மாயாவின் ஆடுபுலி ஆட்டம்.. ரேவதிக்கு தெரியவந்த உண்மை.. கார்த்திகை தீபம்!

சென்னை: வெள்ளிக்கிழமை எபிசோடில், கார்த்திக் மாயாவை காணவில்லை என்று தேடிக்கொண்டு இருக்க, கார்த்திக்கு மாயாவிடம் இருந்து போன் வருகிறது. அதில், ரேவதியை நான் தான் கடத்தி வச்சிருக்கேன். மகேஷ் எங்கே இருகானு சொல்லிடு, இல்லனா ரேவதியை கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறாள். உடனே கார்த்திக், உண்மையிலேயே மகேஷ் எங்கே என்று எனக்கு தெரியாது, நான் மகேசை கடத்தவில்லை என்று சொல்ல மாயா, அதை நம்பாமல், இப்போ மகேஷ் மட்டும் வரவில்லை என்றால், ரேவதியை நீ உயிரோடவே பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறாள்.

கார்த்திக் தனது போலீஸ் நண்பன் சரவணனின் உதவியுடன், மாயா இருக்கும் லொகேஷனை தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு போகும் போது, அதை தெரிந்து கொண்ட மாயா. அங்கிருந்து தப்பித்து, ரௌடிகளுக்கு போன் போட்டு, ரேவதியை கொன்றுவிடுங்கள் என்று சொல்கின்றனர். இதையடுத்து. ரௌடிகள் ரேவதியை மலை உச்சிக்கு அழைத்து சென்று, அங்கிருந்து தள்ளி விடுகின்றனர், ரேவதி ஒரு பாறையை பிடித்து கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள் இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: ரேவதி, மலை உச்சியில் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்க, சரியான நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு வந்த கார்த்திக் ரௌடிகளை அடித்து விரட்டிவிட்டு, ரேவதியை காப்பாற்றி மேலே தூக்குகிறான். பின் கார்த்திக், இந்த வேலையை செய்தது எல்லாம் மாயா, அவள் தான் எனக்கு போன் போட்டு, மகேஷ் வரவில்லை என்றால், நான் ரேவதியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினாள் என்று சொல்கிறான். ஆனால், இதை நம்ப மறுக்கும் ரேவதி, உடனே மாயாவுக்கு போன் போட்டு நீங்க தான் என்னை கொல்ல ஆட்களை ஏற்பாடு பண்ணீங்களா... என்று கேட்க மாயா நான் ஏன் ரேவதி, அப்படியெல்லாம் பண்ண போறேன் என்று நல்லவள் போல் வேஷம் போடுகிறாள்.

மாயாவின் பிளான்: உடனே ரேவதி, கார்த்தியை திட்டி விடுகிறாள். பிறகு கார்த்திக் இங்கு நடந்த பஞ்சாயத்து எல்லாம் போதும், ஊருக்கு கிளம்பலாம் என்று சொல்கிறான் கார்த்திக். மறுபக்கம், மாயா ரவுடிகளிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள். ரேவதிக்கு என் மேல் ஏதோ சந்தேகம் வந்து இருக்கு, அவள் எனக்கு ஃபோன் போட்டு, நீங்க நான் என்னை கொல்லப்பாத்தீங்களா.. என்று கேட்கிறாள். அந்த சந்தேகத்தை வளரவிடக்கூடாது என பேசிக்கொண்டு இருக்க. உடனே, ரவுடிகள் அந்த கார்த்திக் மட்டும் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், இந்நேரம் நீங்கள் நினைத்தது நடந்து இருக்கும். ஆனால், அந்த கார்த்திக் வந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டான் என்று சொல்கின்றனர். உடனே, மாயா, இவர்கள் இருவரையும் இப்படியே விட்டு விடக்கூடாது.

zee tamil Karthigai Deepam

நான் இப்போ ரேவதி எங்கே இருக்கிறார் என்று பார்க்கிறேன் என்றே சொல்லிவிட்டு மாயா ரேவதிக்கு போன் செய்கிறாள். நீ சொன்னதெல்லாம் நினைச்சு பார்க்கும்போது எனக்கு ரொம்பவே பயமாயிருக்கு ரேவதி, இது எல்லாம் கார்த்திக்கின் வேலையாத் தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. கார்த்திக மேலத்தான் எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு இருந்தாலும், நீ கார்த்தி கிட்ட ஜாக்கிரதையாக இரு அவனை நீ நம்பாதே. இதுக்கு முன்னாடி கார்த்திகை பத்தி நான் எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவே இல்ல கடைசில என்ன ஆச்சு பாத்தியா... மகேசை கடத்தி வச்சிக்கிட்டு ஒன்னாஅவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான். நீ யாரையும் அவளோ சீக்கிரம் நம்பிடாத ரேவதி என்று சொல்கிறாள். இதை கேட்ட ரேவதி, சரியக்கா நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்க ஜாக்கிரதையா இருங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அறையில் இருந்து கீழே பார்க்க அப்போது, மாயா யாரே ஒருவரை இடித்துவிட்டு வேக வேகமாக ஓடுவது போல இருக்கிறது. உடனே ரேவதி, அவங்களை பார்த்தா... மாயா மாதிரி இருக்கே. இவங்க ஏன் .. ஏற்காட்டுக்கு வந்தாங்க, அப்படியே வந்து இருந்தாலும், இங்கே தான் இருக்கேன் என்று சொல்லி இருக்கலாமே, ஏன் ஊர்ல இருக்கேனு பொய் சொன்னாங்க, இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று ரேவதிக்கு சந்தேகம் வர, மாயாவை பின் தொடர்ந்து சொல்கிறாள்.

வசமாக மாட்டிய மாயா: வெளியே வந்த மாயா, ஒரு ஆட்டோவில் ஏறி செல்ல, ரேவதி வேறு ஒரு ஆட்டோவில் மாயாவை பின் தொடர்ந்து செல்கிறாள். அப்போது மாயா, ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் இறங்கி செல்ல, அதைப்பார்த்த ரேவதியும், ஆட்டோ டிரைவரை நீங்க போங்க என்று சொல்ல, அவர், இந்த இடத்தில் தனியாக போகாதம்மா, எதுக்கு வம்பு என்று சொல்ல, அப்போ நீங்க மறைந்து இங்கேயே இருங்க என்று சொல்லிவிட்டு, குடவுனுக்கு வருகிறாள் ரேவதி, அப்போது, மாயா உள்ளே ரேவதியை கடத்திய ஆடி ஆட்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். அந்த ரேவதிக்கு இன்னும் என் மேல சந்தேகம் வரல, அவ என்னை இன்னும் நம்புற. அந்த கார்த்தி மட்டும் வரவில்லை என்றால், இந்நேரம் எல்லாம் சரியா முடிந்து இருக்கும், அவன் வந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டான் என்று சொல்கிறாள். இதை ஒட்டுக்கெட்ட ரேவதி, அப்போ கார்த்திக் சொன்னது எல்லாம் உண்மை தானே, மாயா நான் என்னை கொல்லப்பார்த்தாளா... இது தெரியம நான் கார்த்திக்கை சந்தேகப்பட்டேனே. எனக்கு வர கோவத்திற்கு இந்த மாயாவை பளார் பளார் என்று அடிக்க வேண்டும் என்று ஆத்திரம் வருகிறது. இருந்தாலும், இப்போ நமக்கு ஆதாரம் தான் முக்கியம் என்று மாயா, ரௌடிகளுடன் பேசுவதை, ரேவதி வீடியோ எடுக்கிறாள்.

பின் இதுக்கு மேல இங்கே இருந்தால், நாம மாட்டிக்கொள்வோம் என முடிவு செய்த ரேவதி, ஆட்டோவிற்கு வந்து விடுகிறாள். பின், கார்த்திக் எத்தனை முறை மாயா நல்லவ இல்லை என்று சொன்னார். நான் தான் நம்பவே இல்லை. இவ்வளவு ஒரு மோசமானவளான மாயா... இவ சொன்னதை நம்பி நான் கார்த்திகை சந்தேகப்பட்டுவிட்டேனே என நினைத்துக்கொண்டு ஆட்டோவில் செல்கிறான். ரேவதிக்கு ஏற்கனவே மலை ஏற்றியில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த போது, கார்த்திக் காப்பாற்றியதால், அவர் மீது ஒரு அன்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஆன்பு கூடிய விரைவில் ரேவதிக்கு கார்த்திக் மீது ஒரு காதலாக மாறும்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X