கார்த்திக்கை அடைய அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !
சென்னை: நேற்றைய எபிசோடில், ரமேஷ் ரம்யாவிற்கு நலங்கு வைத்து விடுகிறாள். இதைப்பார்த்த, கார்த்திக், ரமேஷை தனியாக கூப்பிட்டு நீ பண்றதெல்லாம் பார்த்தால் நடிக்கிற மாதிரி தெரியலையே என்று கேட்க, எனக்கு உண்மையாகவே ரம்யாவை பிடித்திருப்பதாக சொல்கிறான். ரம்யா திமிர் பிடிச்சவ தான், ஆனால், உங்க கல்யாணத்திற்கு அப்புறம் நான் கொஞ்சம் கொஞ்சமா அவளை மாற்றிவிடுவேன் என்கிறான்.
அப்போது கார்த்திக், ரம்யா அப்பா கேட்டுக்கிட்டதால் தான் உன்னை கூட்டிட்டு வந்தேன், உனக்கு நம்பிக்கை இருந்தால் சரி என்று சொல்கிறான். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை, ஐஸ்வர்யா ஒட்டு கேட்டு விடுகிறாள். இதெல்லாம் கார்த்தியோட பிளான் என்பதை தெரிந்து கொள்கிறாள்.இதை எப்படியாவது ரம்யாவிடம் போட்டு கொடுக்க முடிவெடுத்து, ரம்யாவின் அனைத்து உண்மையையும் சொல்லி விடுகிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்ப்போம்.

கார்த்திகை தீபம்:: அதாவது, ஐஸ்வர்யா ரம்யாவை சந்தித்து ரமேஷ் குறித்த உண்மையை உடைக்க அனைத்தையும் சொன்னதும், ரம்யா அதிர்ச்சி அடைகிறாள், இதுக்கெல்லாம் நீங்க தான் காரணமா அப்பா என்று கோபம் கொள்கிறாள். அதனை தொடர்ந்து நேராக வீட்டிற்கு வந்த ரம்யா தனது அப்பாவுக்கு ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்து என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே பா.. நான் கார்த்தியை அடையாமல் விட மாட்டேன், அதற்கு யார் தடையா இருந்தாலும் சும்மா விட மாட்டேன் என்று வன்மத்தை கொட்டுகிறாள். ஜூஸை குடித்த அவளது அப்பா சரிந்து விழுகிறார்
.தீபாவை சும்மாவிட மாட்டேன்: இதன் தொடர்ச்சியாக இன்னொரு பக்கம் புதிய ஐஸ்வர்யா காட்டப்படுகிறார். இதை தொடர்ந்து ரூபாஸ்ரீ வீடு காட்டப்படுகிறது. இந்த வீட்டில் கோகிலா ரூமுக்குள் அடைந்து கொண்டிருக்கும் ரூபஸ்ரீயை வெளியே கூப்பிடுகிறாள். வெளியே வந்த அவள் இந்த தீபாவால் எல்லாரும் என்னை டூப்ளிகேட் ரூபாஸ்ரீனு கூப்பிடுறாங்க, என் மரியாதையே போய்டுச்சு.. அந்த தீபாவை சும்மா விட மாட்டேன் என்று ஆவேசப்படுகிறாள்.
புது வில்லி: இந்த நேரத்தில் அங்கு என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா தீபாவுக்கு கல்யாணம் என்று சொல்ல கோகிலாவும் ரூபாஸ்ரீயும் குழப்பம் அடைய தீபா தாலியை கழட்டியதையும் அபிராமி மீண்டும் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் விஷயத்தையும் சொல்லி தீபாவுக்கு எதிராக சதி செய்ய ரூபஸ்ரீயையும் தன்னுடன் கூட்டு சேர்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











