அபிராமி கிட்னிக்கு நடக்கும் டீலிங் .. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமியை தேடி போலீசுடன் குடோனுக்கு வந்த கார்த்திக் அபிராமியை தேடி பார்க்கிறான். அங்கு அபிராமி இல்லாத நிலையில் அங்கு இருக்கும் தடயங்களை வைத்து இப்போ தான் தப்பி சென்றிருக்கணும் என்று முடிவெடுத்து அபிராமியை தேடுகின்றனர்.
மறுபக்கம் தப்பி ஓடும் அபிராமி எதிர்பாராத விதமாக ஒரு வண்டி இடித்து விட விபத்தில் சிக்கி மயக்கம் அடைகிறாள். உடனே அங்கிருந்தவர்கள் ஒரு ஆட்டோவை மடக்கி ஹாஸ்பிடலுக்கு ஏற்றி அனுப்ப, அந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் பாட வைத்த துப்புரவு பணியாளர் பெண் ராணியின் கணவர் தான். ஆனால் அவருக்கு அபிராமியை பற்றி எதுவும் காரணத்தால் ஹாஸ்பிடலில் கொண்டு வந்து அட்மிட் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், குடோனில் அபிராமி தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்த கடிதம் குறித்து வீட்டில் சொல்கிறான். நம்ம வீட்டு பிரச்சனை நமக்கு மட்டும் தான் தெரியும், இந்த லெட்டரை வைத்து பார்க்கும் போது நம்ம குடும்பத்தில் இருக்க யாரோ ஒருவர் தான் அம்மாவை கடத்தி இருக்கணும் என்று சொல்ல ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் பதறிப்போய் நாங்க தான் பண்ணோம் என்று சொல்றியா என்று கேட்கிறான்.
அபிராமியை கடத்தியது யார்: உடனே கார்த்திக் நான் நீங்க தான் பண்ணீங்கனு நான் சொல்லலையே என்று சொல்ல நீ சொல்றத பார்த்தா எங்களை சொல்ற மாதிரி தான் இருக்கு, ஆனால் இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கின்றனர். அடுத்து கார்த்திக் இப்போ யார் கடத்தினாங்க என்பது முக்கியம் இல்ல, அம்மாவை கண்டுபிடிக்கணும் அது தான் முக்கியம் என்று சொல்கிறான்.
அடுத்து என்னவாகும்: மறுபக்கம் அபிராமி ஹாஸ்பிடலில் இருக்க டாக்டர் இவங்க சொந்தகாரங்க யாராவது வந்தார்களா என்று கேட்க யாரும் வரவில்லை என்று சொல்கின்றனர். இதனையடுத்து டாக்டர் யாரோ ஒருவருக்கு போன் போட்டு கிட்னி கேட்டு இருந்தீங்களே. இப்போ இருக்கு 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்று டீல் பேச அவர்களும் சம்மதம் சொல்கின்றனர். உடனே டாக்டர் ஒருவர் அபிராமிக்கு ஆபரேஷன் செய்து கிட்னியை எடுக்க திட்டமிட, ஒரு பக்கம், கார்த்திக் ஒரு பக்கம் என்று அபிராமியை தேடி கொண்டிருக்கும் நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











