தீபா கையில் சிக்கிய ஐஸ்வர்யா போன்.. கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரவுடிகளில் இருந்து தப்பிய அபிராமி தப்பித்து செல்லும் போது விபத்தில் சிக்கி விடுகிறாள். அபிராமி ஹாஸ்பிடலில் இருக்க டாக்டர் இவங்க சொந்தகாரங்க யாராவது வந்தார்களா என்று கேட்க யாரும் வரவில்லை என்று சொல்ல, டாக்டர் யாரோ ஒருவருக்கு போன் போட்டு கிட்னியை 20 லட்சம் ரூபாய்க்கு விற்க டீல் பேசுகிறான். இதையடுத்து, டாக்டர் அபிராமிக்கு ஆபரேஷன் செய்து கிட்னியை எடுக்க திட்டமிடுகிறான்.

மறுபக்கம், நம்ம குடும்ப விஷயம் வெளியில் இருக்கும் ரௌடிக்கு எப்படி தெரியும். இதனால், நம்ம குடும்பத்தில் இருக்கும் யாரோ தான் அம்மா வீட்டுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்று சொல்ல, ராஜேஸ்வரி பயத்தில் என்ன கார்த்திக் இப்படி சொல்றீங்க, அந்த அளவிற்கு நான் மோசமானவ இல்லை என்கிறாள். உடனே கார்த்திக் நான் நீங்க தான் பண்ணீங்கனு நான் சொல்லலையே, இப்போ யார் கடத்தினாங்க என்பது முக்கியம் இல்ல, அம்மாவை கண்டுபிடிக்கணும் அது தான் முக்கியம் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial April 6th Episode

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், தீபா, ஐஸ்வர்யா இல்லாத நேரம் பார்த்து அவளது ரூமுக்குள் நுழைந்து போனை எடுத்து ஆராய நார்மல் கால் லிஸ்டில் புது நம்பர் எதுவும் இல்லாமல் இருக்க வாட்ஸப் கால் சென்று பார்க்க புது நம்பர் இருக்கிறது. அந்த நம்பருக்கு கால் பண்ணும் பொது ஐஸ்வர்யா வந்து போனை பிடிங்கி, என் போன்ல என்ன பாக்குறீங்க, என் மேல சந்தேகப்படுறீங்களா என்று கேட்க, சந்தேகம் எல்லாம் இல்லை, நீங்க தான் அத்தையை கடத்தி இருப்பீங்க என்று மீனாட்சி உறுதியாக சொல்ல, ஐஸ்வர்யா டென்ஷனாகி அங்கிருந்து சென்று விடுகிறாள்.

மீண்டும் கடத்தல் திட்டம்: இதையடுத்து, ரவுடிகள் அபிராமியை தேடி அலைகின்றனர். ஒரு கட்டத்தில் அபிராமியை ஹாஸ்பிடலில் சேர்த்த டிரைவரின் போன் நம்பரை கண்டு பிடித்து அபிராமி என்னுடைய அம்மா தான், எந்த ஹாஸ்பிடலில் சேர்த்தீங்க என்று கேட்டு தெரிந்து கொண்டு ஹாஸ்பிடல் வந்து பார்க்கிறான், அங்கு அபிராமி மயக்கத்தில் இருப்பதை பார்த்து, நைட்டோடு நைட்டாக கடத்த பிளான் போடுகிறான்.

உண்மை தெரிந்தது: இதனையடுத்து ஆட்டோ ட்ரைவர் வீட்டிற்கு வர ராணி டல்லாக இருக்க என்னாச்சு என்று கேட்க கார்த்திக் சாரோட அம்மாவை காணோம் என்ற விஷயத்தை சொல்கிறார், இவர் சீக்கிரம் கிடைச்சிடுவாங்க என்று சொல்லி வெளியே கிளம்பும் போது நானும் ஒருத்தருக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தேன், பெரிய வீட்டு பெண்மணி போல இருந்தாங்க. நீ அவங்க போட்டோவை காட்டு என்று கேக்க ராணியும் அபிராமியின் போட்டோவை காட்ட ஆட்டோ டிரைவர் இவங்களைத் தான் நான் மருத்துவமனையில் சேர்ந்தேன் என்று சொல்கிறான்.

நல்லவள் வேஷம்: உடனே இவர்கள் இந்த விஷயத்தை சொல்ல கார்த்திக் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர், ஐஸ்வர்யா ரவுடி மணிக்கு போன் போட்டு அபிராமி குறித்து விசாரித்துக்கொண்டு இருக்க. அபிராமி இருக்கும் இடம் தெரிந்து விட்டது, நைட்டோட நைட்டா தூக்கிடுறோம் என்று சொல்கிறான். இப்படி ஐஸ்வர்யா வெளியில் நின்று பேசி கொண்டிருக்கும் நேரத்தில் ராணி தனது கணவருடன் வர, அவர்களை நிறுத்தி என்ன ஐஸ்வர்யா விசாரிக்க அபிராமி பற்றி சொல்கின்றனர். ஐஸ்வர்யா இவங்க கார்த்தியை பார்த்தா பிரச்னையாகிடும் என்று அவர்களிடம் நல்லவள் போல் பேசி அனுப்பி வைக்கிறாள்.

அடுத்து என்ன: இவர்களை வழியில் தீபாவை எதேர்ச்சையாக பார்க்க விட தீபாவிடமும் எல்லா உண்மையையும் சொல்கின்றனர். தீபா அவர்களை வீட்டிற்கு கூட்டி வந்து கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்கிறாள். ராணி முதலில் இவங்க கிட்ட தான் விஷயத்தை சொன்னோம் என்று கை காட்ட அவர்களும் ஆமாம் அதனால் தான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கோம் என்று சமாளிக்கின்றனர். உடனே கார்த்திக் மற்றும் தீபா ஹாஸ்பிடல் கிளம்பி செல்கின்றனர். ரவுடிகளும் ஹாஸ்பிடல் நோக்கி வருகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X