ரம்யாவை காதல் டார்ச்சர் செய்து வெறுப்பேத்தும் ரமேஷ்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: தீபாவின் தாலிக்கு ஆசைப்படும் ரம்யா, கோவிலில் அபிராமியின் பையை திருடிக்கொண்டு சென்று விட்டு வீட்டில் வைத்துவிடுகிறாள். இதையடுத்து, ரம்யாவிற்கு கால் செய்யும் கார்த்திக் கோவிலுக்கு சீக்கிரம் வாங்க என்று கூப்பிட அவளும் வந்துவிடுகிறாள். இதையடுத்து. கார்த்திக், ரம்யாவிடம் நீங்க எங்கேயும் போகாமல் அம்மாவுடன் இருங்க, தாலி காணாமல் போனதால், ரொம்ப பயந்து போய் இருக்காங்க. நான் போய் கண்டு பிடித்து கொண்டு வரேன் என்று சொல்ல ரம்யா அதிர்ச்சி அடைகிறாள்.

அந்த பையில், கார்த்திக் அந்த பேக்கில் தாலி மட்டும் இல்ல அம்மாவோட போனும் இருக்கு, போலீசில் சொல்லி மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து கண்டு பிடித்து விடுவேன் என்று சொல்ல ரம்யா பயந்து போய் மீண்டும் வீட்டுக்கு போய் அந்த தாலியை எடுத்து வந்து நைசா கொடுத்து விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், வீட்டில் அனைவரும் கல்யாணத்திற்கு புடவை தேர்வு செய்து கொண்டு இருக்கின்றனர். அப்போது அபிராமி அனைவருக்கும் ஒரு கேம் என்று உங்களுக்கு பிடிச்சி இருக்கும் கலரை, உங்க புருஷன் சரியாக சொல்கிறார்களா என்று பார்க்கலாம் என்று சொல்கிறாள். இதையடுத்து, ஐஸ்வர்யா, அருணுக்கு வீடியோ கால் செய்து, இதில் எனக்கு எந்த கலர் புடிக்கும் என்று கேட்க, அருண் உனக்கு எதுபுடிச்சி இருக்கோ அதை எடுத்துக்கொள், அதெல்லாம் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான்.

ஏமாந்த தீபா: இதையடுத்து, தீபா எனக்கு ப்ளு கலர் தான் பிடிக்கும், கார்த்திற்கும் அதே கலர் தான் சொல்லுவாரு பாருங்க என்று சொல்லி, கார்த்திக்கிற்கு வீடியோ கால் செய்கிறாள். மனதிற்குள் ப்ளு கலர்னு சொல்லுங்க என்று தீபா சொல்லிக்கொண்டு இருக்க, கார்த்திக் வேண்டும் என்றே வேறு ஒரு நிறத்தை சொல்லிவிடுகிறான். இதனால், அங்கு இருந்த அனைவரும் என்ன பல்ப் வாங்குனியா என்று கேட்டு சிரிக்க, தீபா ஏமாற்றம் அடைகிறாள். இதையடுத்து, வீட்டிற்கு வரும் கார்த்திக், தீபா வீடியோ காலில் காட்டிய அந்த ப்ளூ கலர் புடவை வாங்கி வந்து கொடுத்து அவளை சப்ரைஸ் செய்து தீபா மீது இருக்கும் காதலை வெளிப்படுத்துகிறான்.

லவ் டார்ச்சர்: மறுபக்கம், ரமேஷ் வேண்டும் என்றே ரம்யாவிற்கு காதல் டார்ச்சர் கொடுத்து வருகிறான். வீட்டிற்கு வரும் ரமேஷ், ரம்யாவின் அப்பாவிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து கடுப்பாகிறாள். இதையடுத்து ரமேசை தனியாக அழைத்து இங்கே எதுக்கு வந்த,உன்னை பிடிக்கலனுதானே சொன்னேன் என்று திட்டுகிறாள். அப்போது, உனக்கு பிடிக்கவில்லை என்றாள் என்ன, எனக்கு உன்னை ரொம்ப பிடித்து இருக்கு, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னைத்தான் செய்து கொள்வேன் என்று காதல் வசனம் பேசி ரம்யா கடுப்பாக்குகிறான். இதையடுத்து, என்ன நடக்கப்பேகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X