முதலிரவில் ரேவதி இப்படி செய்யலாமா? மனவேதனையில் கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: ரேவதிக்கும் கார்த்திக்கிற்கும் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்க அதைப்பார்த்து ஆத்திரப்படும் சந்திரகலா, மாயாவுக்கு போன் செய்து கார்த்திக்கிற்கும் ரேவதிக்கு முதலிரவு ஏற்பாடு தடபுடலா நடந்து கொண்டு இருக்கு, அதுமட்டும் நடந்துவிட்டால் ரேவதி எந்த ஜென்மத்திலும் உனக்கு கிடைக்க மாட்டா, இப்போ கூட, அவளுக்கு மகேஷ் மீது காதல் இருக்கு அதைவெச்சி நாம அவளை நம்ம பக்கம் இழுக்க வேண்டும் என்று சொல்லி, மாயாவை ஏற்றிவிடுகிறாள்.

இதைக்கேட்ட மாயா, ஆத்திரப்பட்டு, ரேவதிக்கு போன் செய்து, மகேஷ் உன்னை காதலித்த பாவத்திற்கு இப்போ கஷ்டப்பட்டுட்டு இருக்கான். அந்த கார்த்திக் நல்லவன் போல வேஷம் போட்டு எல்லாரையும் ஏமாத்தி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான். என் கணவர் இறந்த பிறகு, எனக்கு ஆறுதலாக இருந்தது மகேஷ் தான் இப்போ அவனையும் காணும், அவனை எப்படியாவது கண்டுபிடித்து கொடுத்து விடு என்று நாடகமாடுகிறாள் மாயா. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரூமுக்குள் வரும் ரேவதி கார்த்தியிடம் என்னோட புடவை புடிச்சிருக்கா? நகைகள் பிடிச்சிருக்கா? மேக்கப் பிடிச்சிருக்கா? ஏதாவது பிடிக்கலைன்னா சொல்லுங்க மாத்திட்டு வந்திருடுறேன். இந்த வீட்டில் எல்லாம் நீங்க சொல்ற மாதிரி தானே நடக்குது என்று கோபப்படுகிறாள். கார்த்திக் ஏன் ரேவதி இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கும் இந்த கல்யாணம் நின்றதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல ரேவதி அதை ஏற்காமல், இந்த நிமிஷமே இந்த தாலிய கழட்டி போட்டுட்டு என்னால போக முடியும். ஆனா, எங்க அம்மாவோட கோபத்துக்கு ஆளாக நான் விரும்பல, அவங்களுடைய கோவம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவங்க கோவம் இந்த குடும்பத்துல நிறைய பாதிப்பை உண்டு பண்ணி இருக்கும்னு தெரியும். ஏற்கனவே அவங்க கோபத்தால் தான் எங்க அப்பா அவங்களோட குடும்பத்தை பிரிஞ்சு கஷ்டப்பட்டு இருக்காரு . திரும்பவும் அப்படி நடந்து விடக்கூடாது தான் எல்லாத்தையும் நான் பொறுத்துக்கிட்டு இருக்கேன்.

zee tamil Karthigai Deepam

ரேவதி முதலிரவில் செய்த வேலை: ஆனா அம்மாவுக்காக இவ எல்லாத்தையும் பொறுத்துப்பான்னு தப்பு கணக்கு போட்டுக்கிட்டு, என்கிட்ட நெருங்கின நான் உயிரோடவே இருக்க மாட்டேன். என்று சொல்லிவிட்டு கீழே போயை போட்டு விட்டு, நான் தரையில் படுத்து கொள்கிறேன். இப்போ நீங்க இந்த வீட்டோட டிரைவர் கிடையாது எங்க வீட்டோட மாப்பிள்ளை, நீங்களா கட்டில் படுத்துக்கிட்டா தான் சரியாக இருக்கும் என்று சொல்கிறாள். ரேவதியின் பேச்சை கேட்டு கார்த்திக் மிகவும் மனம் உடைந்து போகிறான். அடுத்த நாள் காலையில் தான் ஆசைப்பட்ட மாதிரியே ரோஹிணியுடன் நெருக்கமாக இருந்த சந்தோசத்துடன் மயில்வாகனம் வெளியே வருகிறான். அதே போல் ராஜராஜனும் சந்தோசமாக வெளியே வர மயில்வாகனம் என்ன மாமா ரொம்ப சந்தோசமா வரீங்க என்று கலாய்க்கிறான்.

இதை தொடர்ந்து, கார்த்திக் இன்ஸ்பெக்டர் ஒருவரை சந்தித்து மகேஷை கண்டு பிடிக்கணும், அவன் வந்தா தான் ரேவதிக்கு என்னை பற்றி புரிய வைக்க முடியும் என பேசுகிறான். இன்னொரு பக்கம் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து பேச மாயாவிடம் மகேஷ் காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X