இதுதான் காசு வைத்து சூனியம் வைத்துக்கொள்வதா? வசமாக மாட்டிய ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், மண்டபத்தில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க அங்கு வந்த ரூபாஸ்ரீ, நான் திருந்தி விட்டேன் என்று மனமுருகி மன்னிப்பு கேட்பது போல் நடிக்க தீபாவும் அதை நம்பி அவளை மன்னித்து தோழியாக ஏற்று கொள்கிறாள். அதன் பிறகு ஐஸ்வர்யா மற்றும் ரூபாஸ்ரீ என இருவரும் மண்டபத்திற்கு வெளியே கோகிலாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், கோகிலா வேறு மாதிரி கெட்டப் போட்டு முகத்தை மறைத்தபடி மண்டபத்திற்குள் நுழைகிறாள்
அடுத்து ரம்யா மண்டபத்திற்கு வந்து இறங்குகிறாள். வெளியே கார்த்திக் வெட்ஸ் தீபா என்று வைத்திருக்கும் பேனரில் ரம்யா என பெயர் இருப்பது போல் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறாள். இவள் வந்ததை பார்த்த மீனாட்சி மற்றும் மைதிலி ரமேஷ்க்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியல், ரமேஷ் என் ஆளு தனியா இருக்கா என்று சொல்லி மண்டபத்திற்கு வந்து ரம்யாவை சந்தித்து பேசி அவளை கடுப்பாக்குகிறான். இந்த கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கல்யாணம் தான் என பேசிக்கொண்டு இருக்க ரம்யா, மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டு இருக்கிறாள்.
பல்பு வாங்கிய தீபா: மறு பக்கம், தீபா சவால் விட்டபடி கார்த்திக் தனது மனதில் இருக்கும் காதலை சொல்ல வைக்க முயற்சி செய்கிறாள். மைதிலி கார்த்திக்கை கட்டிப்பிடி என்று சொல்ல தீபாவும் அவனை கட்டி பிடிக்க செல்ல கார்த்திக் விலகி சென்று விட இந்த முயற்சி தோல்வி அடைகிறது. அதை தொடர்ந்து மீனாட்சி கரண்ட் ஷாக் அடிப்பது போல நடி கார்த்திக் உனக்கு முதலுதவி தருவதற்காக முத்தம் கொடுப்பான் என்று ஐடியா கொடுக்க தீபாவும் கார்த்திக் ரூமுக்கு சென்று துணியை அயர்ன் பண்ணுவது போல ஆக்சன் செய்து கரண்ட் ஷாக் அடிப்பது போல மயங்கி விழுகிறாள்.
கண்டுகொள்ளாத கார்த்திக்: ஆனால் தீபாவின் நடிப்பை புரிந்து கொண்ட கார்த்திக் அவளை கண்டு கொள்ளாமல் ரூமை விட்டு வெளியே வந்து விடுகிறான். வெளியே வந்தும் தீபா மயங்கி கிடப்பது போலவே நடிக்க கார்த்திக் தண்ணீர் அடித்து சென்று தவித்து அவளை எழுப்பி உங்களோட பிளான் எனக்கு புரிஞ்சு போச்சு என்று சொல்கிறான். தீபாவும் உங்களை காதலை சொல்ல வைக்கத்தான் இப்படி முயற்சி செய்தேன் என்று சொல்லி பல்பு வாங்குகிறாள்.
கடைசியில் இப்படி ஆகிபோச்சு: அடுத்து ரூபஸ்ரீ அஞ்சு கொலை ஆறுமுகத்தை கூப்பிட்டு இவ தான் தீபா இவளை போட்டு தள்ளனும் என்று தீபாவை கை காட்ட அந்த சமயம் பார்த்து ரம்யா அங்கு வந்து நிற்க ரவுடி ரம்யாவை தான் கொலை செய்ய வேண்டும் என நினைத்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











