அபிராமியின் கதையை முடிக்க துடிக்கும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரவுடிகள் அபிராமியை ஒரு குடோனுக்குள் அடைத்து வைக்க, இங்கே தீபா அபிராமி அத்தையை இங்கதான் பக்கத்துல எங்கயாச்சும் மறைத்து வைத்திருக்கணும் ஏதாச்சு குடோன்களில் தேடிப் பார்க்கலாம் என்று சொல்ல போலீஸ் கார்த்திக், தீபா என அனைவரும் கிளம்பி செல்கின்றனர். போலீஸ் உடன் கார்த்திக் தீபா வருவதை பார்த்த ரவுடிகள் அபிராமியை அங்கிருந்து பொருட்களை வைத்து மூடி வைக்கின்றனர். கார்த்திக் குடோனுக்குள் நுழைந்து அபிராமியை தேடி பார்க்க அங்கும் யாரும் இல்லாததால் குழப்பம் அடைகிறான்.
இந்த நேரத்தில் கண் வழிக்கும் அபிராமி கார்த்திக்கிற்கு எப்படியாவது தான் இங்கே இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் என முயற்சி செய்கிறாள். ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவள் சோர்ந்து இருந்ததால், அபிராமியால் எதுவுமே செய்யமுடியவில்லை. இதையடுத்து, அனைத்து இடத்திலும் தேடிப்பார்த்த கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வெளியே வரும்போது அபிராமி பக்கத்தில் இருந்த ஒரு பொருள் கீழே விழுகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: இதையடுத்து இன்றைய எபிசோடில், சத்தம் கேட்டு உள்ளே வரும் கார்த்திக், மீண்டும் ஆனால், அங்கே பூனை இருந்ததால், அந்த இடத்தில் இருந்து கிளப்பி விடுகிறான். இதனையடுத்து மீண்டும் பல இடங்களில் அபிராமியை தேடி பார்க்க எங்கும் கிடைக்காததால் வருத்தப்படுகிறான். தீபா ரவுடிகளை பார்த்ததால் அவரை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறான். மறுபுறம் தீபா கட்டுடன் வீட்டிற்கு வர வீட்டில் என்னாச்சு என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ரௌடிகளை அடையாளம் காட்டிய தீபா: பிறகு கார்த்திக் போலீசுடன் வீட்டிற்கு வந்து தீபா நீங்க சில ரவுடிகளை பார்த்தீங்கல அவங்களில் யாராவது இந்த லிஸ்டில் இருக்காங்களா பாருங்க என்று போலீஸ் அக்கியூஸ்ட் லிஸ்ட்டை காட்ட தீபா அதை பார்த்து சிலரை அடையாளம் காட்ட ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு அந்த தீபா உங்களை அடையாளம் காட்டிட்டா உஷாரா இருங்க என்று வார்னிங் கொடுக்கிறாள்.
அப்போது அந்த ரவுடி, கார்த்தியால் என்னை கண்டுபிடிக்கவே முடியாது, அவர் ஏற்கனவே வண்டி நம்பரை வைத்து இங்கே வந்துவிட்டார்கள். ஆனால், அவரால் அம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை, எங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை, அப்படி ஒரு திட்டம் போட்டு அபிராமியை மறைத்து விட்டேன். இனிமேல் பயப்பட வேண்டாம் மேடம் என்கிறான். இதையடுத்து ஐஸ்வர்யா ஓ அப்படியா.... சீக்கிரம் அபிராமி கதையை முடிக்க வேண்டும், இரண்டு நாள்ல அவ கதையை முடிச்சிடுங்க என்று போனை வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











