கார்த்திக்கை பிரிய முடிவு செய்த ரேவதி.. மகேஷுக்கு முடிவு கட்டிய சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: ஜீ தமிழ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான கார்த்திகை தீபம் சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பல புதிய தொடர்கள் வந்துள்ளதால், தொலைக்காட்சி நிர்வாகம் சீரியலின் நேரத்தை மாற்றி உள்ளது. அந்த வகையில், இதுவரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இனி இரவு 9:15 முதல் 10 மணி வரை என 45 நிமிடங்களாக ஒளிபரப்பாக உள்ளது.
மாயாவால் கடத்தப்பட்ட ரேவதியை ரௌடிகள் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்ட நிலையில், கார்த்திக் அந்த இடத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று அவளை காப்பாற்றி விடுகிறான். இதைத்தொடர்ந்து, கார்த்திக் இதற்கு எல்லாம் காரணம் மாயா தான் என்று சொல்லியும் ரேவதி அதை நம்பால் இருக்கிறாள். இதைத் தொடர்ந்து, இதுக்கு மேல நாம இங்கே இருக்க வேண்டாம் என்று இருவரும் ஏற்காட்டில் இருந்து கிளம்பி விடுகின்றனர். கார்த்திக் மற்றும் ரேவதி ஊருக்கு வந்து சேர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மாயா செய்த வேலை: ஊருக்கு வந்ததும் கார்த்திக், ஏற்காட்டில் நாங்கள் இருந்த ஓட்டலிலேயே மாயா அறை எடுத்து தங்கி எங்களை நோட்டமிட்டு, கடைசியில் ரேவதியை ரௌடிகளை வைத்து கடத்திவிட்டாள், கடத்தியது மட்டுமில்லாமல், எனக்கே ஃபோன் செய்து, மகேஷ் வரவில்லை என்றால், ரேவதியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினாள், நல்ல வேளையாக நான் சரியான நேரத்திற்கு சென்றுவிட்டேன் இல்லை என்றால், ரேவதி நிலை என்ன ஆகி இருக்கும் என்ற சொல்ல, சாமுண்டீஸ்வரி ஆத்திரத்தின் உச்சிக்கு செல்கிறாள். சரி மாப்பிள்ளை இதைபத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கொள்கிறேன். அந்த மகேஷ் எங்கே போனானு யாருக்கு தெரியும் என்று சொல்லி சமாளிக்கிறாள்.
அதாவது ரேவதி தனது தோழிக்கு ஃபோன் செய்து வெளிநாட்டுக்கு வந்துவிடலாம் என்று இருப்பதாக சொல்ல அவள் என்னுடைய கம்பெனியில் கூட வேலை வாங்கி தரேன் ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா நீங்க வந்துட்டா 5 வருஷம் இங்க தான் இருக்க வேண்டி இருக்கும் என்று சொல்கிறாள். யோசித்துப் பார்த்த ரேவதி என்னால முடியல நான் வந்துடுறேன் என்று முடிவெடுக்கிறாள். அதைத்தொடர்ந்து கார்த்திக் மாயா வீட்டிற்கு சென்று மாயாவை பிடித்து திட்டி விடுகிறான். மகேஷ் காணவில்லை என்றால் அவன் காணாமல் போன இடத்தில் போய் தேடு.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்ன பிறகும் நீ ரேவதி மேல கை வைக்கிறது ரொம்ப தப்பு என எச்சரிக்கிறான்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரேவதி விசா ஆஃபீஸ்க்கு வருகிறாள். விசா அப்ளை செய்ய அங்கிருந்த ஆபீஸர் அவளை உற்றுப் பார்த்துவிட்டு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேள்வி கேட்க ரேவதி ஆகிவிட்டது என்று சொல்கிறாள். அப்படி என்றால் திருமண சான்றிதழ் எங்கே என்று கேட்க ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். கண்டிப்பா அதை வைக்கணுமா என்று கேட்க ஆஃபீஸர் கண்டிப்பாக வைக்க வேண்டும் என கூறுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











