தீபாவிடம் குல்பி ரகசியம் சொன்ன கார்த்திக்..ஆட்டோவில் செம ரொமான்ஸ்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ரியா மீனாட்சியின் அப்பா அம்மாவிற்க்கு போன் போட்டு, ஆனந்திற்கு இரண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு என்று போட்டுக் கொடுக்கிறாள். இதை கேள்விப்பட்ட அவர்கள், வீட்டிற்கு வந்து அபிராமியிடம் மகள் வாழ்க்கையை இப்படி பண்ணிட்டீங்களே, நீங்க இப்படி பண்ணலாமா.. உங்கள நம்பி தானே எங்க பொண்ணை அனுப்பினோம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

தீபாவும் மைதிலியும் இதெல்லாம் ஐஸ்வர்யா மற்றும் ரியாவின் வேலையாகத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு, ரியாவை இழுத்து சென்று வெளியே வராதபடி ஒரு ரூமுக்குள் பூட்டி வைக்கின்றனர். பிறகு மீனாட்சி, எனக்கும் ஆனந்திற்கும் எந்த பிரச்சினையும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் என்று சமாளிக்கிறாள். இதையடுத்து மீனாட்சி நீங்க நம்பலனா ஆனந்த் கிட்ட கூட பேசி பாருங்க என்று போன் போட்டு என்னங்க அப்பா வந்து இருக்காங்க நமக்கு எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்லுங்க என்று போனை கொடுக்க ஆனந்தும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல மீனாட்சியின் அப்பா அம்மா நிம்மதி அடைகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial April 29th Episode

ஊட்டிவிடும் கார்த்திக்: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் தீபாவை அழைத்துக் கொண்டு வெளியே வர, ஒரு தள்ளுவண்டி கடையை பார்த்து வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட தீபா நீங்க இந்த மாதிரி கடையில எல்லாம் சாப்பிடுவீங்களா என்று கேட்க நான் அடிக்கடி இந்த கடைக்கு வந்து இருக்கேன் என்று சொல்லி தீபாவை அழைத்துச் செல்கிறான்.

கடைக்காரர் கார்த்திக்கை பார்த்ததும் வாங்க, கார்த்திக் சார் என்ன சாப்பாடு இங்க என்று கேட்க கார்த்திக் பேப்பர் ரோஸ்ட் என்று சொன்னதும் தீபாவை பார்த்து இது யாரு புதுசா இருக்காங்க என்று கேட்கிறார். அதன் பிறகு கார்த்திக் இது தீபா என்னுடைய மனைவி என அறிமுகம் செய்து வைக்கிறான். பிறகு தீபாவிடம் உங்களுக்கும் பேப்பர் ரோஸ்ட்டா என்று கேட்க அவளும் ஆமாம் என்று சொல்கிறாள். பிறகு கார்த்திக் மற்றும் தீபா இடையே யார் ஆஃபாயிலை உடைக்காமல் சாப்பிடுகிறார்கள் என்று போட்டி நடக்க தீபா எனக்கு அதெல்லாம் சாப்பிடத் தெரியாது என்று சொல்ல கார்த்திக் அவளுக்கு ஊட்டி விடுகிறான். பிறகு டைம் ஆகிவிட்டதால் ஆட்டோ கிடைக்காமல் இருக்க தீபா நடந்தே போகலாம் என்று சொல்லி கூட்டி வருகிறாள்.

குல்பி சாப்பிட ஆசைப்பட்ட தீபா: மேலும் தீபா எனக்கு குல்பி சாப்பிடணும் என்று சொல்ல குல்பி கடைக்கு கூட்டிச் செல்ல இங்கே எல்லோரும் ஜோடி ஜோடியாக வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்து தீபா புரியாமல் எதுக்கு எல்லாம் ஜோடி ஜோடியா இருக்காங்க என்று கேட்கிறாள். இதை பார்த்து அங்கே இருந்தவர்கள் சிரிக்க கடைக்காரர் என்ன சார் நீங்க சொல்றீங்களா இல்ல நான் சொல்லட்டுமா என்று கேட்க கார்த்திக் தீபாவின் காதில் எல்லாரும் லவ்வர்ஸ் என்ற விஷயத்தை சொல்கிறான்.

மீனாட்சியோடு வாழனும்: அடுத்ததாக ரியாவோட உண்மை முகத்தை வெளியே கொண்டு வரணும். ஆனந்த் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள அவ கிட்ட இருந்து விலகி வந்து மீனாட்சி அண்ணியோட சேர்ந்து வாழ்வான். அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். மேடம் கார்த்திக் உங்களோடு வந்தா ஜாலியா இருக்கு ஆனால் இப்படி இரண்டு பேரும் ஒண்ணா வெளிய வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு என பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X