வாழ்க்கை இப்படி ஆகிபோச்சே.. கார்த்திக்கை பழிவாங்க துடிக்கும் ரேவதி.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: திருமணம் முடிந்த கார்த்திக் மற்றும் ரேவதி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, சந்திரகலா, ரேவதி உன் வாழ்க்கை இப்படி ஆகிருச்சே, நீ காதலிச்சவன் கூட கல்யாணம் நடக்கும் என்று நினைத்சே. ஆனால், அந்த டிரைவர் திட்டம் போட்டு உன்னை கல்யாணம் பண்ணிட்டான். நான் எத்தனையோ முறை அந்த டிரைவரை நம்பாதே என்று சொன்னேன் என்று சொல்கிறாள். நான, கார்த்திக் இவ்வளவு பெரிய மோசமானவனாக இருப்பான்னு எனக்கு தெரியாது என்று கண்கலங்குகிறாள். இந்த சமயத்தில் சாமுண்டீஸ்வரி உள்ளே வந்து கல்யாணமாகி, மாலையும் கழுத்துமா வீட்டிற்கு வந்திருக்க வா விளக்கேற்று என்று கூப்பிட ரேவதி முடியாது என மறுக்கிறாள். அடுத்து, சாமுண்டீஸ்வரி, அம்மா உன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான், டிரைவர் ராஜாவிற்கு கல்யாணம் பண்ணி கொடுத்தேன் என்று, எமோஷனலாக பேச ரேவதி இப்போ என்ன விளக்கேற்றனும் அவ்வளவு தானே, அதையும் செய்கிறேன் என்று சொல்லி விளக்கேற்றுகிறாள்.

மறுபக்கம் கார்த்திக், விருப்பம் இல்லாமல் ரேவதி கழுத்தில் தாலி கட்டியதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறான். ரேவதி என் மேல நம்பிக்கை வைத்து இருந்தா, அதை நான் கெடுத்துவிட்டேன் புலம்புகிறான். அப்போது, ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, சாமுண்டீஸ்வரிக்கு ஏற்கனவே மகேஷ் பற்றி தெரியும். அவ உன்னை தான் மாப்பிள்ளையாக்க போறதா சொன்னா, அதனால் தான் நான் அமைதியாக இருந்துட்டேன் என்று சொல்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக், என்ன சொல்றீங்க மாமா என்று கேட்க, ஆமாம், கார்த்திக், சாமுண்டீஸ்வரி, டிரைவர் ராஜா தான், என் மாப்பிள்ளை இதை யாருக்கும் சொல்லாதீங்க என்று சொன்னதால் நான் யாரிடமும் சொல்லவில்லை என்கிறான்.

இதனால், சாமுண்டீஸ்வரி தான் மகேஷை கடத்தி இருக்கலாம் என கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிக்க ஜோதிடர் வீட்டிற்கு வர சந்திரகலா, டிரைவர் தான் ஜோதிடரை கூட்டிட்டு வந்திருப்பதாக சொல்லி ஏற்றி ரேவதியை ஏற்றிவிடுகிறாள்.
இதனால் ரேவதி கார்த்தியிடம் சத்தம் போட சாமுண்டீஸ்வரி நான் தான் ஜோசியரை வர சொன்னேன் என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரி ஜோதிடரை நான் தான் வர சொன்னேன் என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். நான் என்ன மனநிலையில் இருக்கேனுகூட தெரிய நீங்க இப்படி செய்யலாமா.. இப்போ இதெல்லாம் தேவையா.. என கோபப்படுகிறாள். ஆனாலும் சாமுண்டீஸ்வரி ஜோதிடரை நேரம் குறிக்க சொல்லி விட்டு மயில் வாகனத்திடம் ஏற்பாடுகளை செய்ய சொல்கிறாள். மயில் வாகனம் பாட்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல பாட்டி உடனடியாக தன்னை பார்க்க வர சொல்கிறாள்.

மறுபக்கம், குழப்பத்தில் இருக்கும் கார்த்திக், மாயாவிற்கு கருக்கலைப்பு செய்த நர்ஸ்ஸை சந்திக்க யாருக்கும் தெரியாமல் செல்கிறான். அப்போது, நர்ஸ் கல்யாணம் நடந்து முடிந்து விட்டதா? உடம்பு சரியில்லாமல் போகவே என்னால் வர முடியவில்லை என சொல்கிறாள். உடனே கார்த்திக் எனக்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடந்து முடிந்த விஷயத்தை சொல்கிறான். அப்போது, ரேவதி, ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தப்பா நினைச்சு இருக்கா. உண்மை தெரிஞ்சாதான் அவளுக்கு என்ன நடந்துச்சு என்ற விவரம் தெரியும் மல்லிகா டாக்டர் எங்க மருத்துவமனையில் அதுபோல எந்த விஷயமும் நடக்கவில்லை என்று சொல்றாங்க, அவங்க ஏன் பொய் சொன்னங்க என்று தெரிய வேண்டும் என்கிறான் கார்த்திக்.

zee tamil Karthigai Deepam

கார்த்திக் பிளான்: அதன்பின், இருவரும் மல்லிகா டாக்டர் வீட்டுக்கு செல்கின்றனர். அப்போது மல்லிகா டாக்டரிடம் கார்த்திக், மாயாவை பற்றி உங்களுக்கு விஷயம் தெரிந்தும். ஏன் நீங்கள் சாமுண்டீஸ்வரி இடம் சொல்லவில்லை என்று கேட்கிறான். எங்க மருத்துவமனையில் எதுவுமே நடக்கல, நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுற கார்த்திக் என்று சமாளிக்கிறார். அப்போது மறைந்திருந்த நர்ஸ் உள்ளே வர, டாக்டர் மல்லிகாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் உண்மையை மறைக்க முடியாமல் அனைத்து விஷயங்களையும் சொல்லிவிடுகிறாள். மேலும்,மாயா மகேஷ் இவருடைய விஷயம் சாமுண்டீஸ்வரிக்கு நன்றாக தெரியும், கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே அந்த விஷயத்தை, நான் சொல்லிட்டேன் இருந்தாலும். சாமுண்டீஸ்வரி தான் இதை யார்கிட்டயும் சொல்லாதன்னு சொன்னதுனால நான் யார்கிட்டயும் சொல்லவில்லை என்கிறாள்.

zee tamil Karthigai Deepam

என்ன காரணம்: இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்தி காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வேகமாக கிளம்ப, அப்போதும் மல்லிகா டாக்டர் சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு கார்த்திக்குக்கு அனைத்து விஷயம் தெரிந்துவிட்டது என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறாள். பின் வீட்டுக்கு வரும் கார்த்திகிடம் நான் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து செல்கிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி, மாயாவிற்கும் மகேஷூக்கும் இருக்கும் கள்ளத்தொடர்பு பற்றி எனக்கு முன்னாடியே தெரியும். இருந்தாலும் நான் நீதான் என் மகளை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை செய்து வைத்தேன் என்று சொல்கிறாள். அப்போது கார்த்தி, நான் ரேவதிக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவன். இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரியும், என எனக்கு தெரிஞ்சிருந்தா நிச்சயமா நான் ரேவதி கழுத்துல தாலிய கட்டியிருக்கவே மாட்டேன், ரேவதிக்கு என்ன சுத்தமா பிடிக்கவே இல்ல. புடிக்காத கணவன் கூட, எப்படி வாழ்க்கையை நடத்துவா என்று கேட்க, சாமுண்டீஸ்வரியோ நீ நல்லவன் நிச்சயமா என் மகளை நீ நல்லா பார்த்துப்ப என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என்கிறாள்.

பரம்பரை கட்டில்: இங்கே மயில் வாகனம் பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வர அவர் பரம்பரை கட்டிலை கொடுத்து. இதில் தான் முதலிரவு நடக்கணும் என சொல்கிறார். மேலும் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சேர்த்து சுண்ட காய்ச்சிய பாலையும் கொடுத்து அனுப்புகிறார். மயில் வாகனம் கட்டிலுடன் வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி இதெல்லாம் எதுக்கு என கேட்க இது ரொம்ப பழைமை வாய்ந்த கட்டில், இதில் வாழ்க்கையை தொடங்கினா அவங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் என சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X