தீபாவாக மாறும் ரம்யா.. மணமேடையில் நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கோகிலா ரூமுக்குள் அடைந்து கொண்டிருக்கும் ரூபஸ்ரீயை வெளியே கூப்பிடுகிறாள். வெளியே வந்த அவள் இந்த தீபாவால் எல்லாரும் என்னை டூப்ளிகேட் ரூபாஸ்ரீனு கூப்பிடுறாங்க, என் மரியாதையே போய்டுச்சு.. அந்த தீபாவை சும்மா விட மாட்டேன் என்று ஆவேசப்படுகிறாள்.
இந்த நேரத்தில் அங்கு என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா தீபாவுக்கு கல்யாணம் என்று சொல்ல கோகிலாவும் ரூபாஸ்ரீயும் குழப்பம் அடைய தீபா தாலியை கழட்டியதையும் அபிராமி மீண்டும் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் விஷயத்தையும் சொல்லி தீபாவுக்கு எதிராக சதி செய்ய ரூபஸ்ரீயையும் தன்னுடன் கூட்டு சேர்க்கிறாள், ஐஸ்வர்யா இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமி வீட்டில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அபிராமி ரம்யாவிடம் நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதான் என்னை காப்பாத்துறதுக்காக உன் உயிரையே பணயம் வச்சி பரிகாரம் செய்து இருக்க அதை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன் எனறு, தீபாவிற்கு செய்வது போல, ரம்யாவிற்கு கல்யாண சடங்குகள் நடக்கின்றன.
ரியா கொடுத்த ஐடியா: சடங்குகள் முடிந்த பிறகு ரம்யா, ரியா வீட்டுக்கு வருகிறாள். அங்கு ஒருவர் உட்கார்ந்து இருக்க யாரென்று கேட்க இவர் ஒரு பெரிய மேக்கப் ஆர்டிஸ்ட் என்று அறிமுகம் செய்கிறாள். இவர் கையில ஒரு வித்தை இருக்கு என்று சொல்லி ரூமுக்கு சென்று ஒரு மாஸ்க்கை அணிந்து நடந்து வர அப்படியே தீபா வருவது போலவே இருக்கிறது. உடல் தோற்றம் ரியாவாக இருந்தாலும் முகத்தோற்றம் அச்சு அசலாக அப்படியே தீபா போலவே இருக்கிறது. இதைப்பார்த்து ரம்யா ஆச்சரியப்படுகிறாள்.
ஆள்மாறாட்டம்: கார்த்திக் உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு இதுதான், இப்போதைக்கு ஒரே வழி என்று சொல்கிறாள். உடனே ரம்யா, ஐடியா நல்லாத்தான் இருக்கு ஆனால், கார்த்திக்கை ஏமாற்றுவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. கார்த்திக் எப்பவுமே உஷாரா இருப்பாரு என்றாள். ஆமாம் நீ சொல்லுவது சரி தான் ஆனால், உன் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்றால், இது தான் சரியான ஐடியா என்று ரியா சொல்ல, ரம்யாவும் இந்த திட்டத்திற்கு சம்மதிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











