அபிராமியை கொல்ல துடிக்கும் ஐஸ்வர்யா..காப்பாற்றுவாரா கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமியை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ டிரைவருக்கு அவர் தான் கார்த்திக் அம்மா என்று தெரியவர, விஷயத்தை சொல்ல கார்த்திக் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். அந்த நேரம் ஐஸ்வர்யா ரவுடி மணியிடம் பேசிக்கொண்டிருக்க, ஆட்டோ டிரைவரை வழிமறித்து என்ன விஷயம் என்று நான் சொல்லிக்கொள்கிறேன் என்று அனுப்பி விடுகிறாள்.

இவர்களை வழியில் தீபாவை எதேர்ச்சையாக பார்க்க, தீபாவிடமும் எல்லா உண்மையையும் சொல்கின்றனர். தீபா அவர்களை வீட்டிற்கு கூட்டி வந்து கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்கிறாள். ராணி முதலில் இவங்க கிட்ட தான் விஷயத்தை சொன்னோம் என்று கை காட்ட அவர்களும் ஆமாம் அதனால் தான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கோம் என்று சமாளிக்கின்றனர். இதையடுத்து கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வருகின்றனர், இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial April 8th Episode

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர ரவுடிகள் அபிராமியை கடத்திக்கொண்டு ஆம்புலன்ஸில் கிளம்பி செல்கின்றனர். இதை தெரிந்து கொண்ட கார்த்திக் அதை கண்டுபிடித்து ஆம்புலன்சை பின் தொடர்ந்து செல்கிறான். வேக வேகமாக வரும் கார்த்திக் போலீஸுக்கு போன் போட்டு தகவல் கொடுக்கிறான். உடனே சுதாரித்துக்கொண்ட ரவுடிகள் ஒரு தோப்புக்குள் காரை விடுகின்றனர். மேலும் கேட் அருகே இருக்கும் வாட்ச்மேனிடம் யார் வந்து கதவை திறக்க சொன்னாலும் திறக்க கூடாது என கண்டிஷன் போட்டு உள்ளே செல்கின்றனர்.

பண்ணை வீட்டில் அபிராமி: ரவுடிகளின் காரை மிஸ் பண்ண கார்த்திக் எங்க போனாங்க என்று தெரியாமல் குழம்பி இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு இருக்கிறான். ஒரு கட்டத்தில் இந்த தோப்பை பார்த்ததும் சந்தேகம் வந்து கதவை திறக்க சொல்ல வாட்ச்மேன் கதவை திறக்க முடியாது யாரும் உள்ள போகக்கூடாது என சொல்கிறார். உடனே கார்த்திக் அவரிடம் சண்டை போட்டு காரை உள்ளே எடுத்துச் செல்ல ரவுடிகள் கார்த்திக்கை சுற்றிவளைக்க அபிராமி இருக்கும் இடம் இதுதான் என்பதை உறுதி செய்து கொள்கிறான். இதையடுத்து, ரவுடிகளிடம் கார்த்திக் சண்டையிடுகிறான்.

பதற்றத்தில் ஐஸ்வர்யா: மறுபுறம் அபிராமியை ஆம்புலன்ஸில் தூக்கி வந்த மணி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு அபிராமியை தூக்கிட்டு வந்துட்டோம் ஆனால் கார்த்திக்கும் எங்கள பார்த்து பின் தொடர்ந்து வருகிறான் எப்ப வேணாலும் இங்க வரலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா ஒன்னு பண்ணுங்க, அபிராமியை அங்கேயே விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆகிடுங்க கார்த்திக் கிட்ட மாட்டினா அவ்வளவுதான் என்று சொல்கிறாள்.

தாயை காப்பாற்றத் துடிக்கும் கார்த்திக்: ஆனால் மணி, அபிராமி என் முகத்தைப் பார்த்து இருக்காங்க, இப்படியே விட்டா அவங்க என்ன நிச்சயம் அடையாளம் காட்டிடுவாங்க அப்படி நான் மாட்டிக்கிட்டா நீங்களும் மாட்டிக்குவீங்க அதனால அவங்கள கொன்னுடுறேன் என்று சொல்ல ஐஸ்வர்யா வேண்டாம் பெரிய பிரச்சனை ஆயிடும் என்று சொல்ல மணி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் ஒரு பிரச்சனையும் வராது என்று சொல்லி போனை வைக்க ஐஸ்வர்யாவுக்கு பிபி ஏறுகிறது. இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X