குடும்பத்திற்குள் சண்டையை மூட்டி விடும் ரியா..தீபா கொடுத்த ட்விஸ்ட்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், அருண், ஆனந்த், ரியா மற்றும் ஐஸ்வர்யா என நான்கு பேரும் கூட்டு சேர்ந்து கொண்டு கார்த்திக்கை எப்படி மில்லில் இருந்து தூக்குவது என்று பிளான் போடுகிறார்கள்.
அப்போது ஆனந்த், கார்த்திக்கை எதுவுமே பண்ண முடியல என்று சொல்ல, அப்படி எல்லாம் இல்ல, சரியான பிளான் பண்ணா கார்த்திக்கை மில்லில் இருந்து துரத்திவிடலாம் என்கிறார். மேலும், மில்லில் இருக்கும் தொழிலாளர்களுக்கு கார்த்திக் முதலாளி என்பது தெரிவதால், அவனை விட்டுக் கொடுக்காமல் தான் இருப்பார்கள். இதனால், கார்த்திக்கை வேற கம்பெனிக்கு அனுப்பனும், கார்த்திக் யாருனே தெரியாத கம்பேனிக்கு அனுப்பனும் என்று ரியா சொல்ல, அனைவரும் இதுதான் சரியான முடிவு சரிதான் என யோசிக்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பிளான் போட்ட ரியா: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரியா மீனாட்சியின் அப்பா அம்மாவை அபிராமியுடன் பிரச்சனை செய்ய வைக்கலாம் என்று பிளான் போட்டு அவர்களுக்கு போன் போட்டு ஆனந்திற்கு இரண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு என்று போட்டுக் கொடுக்கிறாள். இதை கேள்விப்பட்ட மீனாட்சியின் அப்பா அம்மா வீட்டுக்கு வந்து, என் மகள் வாழ்க்கையை இப்படி பண்ணிட்டீங்களே, நீங்க இப்படி பண்ணலாமா.. உங்கள நம்பி தானே எங்க பொண்ண அனுப்பினோம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.
எந்த பிரச்சனையும் இல்ல: தீபாவும் மைதிலியும் இதெல்லாம் ஐஸ்வர்யா மற்றும் ரியாவின் வேலையாகத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு, ரியாவை இழுத்து சென்று வெளியே வராதபடி ஒரு ரூமுக்குள் பூட்டி வைக்கின்றனர். பிறகு மீனாட்சி தன்னுடைய அம்மாவிடம் என்ன சொல்லாமல் வந்து இருக்கீங்க என்று கேட்கிறாள். எந்த பிரச்சினையும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் என்று சமாளிக்கிறாள். அபிராமியும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஏதாவது பிரச்சனைனா நானே சொல்லி இருப்பேன் என்று கூறுகிறார்.
சமாதானமான பெற்றோர்: இதையடுத்து மீனாட்சி நீங்க நம்பலனா ஆனந்த் கிட்ட கூட பேசி பாருங்க என்று போன் போட்டு என்னங்க அப்பா வந்து இருக்காங்க நமக்கு எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்லுங்க என்று போனை கொடுக்க ஆனந்தும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல மீனாட்சியின் அப்பா அம்மா நிம்மதி அடைகின்றனர்.
அதன் பிறகு அவர்கள் கிளம்பிச் செல்ல மீண்டும் மீனாட்சி ஆனந்துக்கு போன் போட்டு இந்த குடும்பத்தோட மானம் போகக்கூடாது என்று தான் உங்களுக்கு போன் பண்ணி பேச சொன்னேன். இத நீங்க அட்வான்டேஜா எடுத்துக்காதீங்க என்று சொல்லி திட்டிவிட்டு போனை வைக்கிறாள். அதன் பிறகு ரூமில் அடைத்து வைத்திருந்த ரியா வெளியே வர, ஐஸ்வர்யா இந்த நேரம் பார்த்து எங்க போன என்று கோபப்பட நடந்ததை சொல்கிறாள் ரியா. இதையடுத்து கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ஜீ தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











