கார்த்திக்கு எதிராக கூட்டு சேர்ந்த குடும்பம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கம்பெனியில் தொழிலாளி ஒருவருக்கு அடி பட கார்த்திக் அவருக்கு உதவி செய்கிறார். இதையடுத்து, தொழிலாளருக்கு உதவி செய்ததை வைத்து அவன் வேலையே செய்ய மாட்டுறான் என்று சொல்லி வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்ப பிளான் போடுகின்றனர் அருண் மற்றும் ஆனந்த்.

பிறகு இந்த விஷயத்தை தொழிலாளர்களிடம் சொல்ல அதற்கு அனைவரும் மறுப்பு தெரிகின்றனர். கார்த்திக் தம்பி எங்களுக்கு நல்லது தான் பண்ணாரு, அடி பட்டவருக்கு உதவியது தப்பா என்று கேட்கின்றனர், ஆனாலும் கார்த்தியை வேலையில் இருப்பது தூக்குவது உறுதி என்று சொல்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் கார்த்திக் தம்பியை வேலையில் இருந்து எடுத்தால் எங்களையும் வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்புங்க என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial April 26th Episode

இன்றைய எபிசோடு: இதையடுத்து, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்தியை வேலையில் இருந்து தூக்க போவதாக சொன்னதும் தொழிலாளர்கள் அவரை வேலையிலிருந்து எடுத்தால் எங்களையும் வேலையிலிருந்து எடுத்து விடுங்க என்று வாக்குவாதம் செய்ய அப்படியா சரி உங்க எல்லாரையும் வேலையிலிருந்து தூக்கிடுறேன் என ஆனந்த் சொல்கிறான். உடனே அருண் ஆனந்தை தனியாக அழைத்து சென்று உனக்கு என்ன பைத்தியம் பிடித்து இருக்கா. எல்லாரையும் வேலையை விட்டு தூக்கிட்டா கம்பெனிக்கு பெரிய லாஸ் ஆகிடும். எடுத்திருக்க ஆர்டரையும் முடிக்க முடியாம போயிடும் என்று திட்ட ஆனந்த் வேறு வழி என்று கார்த்திக்கை வேலையிலிருந்து தூக்கும் முடிவை கை விடுகிறான்.

கூட்டு சேர்ந்த குடும்பம்: அதன் பிறகு அருண் ஆனந்த் ரியா மற்றும் ஐஸ்வர்யா என நான்கு பேரும் கூட்டு சேர்ந்து கொண்டு கார்த்திகை எதுவுமே பண்ண முடியல என்று அருண் சொல்ல ரியா இது அவனுக்கு பழக்கப்பட்ட கம்பெனி, அவள் முதலாளி என்பதால் தொழிலாளர்கள் அவனை விட்டுக் கொடுக்காமல் தான் இருப்பார்கள். இதனால், கார்த்திகை வேற கம்பெனிக்கு அனுப்பனும், கார்த்திக் யாருனே தெரியாத கம்பேனிக்கு அனுப்பனும் என்று ரியா சொல்ல, அனைவரும் இதுதான் சரியான முடிவு சரிதான் என யோசிக்கின்றனர். பிறகு அருண் அப்படி எந்த கம்பெனிக்கு அனுப்புறது என்று யோசிக்க ஆனந்துக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X