திருமணத்தை நிறுத்த சபதம் எடுத்த ரியா.. தீபா கழுத்தில் தாலி ஏறுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: தீபா எனக்கு ப்ளு கலர் தான் பிடிக்கும், கார்த்திக்கும் அதே கலர் தான் சொல்லுவாரு பாருங்க என்று சொல்லி, கார்த்திக்கிற்கு வீடியோ கால் செய்கிறாள். மனதிற்குள் ப்ளு கலர்னு சொல்லுங்க என்று தீபா சொல்லிக்கொண்டு இருக்க, அங்கு ரம்யா இருந்ததால், கார்த்திக் வேண்டும் என்றே வேறு ஒரு நிறத்தை சொல்லிவிடுகிறான். இதனால், அங்கு இருந்த அனைவரும் என்ன பல்பு வாங்குனியா என்று கேட்டு சிரிக்க, தீபா ஏமாற்றம் அடைகிறாள்.
மறுபக்கம், ரமேஷ் வேண்டும் என்றே ரம்யாவிற்கு காதல் டார்ச்சர் கொடுத்து வருகிறான். வீட்டிற்கு வரும் ரமேஷ், ரம்யாவின் அப்பாவிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து கடுப்பாகிறாள். இதையடுத்து ரமேஷை தனியாக அழைத்து இங்கே எதுக்கு வந்த, உன்னை பிடிக்கலைனுதானே சொன்னேன் என்று திட்டுகிறாள். அப்போது, உனக்கு பிடிக்கவில்லை என்றாள் என்ன, எனக்கு உன்னை ரொம்ப பிடித்து இருக்கு, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னைத்தான் செய்து கொள்வேன் என்று காதல் வசனம் பேச ரம்யா கடுப்பாகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், முகூர்த்தப் புடவையை எடுத்துக்கொண்டு தீபா, மைதிலி இருவரும் அர்ச்சனை செய்துவிட்டு வரலாம் என்று கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது, அங்கு வரும் ரியா, என்னை இப்படி ஆனந்த் கூட இருந்து பிரிச்சிவைத்து விட்டு நீங்க, சந்தோஷமா கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்றீங்களா, உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா, எத்தனை வாட்டி கல்யாணம் பண்ணுவீங்க, இந்த கல்யாணம் எப்படி நடிக்கிறது என்று நான் பார்க்கிறேன். இந்த கல்யாணத்த நான் நடக்க விட மாட்டேன் என்று சபதம் எடுக்கிறாள்.
புடவையை திருடிய திருடன்: இதை தொடர்ந்து, தீபா மற்றும் மைதிலி இருவரும் கோவிலில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்க, எங்கிருந்தோ ஓடி வந்த திருடன் திடீரென தீபா கையில் இருந்த முகூர்த்தப் புடவையை பறித்துக்கொண்டு ஓடுகிறான். அந்த திருடனை தீபாவும், மைதிலியும் துரத்திக்கொண்டு ஓட அவன் ஏதோ ஒரு சந்துக்குள் ஓடிவிடுகிறான். இதனால், சோகமடைந்த தீபா, என்ன மைதிலி இப்படி ஆகிவிட்டது அத்தை கேட்டா நான் என்ன சொல்வது என்று கேட்க, நாம என்ன பண்றது தீபா, அதுல நிறைய பணம் இருக்கும்னு திருடன் எடுத்துக்கொண்டு போய்ட்டான் சரி கவலைப்படாதே வீட்டுக்கு போகலாம் என்று செல்கின்றனர்.
கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ்: இதையடுத்து தீபா, வீட்டில் புடவை காணாமல் போனதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு வரும் கார்த்திக், தீபாவிடம் ஒரு பையை கொடுத்துவிட்டு செல்கிறான். அந்த பையில், தீபா ஆசைப்பட்ட அந்த நீல நிற புடவை இருக்கிறது. அதைப்பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











