உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி.. பறிதவித்துப்போன கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், மருத்துவமனையில் இருந்து அபிராமியை கடத்திக்கொண்டு ஆம்புலன்ஸில் செல்ல,. இதை தெரிந்து கொண்ட கார்த்திக் ஆம்புலன்சை பின் தொடர்ந்து செல்கிறான். இதை தெரிந்து கொண்ட ரவுடிகள் ஒரு தோப்புக்குள் காரை விடுகின்றனர். ரவுடிகளின் காரை மிஸ் பண்ண கார்த்திக் எங்க போனாங்க என்று தெரியாமல் குழம்பி இருக்க, ஒரு கட்டத்தில் இந்த தோப்பை பார்த்ததும் சந்தேகம் வர வாட்ச்மேனை அடித்துவிட்டு செல்கிறான்.

ரவுடிக்கு போன் செய்யும் ஐஸ்வர்யா, கார்த்திக் உங்களை சும்மா விடமாட்டான், அபிராமியை அங்கேயே விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆகிடுங்க என்று சொல்ல, ரவுடி மணி, அபிராமி என் முகத்தைப் பார்த்து இருக்காங்க, இப்படியே விட்டா அவங்க என்ன நிச்சயம் அடையாளம் காட்டிடுவாங்க அப்படி நான் மாட்டிக்கிட்டா நீங்களும் மாட்டிக்குவீங்க அதனால அவங்கள கொன்னுடுறேன் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial April 9th Episode

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் ரவுடிகளிடம் சண்டையிட்டு கொண்டிருக்க மறுபக்கம் ரவுடி மணியும் அவனது ஆட்களும் சேர்ந்து அபிராமியை உயிரோட புதைக்கின்றனர். இதனையடுத்து கார்த்திக் தன்னுடன் சண்டை போட்ட ரவுடிகளை அடித்து உள்ளே நுழைய மணியும் அவனது ஆட்களும் எதிரில் வருகின்றனர்.

அவர்களை பிடித்து எங்க அம்மா எங்கடா என்று கேட்க எங்களுக்கு தெரியாது என்று உண்மையை மறைக்கின்றனர். இதே சமயத்தில் கார்த்திக் அனுப்பிய லொகேஷனை வைத்து போலீஸ் அந்த தோப்பிற்கு வந்துவிட, மணியையும் ரவுடிகளையும் மொத்தமாக கைது செய்துவிடுகின்றனர்.

உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி: ஆனால், அபிராமி இருக்கும் இடம் தெரியாததால், பதற்றத்தில் இருக்கும் கார்த்திக், அம்மா இந்த தோப்புக்குள் தான் எங்கேயோ இருக்கிறார்கள் என்று சந்தேகம் அடைகிறான். இதனால் உள்ளே சென்று அபிராமியை தொடங்குகிறான். பல இடத்தில் தேடியும் அபிராமி கிடைக்காததால், அழுதுக்கொண்டு இருந்த கார்த்திக்கின் கண்ணில், மண் வெட்டி, மண் குவியல் தென்பட, இதையெல்லாம் பார்த்து சந்தேகப்பட்டு அந்த இடத்தை தோண்ட அங்கு அபிராமி உயிரோடு புதைக்கப்பட்டு இருக்கிறாள்.

இதையடுத்து, மிகுந்த போராட்டத்திற்கு பிறகு, அபிராமியை வெளியே எடுக்கிறான். ஆனால், அபிராமி மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் அம்மாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலில் ஓடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X