கார்த்தி வலையில் சிக்கி ரௌடி..அபிராமி நிலை என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமியை குடோனுக்கு தேடி சென்ற கார்த்திக், அங்கு அவர் இருப்பது தெரியாமல் வந்துவிடுகிறான். இதையடுத்து, வீட்டுக்கு வரும் போலீஸ், தீபா நீங்க சில ரவுடிகளை பார்த்தீங்கல அவங்களில் யாராவது இந்த லிஸ்டில் இருக்காங்களா பாருங்க என்று போலீஸ் அக்யூஸ்ட் லிஸ்ட்டை காட்ட தீபா அதை பார்த்து சிலரை அடையாளம் காட்ட ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு அந்த தீபா உங்களை அடையாளம் காட்டிட்டா உஷாரா இருங்க என்று வார்னிங் கொடுக்கிறாள்.
அப்போது அந்த ரவுடி, கார்த்திக்கால் என்னை கண்டுபிடிக்கவே முடியாது, அவர் ஏற்கனவே வண்டி நம்பரை வைத்து இங்கே வந்துவிட்டார்கள். ஆனால், அவரால் அம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை, எங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை, அப்படி ஒரு திட்டம் போட்டு அபிராமியை மறைத்து வைத்து விட்டுவிட்டேன். இனிமேல் பயப்பட வேண்டாம் மேடம் என்கிறான். இதையடுத்து ஐஸ்வர்யா, சீக்கிரம் அபிராமி கதையை முடிக்க வேண்டும், இரண்டு நாள்ல அவ கதையை முடிச்சிடுங்க என்று போனை வைக்கிறாள் இதையடுத்து இன்று நடக்கப்போகுது என்ன என்று பார்க்கலாம்.

இதையடுத்து, இன்றைய எபிசோடில், தீபா அடையாளம் காட்டிய ரௌடி மணி வீட்டுக்கு சென்று போலீஸ் விசாரிக்க செல்ல, மணி வீட்டில் அவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக தனியாக இருக்கிறாள். கார்த்திக் அவளிடம் மணி குறித்து விசாரிக்க அவரை பத்தி தெரியாது, வாரத்தில் ஒரு நாள் தான் வீட்டிற்கு வருவார் என்று சொல்லி மழுப்புகிறாள். கார்த்திக் வீட்டில் நடந்த பிரச்சனைகள் அனைத்தையும் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கிறான். கடைசியாக அந்த பெண்மணி அவர் எங்கே இருக்காருன்னு உண்மையாகவே எனக்கு தெரியாது என்று சொல்கிறாள்.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: மேலும் அவரின் போன் நம்பர் என்கிட்ட இருக்கு, அந்த நம்பரை நான் தரேன், அனால் அவருக்கு எந்த ஆபத்தும் வராதுனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க என்று சொல்ல கார்த்திக்கும் கண்டிப்பாக உங்க கணவருக்கு எந்த ஆபத்தும் வராது என்று சத்தியம் செய்கிறான். அடுத்ததாக அந்த பெண்மணி போன் நம்பரை கொடுக்க கார்த்திக் நம்ம யாராவது பேசினால் சந்தேகம் வந்து விடும் என்பதால் அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் பெண்மணி போனில் இருந்து போன் பண்ணி நான் சொல்ற மாதிரி பேச சொல்கிறான்.
மனைவிக்கு பிரசவ வலி: அந்த பெண்மணியும் போன் பண்ண முதலில் மணி எடுக்காமல் இருக்க மீண்டும் போன் பண்ண எடுத்து பேசுகிறான். உன் பொண்டாட்டி பாக்கியத்துக்கு பிரசவவலி வந்துடுச்சி, ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கோம். ஆனால் டாக்டர் சீரியஸ்னு சொல்றாங்க. நீ கையெழுத்து போடணும்னு சொல்றாங்க. உடனே கிளம்பி வா என்று கூப்பிட மணி என்னால் இப்போ வர முடியாது என்று சொல்கிறான்.
மடக்கி பிடித்த போலீஸ்: நீ கையெழுத்து போட்டா தான் உன் பொண்டாட்டிக்கு பிரசவம் பார்ப்பங்களாம் என்று சொல்லி நம்ப வைக்க மணியும் வருவதாக சொல்கிறான். ஹாஸ்பிடலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து போலீஸ் மப்டியில் காத்திருக்க மணி ஹாஸ்ப்பிடல் வந்து மனைவி இருக்கும் ரூமுக்குள் செல்ல அவனை உள்ளே வைத்து லாக் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











