இரண்டு முறை குழந்தையை கலைத்த ரியா.. ஆனந்திற்கு தெரியவந்த உண்மை..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை அழைத்து கொண்டு வெளியே வருகிறான். இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டே வருகிறார்கள் ஒரு தள்ளுவண்டி கடையில் பேப்பர் ரோஸ்ட் வாங்கி கொடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துகிறான் கார்த்திக். இதையடுத்து, தீபா குல்பி சாப்பிட ஆசைப்பட்டதால், அவளை ஒரு கடைக்கு அழைத்து செல்கிறான், எங்கு அனைவரும் ஜோடி ஜோடியாக இருந்ததால், என்ன என்று கேட்க கார்த்திக் தீபாவின் காதில் எல்லாரும் லவ்வர்ஸ் என்ற விஷயத்தை சொல்கிறான்.

அதையடுத்து, பேசிக்கொண்டே வரும் இவர்கள், ரியாவோட உண்மை முகத்தை வெளியே கொண்டு வரணும். ஆனந்திற்கு அவளைப் பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்தால் தான் அவள் அவளை விட்டு விலகி, மீனாட்சி அண்ணியோட சேர்ந்து வாழ்வான். அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

zee tamil television Karthigai Deepam serial April 30th Episode

இரண்டுமுறை கருக்கலைப்பு: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரியாவின் கணவர் மதுவை வீட்டிற்கு வரவைத்து ஆனந்திடம் ரியா பணத்தின் மீது ஆசை கொண்டவள் என்றும், அவள் ஏற்கனவே இரண்டு முறை குழந்தையை கலைத்ததை சொல்ல வைக்கிறான். அதன் பிறகு தீபாவும் ஆமாம், மது சொல்றது எல்லாமே உண்மை தான் என்று சொல்ல ஆனந்தால் அதை முழுமையாக நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் அனைத்தையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.

வேஷம் போடும் ரியா: பிறகு மது வெளியே கிளம்பும் போது, ரியா, மதுவை பார்த்து விட ஆனந்துக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சோ என்று அதிர்ச்சி அடைகிறாள். இதனால், என்ன செய்வது என்று யோசித்து, ஆனந்திடம் வந்து தீபா தன்னை அறைந்து விட்டதாகவும், அப்போது அத்தை எதுவுமே கேட்கவில்லை என்றும் பிளேட்டை மாற்றி போடுகிறாள். இதனால் ஆனந்த் அப்படியா? நீ அவளை சும்மாவா விட்ட என்று கேட்க, ரியா வேண்டாம் நீ அவகிட்ட எதுவும் கேட்க வேண்டாம், இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டாம், பிரச்சனை வேண்டாம்னு தான் சொல்லாமல் இருந்தேன் என்று நல்லவள் வேஷம் போட்டு ஆனந்த் மனசை கலைக்கிறாள்.

ஐஸ்வர்யாவின் அடுத்த பிளான்: அதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ஆனந்தை கூப்பிட்டு கார்த்திக்கை வேலையில் இருந்து அனுப்ப என்னிடம் ஒரு வழி இருப்பதாக சொல்லி எதையோ ஒன்றை சொல்ல ஆனந்த் நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன் என்று கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X