனில் யாருமே இல்லாததை பார்த்து கார்த்திக் ஆத்திரப்படுகிறான். அப்போது, சரவணன், அந்த இடம் வேறு இடத்தில் டிராவல் ஆகிக்கொண்டு இருக்கிறது. என வேறு ஒரு லோகேஷனை அனுப்புகிறார். மற்றொரு பக்கம் மாயா, கார்த்திக்கிற்கு போன் செய்து, என்ன கார்த்திக், ரேவதியை எப்படியாவது கண்டுபிடித்துவிடலாம் என பிளான் போடுறியா... மகேஷ் வராமல் ரேவதி உனக்கு உயிரோட கிடைக்க மாட்டாள் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிடுகிறாள்.
இதையடுத்து ரௌடிகள், மாயா சொன்னது படி ரேவதியை தீர்த்துக்கட்டுவதற்காக மலை உச்சிக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது, ரேவதி, நீங்க எல்லாம் யார்... எதற்காக இப்படி செய்கிறீர்கள். எங்க அம்மா யாருனு தெரியுமா என்று பயத்தில் கத்துகிறாள். அப்போது, ஒரு ரௌடி, நீ இப்போ சாக போற, அப்படி இருக்கும் போது, யார் உன்னை கொல்ல சொன்ன உனக்கு என்ன, அதை தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப்போற, ஒழுங்க சத்தமே இல்லமல் செத்துப்போ என்று மலையில் இருந்து தள்ளி விடுகிறான். லோகேஷனை பார்த்து வந்த கார்த்திக், கார் நின்று கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, ரேவதி ரேவதி என கத்திக்கொண்டு வருகிறான். அப்போது, ரேவதி ஒரு ஒரு பாறையை பிடித்து கொண் டு உயிருக்கு போராடுகிறாள். ரேவதியின் உயிரை கார்த்திக் காப்பாற்றினாரா... இல்லையா என்பதை கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


Click it and Unblock the Notifications











