தீபாவுக்கு எதிராக கூட்டு சேரும் 4 வில்லிகள்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ரம்யா, ரியா வீட்டுக்கு வருகிறாள். அங்கு ஒருவர் உட்கார்ந்து இருக்க யாரென்று கேட்க இவர் ஒரு பெரிய மேக்கப் ஆர்டிஸ்ட் என்று அறிமுகம் செய்கிறாள். இவர் கையில ஒரு வித்தை இருக்கு என்று சொல்லி ரூமுக்கு சென்று ஒரு மாஸ்க்கை அணிந்து நடந்து வர அப்படியே தீபா வருவது போலவே இருக்கிறது. உடல் தோற்றம் ரியாவாக இருந்தாலும் முகத்தோற்றம் அச்சு அசலாக அப்படியே தீபா போலவே இருக்கிறது.
கார்த்திக் உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு, இப்போதைக்கு ஒரே வழி என்று சொல்கிறாள். உடனே ரம்யா, ஐடியா நல்லாத்தான் இருக்கு ஆனால், கார்த்திக்கை ஏமாற்றுவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்கிறார். இதைத் தொடர்ந்து, இது தான் சரியான ஐடியா என்று ரியா சொல்ல, ரம்யாவும் இந்த திட்டத்திற்கு சம்பாதிக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், மண்டபத்தில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க அங்கு வந்த ரூபாஸ்ரீ, நான் திருந்தி விட்டேன் என்று மனமுருகி மன்னிப்பு கேட்பது போல் நடிக்க தீபாவும் அதை நம்பி அவளை மன்னித்து தோழியாக ஏற்று கொள்கிறாள். அதன் பிறகு ஐஸ்வர்யா மற்றும் ரூபாஸ்ரீ என இருவரும் மண்டபத்திற்கு வெளியே கோகிலாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், கோகிலா வேறு மாதிரி கெட்டப் போட்டு முகத்தை மறைத்தபடி மண்டபத்திற்குள் நுழைகிறாள்.
திருமண ஏற்பாடுகள் ரெடி: இவளை பார்த்த அருணாச்சலம் நீ என் கூட காலேஜுல் படித்த ரேகா தானே என்று கேட்க கோகிலா இவரிடம் இருந்து தப்பிக்க ஆமாம் என்று பொய் சொல்ல அருணாச்சலம் சந்தோசப்படுகிறார். அடுத்து ரம்யா மண்டபத்திற்கு வந்து இறங்குகிறாள். வெளியே கார்த்திக் வெட்ஸ் தீபா என்று வைத்திருக்கும் பேனரில் ரம்யா என பெயர் இருப்பது போல் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டுக்கொணடு உள்ளே நுழைகிறாள்.
சந்தேகப்படும் கார்த்திக்: கார்த்தியிடம் நல்லவள் போல் பேச கார்த்திக் ரம்யா மீது சந்தேகப்பட்டு அவளது அப்பாவுக்கு போன் செய்ய அவர் விஷம் குடித்ததால் மயங்கி கிடக்கிறார். இதனால் கார்த்திக் ஏன் போன் எடுக்க மாட்றாரு என யோசிக்கிறாள். அடுத்து ரம்யாவை பார்த்த மைதிலி மற்றும் மீனாட்சி அவள் மீது சந்தேகப்பட்டு அவளை கோர்த்து விட ரமேஷுக்கு போன் செய்து மண்டபத்திற்கு வர சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











