ரம்யா செய்யும் தீச்சட்டி பரிகாரம்.. பழிவாங்கும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: நேற்றைய எபிசோடில், முகூர்த்தப் புடவையை எடுத்துக்கொண்டு தீபா, மைதிலி இருவரும் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்து கொண்டு இருந்த போது, எங்கிருந்தோ ஓடி வந்த திருடன் திடீரென தீபா கையில் இருந்த முகூர்த்தப் புடவையை திருடிவிட்டு போய்விட தீபா மிகவும் வருத்தப்படுகிறாள்.
இதையடுத்து, தீபா, புடவை காணாமல் போனதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு வரும் கார்த்திக், தீபாவிடம் ஒரு பையை கொடுத்துவிட்டு செல்கிறான். அந்த பையில், தீபா ஆசைப்பட்ட அந்த நீல நிற புடவை இருக்கிறது. அதைப்பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறாள். இதையடுத்த இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக், தனக்கு பிடித்த நீல நிற புடவை வாங்கி வந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, எப்படி எனக்கு இந்த கலர் பிடிக்கும் என்று தெரியும், அப்போ என்னை நீங்க லவ் பண்ணீங்களா என்று கேட்க, அதெல்லாம் இல்லை, நீங்க வீடியோ கால் பண்ணும் போது நான் கார் ஓட்டிக்கிட்டு இருந்தேன், அதனால் சரியாக பார்க்க முடியவில்லை. நீங்க புடவை காணவில்லை என்று வருத்தப்பட்டதால் வாங்கிக்கொண்டு வந்தேன் என்று சொல்லி வெறுப்பேத்துகிறான் கார்த்திக்.
கடுப்பான ரம்யா: இதையடுத்து, மகிழ்ச்சியில் இருக்கும் தீபா, வீட்டில் இருக்கும் அபிராமி, ஐஸ்வர்யா, மைதிலியிடம் புடவையை காட்டி பாத்தியா, என் புருஷன் கார்த்திக், எனக்கு புடிச்ச கலர் புடவையை வாங்கி வந்து இருக்கிறார் என்று காட்டுகிறாள். உடனே, அந்த திருடன் புடவையை திருடியதும் நல்லதா போச்சு இல்லனா, நீ ஆசைப் பட்ட புடவையை என் மகன் வாங்கி கொடுத்து இருப்பானா என்று சொல்லி, தீபா உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் என்கிறாள். இதையடுத்து, ரம்யாவிற்கு போன் செய்யும் தீபா, கார்த்திக் புடவை வாங்கி கொடுத்த விஷயத்தை சொல்ல அவள் டென்ஷன் ஆகிறாள். இவள் புடவை காணும் என்று அழுவா என்று பார்த்தா, கார்த்திக் வேற புடவை வாங்கி தரானா…என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருக்கிறாள்.
பரிகாரம் செய்ய வேண்டும்: மறுபக்கம், ரம்யாவிற்கு போன் செய்யும் ரமேஷ் கோவிலுக்கு வர சொல்கிறான். உடனே ரம்யா நீ கூப்பிட்டா நான் கோவிலுக்கு வர வேண்டுமா என்னால வர முடியாது என்று சொல்ல, நீ இங்க வந்தா ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லுவேன் என்று ரமேஷ் சொன்னதும், ரம்யா கிளப்பி கோவிலுக்கு செல்கிறாள். இவளுக்காக கோவிலில் காத்திருந்த ரமேஷ், நான் ஒரு ஜோசியரை பார்த்தேன் அவர் நம்ம கல்யாணத்தில் பல பிரச்சனை வரும் என்று சொல்லி இருக்கிறார். இதனால், நீ பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான்.
பழிவாங்கும் கார்த்திக்: உடனே ரம்யா, கல்யாணத்தில் பிரச்சனை வரும் என்று எனக்குத்தான் நல்லாவே தெரியுமே, அதெல்லாம் பரிகாரம் செய்ய முடியாது என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது, அங்கு அபிராமி வந்து, என்ன ரம்யா, தீபா, கார்த்திக் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று, தீ சட்டி எடுப்பதாக ரமேஷ் சொன்னார். ஏம்மா இதெல்லாம் செய்ற என்று அபிராமி சொல்ல, வேறு வழியே இல்லாமல் தீ சட்டி எடுக்கிறாள். இந்த திட்டத்தின் மூலம் கார்த்திக்கும் ரமேஷூம் சேர்ந்து கொண்டு ரம்யாவை பழிவாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











