ரம்யாவை காதலிக்கும் ரமேஷ்.. ஐஸ்வர்யாவிற்கு தெரியவந்த உண்மை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், முக்கியமான விஷயம் என்று ரம்யாவை ரமேஷ் கோவிலுக்கு அழைத்து, நம்ம கல்யாணத்தில் பல பிரச்சனை வரும் என்று ஜோசியர் சொல்லி இருக்கிறார். இதனால், நீ பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். உடனே ரம்யா, கல்யாணத்தில் பிரச்சனை வரும் என்று எனக்கு நல்லாவே தெரியுமே, அதெல்லாம் பரிகாரம் செய்ய முடியாது என்று சொல்கிறாள்.
அந்த நேரத்தில் அபிராமி அங்கு வந்து, என்ன ரம்யா, தீபா, கார்த்திக் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று, தீ சட்டி எடுப்பதாக ரமேஷ் சொன்னார். ஏம்மா இதெல்லாம் செய்ற என்று அபிராமி சொல்ல, வேறு வழியே இல்லாமல் அங்கப்பிரதக்ஷனம் செய்து தீ சட்டி எடுக்கிறாள். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரம்யா கோவிலில் அபிராமி இருப்பதால் கோபத்தை காட்ட முடியாமல் அனைத்து பரிகாரத்தையும் செய்து முடித்துவிட்டு கோவிலை சுற்றி வருகிறாள். அப்போது அங்கிருக்கும் அனைவரும், ரமேஷ், ரம்யாவை பார்த்து அப்படியே சூர்யா, ஜோதிகா போலவே இருக்கீங்க என்று பாராட்டுகின்றனர். அதே போல் அய்யர் அப்படியே சிவன் பார்வதி போலவே இருக்கீங்க இரண்டு பேருக்கும் நல்ல பொருத்தமாக இருக்கு, இப்படி ஒரு பையன் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று சொல்ல ரம்யா கடுப்பாகிறாள்.
எல்லாம் ரமேஷின் வேலை: இதைத்தொடர்ந்து, கடைசியாக ரமேஷ் கோவிலுக்கு வெளியே வந்து சூர்யா, ஜோதிகானு பாராட்டியவர்களுக்கு பணத்தை கொடுக்க இது மொத்தமும் அவனோட செட்டப் என்பது ரம்யாவிற்கு தெரிய வர, இது எல்லாம் உன் வேலையா என்று கேட்க, ஆமாம், ரம்யா நீ இருக்கும் அழகுக்கு யாரும் நம்மை அப்படி பாராட்ட மாட்டார்கள். இதனால் தான் காசு கொடுத்து அப்படி சொல்ல சொன்னேன் என்று சொல்கிறான் ரமேஷ். இதையடுத்து, ரம்யா அட்ச்சீ என்று கோவிலில் இருந்து கிளம்பி விடுகிறாள்.
கனவு காணும் ரம்யா: அதன் பிறகு அபிராமி வீட்டில், தீபாவை உட்கார வைத்து நலங்கு வைகின்றனர், வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா, மீனாட்சி, ரம்யா என அனைவரும் நலங்கு வைத்து கொண்டு இருக்கின்றனர். கடைசியில், அபிராமி எல்லாரையும் விட யார் நலங்கு வச்சா தீபா சந்தோசப்படுவானு எனக்கு நல்லாத் தெரியும் என்று சொல்லி கார்த்திக்கை கூப்பிட்டு நலங்கு வைக்க சொல்ல இதை பார்த்து ரம்யா டென்ஷனாகிறாள். அதோடு, தனக்கு கார்த்திக் நலங்கு வைத்து விடுவதை போலவும் கனவு கண்டுவிட்டு, கடவுளே இந்த கனவை எப்படியாவது நிஜமாக்கிவிடு என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு இருக்கிறாள்.
உண்மையாக காதலிக்கிறேன்: அந்த நேரம் பார்த்து ரமேஷ் வர, எனக்கும் ரம்யாவிற்கும் தான் கல்யாணம் ஆகப்போகுது கார்த்திக் சார் தீபாவுக்கு நலங்கு வைத்தது போல ரம்யாவுக்கு நான் நலங்கு வைக்கணும் என்று சொல்ல ரம்யா அதெல்லாம் வேண்டாம், முடியாது என்று சொல்ல,கட்டிக்கப் போகிறவன் ஆசைப்படுறான், அவனும் வைக்கட்டும் என்று அபிராமி சொல்ல, ரமேஷ் ரம்யாவிற்கு நலங்கு வைத்து விடுகிறாள். இதைத்தொடர்ந்து, கார்த்திக் ரமேஷை தனியாக கூப்பிட்டு நீ பண்றதெல்லாம் பார்த்தால் நடிக்கிற மாதிரி தெரியலையே என்று கேட்க, எனக்கு உண்மையாகவே ரம்யாவை பிடித்திருப்பதாக சொல்கிறான். ரம்யா திமிர் பிடிச்சவ தான், ஆனால், உங்க கல்யாணத்திற்கு அப்புறம் நான் கொஞ்சம் கொஞ்சமா அவளை மாற்றிவிடுவேன் என்கிறான்.
அதிர்ச்சியில் ரம்யா: ஆனால் கார்த்திக், ரம்யா அப்பா கேட்டுக்கிட்டதால் தான் உன்னை கூட்டிட்டு வந்தேன், உனக்கு நம்பிக்கை இருந்தால் சரி என்று சொல்கிறான். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை, ஐஸ்வர்யா ஒட்டு கேட்டு விடுகிறாள். இதெல்லாம் கார்த்திக்கோட பிளான் என்பதை தெரிந்து கொள்கிறாள். இதை எப்படியாவது ரம்யாவிடம் போட்டு கொடுக்க முடிவெடுத்து, ரம்யாவிடம் அனைத்து உண்மையையும் சொல்லி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











