நான் கர்ப்பமா இருக்கிறேனா? தப்பு தப்பா எதுவும் சொல்லாதீங்க.. கார்த்திகை தீபம் அர்த்திகா பதில்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கார்த்திகை தீபம் சீரியலில் முக்கியமான ரோலில்,கார்த்திக் மற்றும் அர்த்திகா நடித்து வந்தனர். இதில் இன்றில் இருந்து கார்த்திகை தீபம் சீசன் 2 புதிய கோணத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசன் இரண்டில் இருந்து அர்த்திகா நீக்கப்பட்டது குறித்து பரவி வரும் பல வதந்திகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து இந்த சீரியல் தான், டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் அர்த்திகாவின் காதல் காட்சி, இருவரின் ஜோடி பொருத்தம் என அனைத்துமே நன்றாக இருக்கும். மக்களின் மனதை வென்ற இந்த சீரியலில் தீபா, கீதா என இரண்டு ரோலில் நடித்து வந்தார் அர்த்திகா. இதில், சனிக்கிழமை அர்த்திகா இறந்துவிட்டதாக காட்டப்பட்டு சீரியல் முடிக்கப்பட்டு, கிராமத்து கதைக்களத்துடன் புது சீரியல் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

கார்த்திகை தீபம் சீசன் 2: இதில், தீபா இறந்ததால் மன வேதனையில் இருக்கும் கார்த்திக்கை அவரது அம்மா, தாத்தா பாட்டி ஊருக்கு அனுப்பி வைப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசன் 2ல் அனைத்து நடிகர்களும் இருக்க அர்த்திகா மட்டும் நீக்கப்பட்டுள்ளார். அவர் கார்ப்பமாக இருப்பதாகவும், ரொமான்ஸ் காட்சியில் நடிக்க மறுத்ததால் நீக்கப்பட்டதாக செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அர்த்திகா, கார்த்திகை தீபம் சீரியல் தீபா கதாபாத்திரம் இறந்துவிடும் என்று ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும், அப்போது நான் இயக்குநரிடம் தீபா ரோல் தான் இந்த சீரியலில் மெயின் ரோல் வேண்டும் என்றால் கீதாவை சாகும் படி காட்சியை மாற்றிவிடுங்கள் என்று சொன்னேன். ஆனால், இயக்குநர் முடிவு எடுத்த பிறகு நான் சொல்லி என்ன ஆகப்போகிறது.
அர்த்திகா பேட்டி: ஆனால், இணையத்தில் நான் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க ஒத்துழைக்காததால் நீக்கிவிட்டதாக தப்பு தப்பாக எழுதி வருகிறார்கள். அதில் உண்மை இல்லை, நடிக்க வந்துவிட்டால் இயக்குநர் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும். அதை செய்ய மாட்டேன், இதை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது. எல்லாம் தெரிந்து தான் நடிக்க வந்தேன். அதே போல கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. அப்படி எதுவும் இல்லை, அப்படி நான் கர்ப்பமானால் நிச்சயம் உங்களிடம் தான் முதலில் சொல்லுவேன். நான் தற்போது நன்றாக இருக்கிறேன் தயவு செய்து தப்பு தப்பான வதந்திகளை பரப்பாதீர்கள் என்ன அர்த்திகா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











